Geetha madem....

உங்கள் குறிப்புகள் மிகவும் அருமை... உங்கள் குறிப்பில் எனக்கு ஒரு சந்தேகம்.. கேட்கலாமா?

எந்த கீதாவை கூப்பிடுறிங்க? கேளுங்க எல்லோரும் பதில் சொல்லுவங்க

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.. உங்களை தான் குறிப்பிட்டேன்... தேங்காய் பாலில் தான் சந்தேகம்... தேங்காய் பால் சாப்பிடால் வாய் புண் மற்றும் வயிற்று புண் சீக்கிரம் குணமடையும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்...எவ்வளவு நாள் , எவ்வளவு தடவை சாப்பிட வேண்டும் என்று கூறவும்.. நன்றி...

சாரி பா, ப்ரியா. இங்கு நிறைய பேர் கீதா என்று பெயரில் இருங்கின்றார்கள்.என்னை எல்லோரும் கீதா ஆச்சல் என்று கூப்பிடுவதால் ஒரு குழப்பம். தப்பா நினைத்து கொள்ள வேண்டாம்.
ஆமாம் தேங்காய் பால் சாப்பிட்டால் வாய் புண் குறைந்து விடும். இது அனுபவத்தில் கண்ட உண்மை. தினமும் இரண்டி தடவை 1 – 2 தம்பளர் (தேங்காய் முதல் பால் அல்லது இரண்டாம் பால்)குடித்தால் வாய் புண் இரண்டு முன்று நாளில் சுத்தமாக குறைந்துவிடும்.
ஒரு வேண்டுகோள். உங்களுக்கு எதவது சந்தோசம் என்றால் அந்த அந்த குறிப்பின் கீழேயே கேள்வியை கேட்கலாம்.நன்றி

அன்புடன்,
கீதா ஆச்சல்

தவறாக நினைக்கவில்லை... பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி... வாய் புண்னிற்கு ok... வ்யிற்று புண்னிற்கு எப்படி சாப்பிடவேண்டும்? இதற்க்கும் ஒரு பதில் கூறவும்... இனிமேல் சந்தேகம் என்றால் அந்த குறிப்பின் கிழ் கேட்டுவிடுகிறென்... Thanks a lot geetha achal...

Hello geetha achal waiting for ur answer...

இப்படியே சாப்பிடலாம். கசாகசா பாலும் சாப்பிடலாம்.என்னுடைய குறிப்பில் அது இருக்கின்றது. இளநீர் நிறைய குடிக்கவும்.

பிரியா வாய் புண்ணுக்கு தேங்காய் பால் ரொம்ப நல்லது அதை அப்படியே குடிக்க முடியாது.
ஆப்பம், இடியாப்பம் போன்றவற்றில் ஊற்றி சாப்பிடனும்.
தேங்காய் பத்தையை வாயில் போட்டு மென்று அந்த சாற்றை முழுங்கனும்.
தேங்காய் பால் ரசம் வரித்து சாப்பிடலாம்.
ஜவ்வரிசி கஞ்சி, பாயாசம் போன்றவை செய்து சாப்பிடலாம்.
கச கசா பால் நல்லது அத்வும் ரொம்ப குடிக்க கூடாது.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்