பட்டி மன்றம் - 11

அனைவருக்கும் வணக்கம். ஒரு வழியாக அடுத்த பட்டி மன்றம் ஆரம்பிக்க படுகிறது. இதற்கு நான்தான் நடுவர் என்று தாமரை அவர்களின் செல்ல மகன் சீட்டு குலுக்கி தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். அதற்கு அடி பணிந்து இதோ நான்!

இந்த பட்டி மன்றத்துக்கு நான் தேர்ந்தெடுத்த தலைப்பு வனிதா அவர்கள் கொடுத்த தலைப்பில் இருந்து கிடைத்த ஒரு inspiration!

"பெண்கள் உண்மையிலேயே முன்னேறி இருக்கிறார்களா அல்லது முன்னேறி இருக்கிறோம் என்ற ஒரு மாயையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களா"

இந்த தலைப்பில் பெண்கள் என்று குறிப்பிடுவதில் வயது வரம்பு இல்லை. 5 வயது குழந்தையில் இருந்து 90 வயதான முதியவருக்கும் பொருந்தும். முன்னேற்றம் என்பது பெரிய வேலையில் இருப்பவர் மட்டும் என்பதும் இல்லை. எல்லாவிதமான சமூக முன்னேற்றத்தையும்தான் குறிப்பிடுகிறேன்.

இதில் கடந்து சென்ற பட்டி மன்றங்களை போலவே தான் விதி முறைகளும். தனியாக ஒரு மதத்தினரையோ தனி மனிதரையோ புண்படுத்த கூடாது. எல்லார் கருத்துக்கும் மதிப்பு கொடுங்கள். எவருடைய கருத்தும் கேலிக்குரியவை இல்லை. சுதந்திரமாக ஆனால் அளவு மீறாமல் வாதிடுங்கள்.

இதற்கு முன்னால் கலந்து கொள்ள தயங்கிய அனைத்து சகோதர சகோதரிகளையும் அழைக்கிறேன். எல்லாரும் வாருங்கள் அனல் பறக்க பேசுங்கள் (எங்கள் சிட்னி மாநகரத்தின் வெய்யில் போலவே) :)

இதன் முடிவு வரும் ஞாயிரு அதாவது 11 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

எல்லாருக்கும் என் நன்றி :)

அன்புடன்
உமா

அனைவருக்கும் வணக்கம்.உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
பெண்கள் உண்மையிலேயே முன்னேறி இருக்கிறார்கள் என்ற தலைப்பில் வாதாடும் அணியில் என்னை சேர்த்துக்கொள்ளுங்கள்.சில பல கருத்துக்களோடு வந்து தொடர்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆகா பட்டி மன்றம் தலைப்பு ஆரம்பித்து விடுவதற்க்கு முன் வரனும் என்று இருந்தேன்,நடுவரே ஏன் பட்டி மன்றம் 1 என்று போடறீங்க?பட்டி மன்ற தலைப்பையே அங்கு போடலாம் தானே?

அனைவரும் வந்த பிறகு வாதத்தில் கலந்து கொள்கிறேன்,
நடுவராக பொறுப்பு ஏற்க்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நடுவர் அவர்களுக்கும்,வாதாடப்போகும் அனைத்து தோழிகளுக்கும்,அறுசுவை நேயர்களுக்கும் மீண்டும் வணக்கம்.
அந்தக்காலம் தொட்டு இந்தக்காலம் வரை பெண்கள் முன்னேறி வருகிறார்கள் என்பதில் ஐயமில்லை.அன்றே பாரதி சொன்னான்,”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்,
மண்ணுக்குள்ளே சில மூடர் மாதறிவைக்கெடுத்தார்”
’மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்.எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளப்பில்லை காண்’என்ற வரிகள் விழிப்புணர்வை ஊட்டின. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்வி பயில பெண்களை அனைவரும் அனுப்பி வைத்தனர்.பெண்கள் வீட்டுச்சிறையில் இருந்து விடுதலை பெற்று ஆர்வமுடன் கற்க முன்வந்தனர்.இது அவர்கள் முன்னேறுவதற்கு ஆரம்பமாக அமைந்தது.
உலகெங்கும் பெண்களுக்கென்று தனிப்பள்ளிகள் தொடங்கப்பட்டன,நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாய் கற்போர் எண்ணிக்கை பெருகத்தொடங்கியது.கல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள் பல்கிப்பெருகி பெண்கல்வி வளர துணை புரிந்தன.மாணவிகள் மாணவர்களுடன் சேர்ந்து பயிலும் மனவுறுதி பெற்றனர்.இவை யாவும் உலகறிந்த உண்மை,இதுவே முதல் சான்று,பெண்கள் முன்னேறியதற்கு.இன்னும் வருவேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தங்கள் வரவேற்பிற்கு நன்றி :) அழகாக வாதத்தை தொடங்கி இருக்கிறீர்கள்.
** ’மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்.எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளப்பில்லை காண்’என்ற வரிகள் விழிப்புணர்வை ஊட்டின.** அழகான வரிகள். :)

எதிர் தரப்பில் என்ன சொல்ல போகிறார்கள் என்று பார்ப்போம். நிறைய பதிவுகள் போடுவீர்கள் என்று எதிர்பார்கிறேன்.

அன்புடன்
உமா

உங்கள் வாழ்த்துக்கு நன்றி :)

தலைப்பில் இந்த டாபிக் இணைக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அப்படி பெரிய தலைப்பாகி விட்டால் எதோ பிரச்னை என்று அட்மின் அவர்கள் முதலில் கூறி இருந்தார்கள். அதுதான் போடவில்லை.

அன்புடன்
உமா

பட்டி மன்றம் தூங்குகின்றது!! அனைவரும் வாருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள்! பாவம் ஆசியா தனியாக இருக்கிறார்கள். நியாயமா மக்களே??

தங்கள் வரவை ஆவலுடன் எதிர் நோக்கும்

உமா

நடுவர் அவர்களே... வந்துவிட்டேன். :) அனைவருக்கும் வணக்கம். பெண்கள் இன்னும் முன்னேரவில்லை என்று வாதாடவே வந்திருக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எது முன்னேற்றம்?! வேலைக்கு போவதா?! எழுத படிக்க தெரிவதா?! வெளிநாடுகள் செல்வதா?! என்னை பொருத்தவரை இது எதுவும் பெண்ணின் முன்னேற்றத்தை சொல்லாது, என்று பெண் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரம் பெருகிறாளோ அன்றே அவள் முன்னேறியாதாக சொல்ல முடியும். ஒரு நாடு முன்னேற அது சுதந்திரமாக இருக்க வேண்டும், ஒரு பெண் முன்னேரவும் சுதந்திரம் அவசியம். அது இன்றும் நம் சமுதாயத்தில் நடை முறையில் இல்லை... அப்படி இருக்க, முன்னேற்றம் எங்கே?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம்....பெண்கள் இன்னும் முன்னேறவில்லை......முழுமையான சுதந்திரம் அடையவில்லை என்பதுவே என்னுடைய கருத்து...பிறப்பிலிருந்து இறப்பு வரை அடக்கப்பட்டும்,ஒடுக்கப்பட்டும்,வாழுகிறாள்...

nanriyudan

விஜி ....பெண்கள் இன்னும் முன்னேறவில்லை......முழுமையான சுதந்திரம் அடையவில்லை பிறப்பிலிருந்து இறப்பு வரை அடக்கப்பட்டும்,ஒடுக்கப்பட்டும்
,வாழுகிறாள்...
இது எங்கோ எப்பொழுதோ நடக்கலாம்.அதனை மீடியாவும் பெரிது படுத்தி காட்டுகிறார்கள்.உண்மையில் பெண்கள் முன்னேறி தான் இருக்கிறார்கள்.இன்று நம் நாட்டின் ஜனாதிபதியே ஒரு பெண்தான்,இதை விட உதாரணம் வேண்டுமா?பெண்கள் முன்னேறிய துறையை அடுக்கினால் இந்த பதிவு போதாது,அத்தனை துறைகள்,ஒரு இந்திரா காந்தி,கல்பனா சாவ்லா,பாத்திமா பீவி,கிரண் பேடி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இவர்கள் எல்லாம் முன்னேறிய லிஸ்டில் இல்லையா?
இன்றைய தலைமுறையினர் பெற்றோரும் சரி,தன் மகள்வெளி உலகம் தெரிந்து வெற்றி நடை போட வேண்டும் என்றே விரும்புகின்றனர்.இளைஞர்களும் சரி தனக்கு வரப்போகும் மனைவி படித்த வேலைக்குப்போகும் முன்னேறிய பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.எல்லாம் மாயை என்றால் எங்கும் ,எதிலும் பெண்கள் என்பது என்ன?பதில் சொல்லுங்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்