நான் ஊருக்கு கிளப்புகிறேனுங்கோ!!!

ஹாய் டியர் பிரண்ட்ஸ் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்..என்னால் அனைத்து தோழிகள்,அக்காமார்களுக்கும் தனிதனியாக மெயில் போட முடிய வில்லை அதனால் இதன் மூலம் எல்லோருக்கும் சொல்லி கொள்கிறேன்..

வருகின்ற 21 ஆம் தேதி டெலிவரிக்காக ஊர் செல்ல இருக்கின்றேன்..திரும்பி வர 2 அல்லது 3 மாசம் ஆகும்...(அதுவரை அனைவரும் நிம்மதியாக இருக்கலாம்)என்பதை தெரிவித்து கொ(ல்)ள்கின்றேன்...

அன்புடன்

உங்கள் மர்ழியா..

மரிழி வாழ்த்துகள்..தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் நல்ல படியா போயிட்டு வாங்க...மரியம் நலமா?.

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மர்ழியா நலமா?மரியம் எப்படி இருக்கா?நல்லபடியாக ஊருக்கு போயிட்டு வாங்க.டெலிவரி கஷ்டமில்லாமல் இருக்கும்,நீங்க இல்லாம நிச்சயம் அறுசுவை போரடிக்கும்,யாரு எங்களை சிரிக்க வைப்பாங்க?உங்கள் வருகைக்காக காத்திருப்போம்....

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நல்லபடியாக போய்விட்டு வாங்க.தாயும் பிள்ளையுமாக திரும்பி வந்து அறுசுவையில் கலந்துக்கோங்க.

டியர் மர்ழி நல்ல படியா குழந்தை பெற்றுக்கொண்டு,வாருங்கள்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஹி ஹி திட்டாதீங்கப்பா எனக்கு புரோட்டக்கு தொட்டுக்க வெஜ்ஜில் சிம்பிள் சைடிஷ் வேணும் கொஞ்சம் ஐடியா பிளீஸ்..அரட்டை திரடை தேட முடியல கையில் கிடைத்ததை போட்டுட்டேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நல்லபடியாக குழந்தை பெற்று வர நல்லாசிகள். என் குறிப்பில் சப்பாத்தி பூரிக்கு சிம்பிள் சைட் டிஷ் இருக்கிறது. பரோட்டாவுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

ரேணுகா - காமெடிக்கு ஆள் தயாராகி விட்டாங்க.
"அறுசுவை ஆங்கில தளத்தில் பங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க" த்ரெட்டுக்குப்போங்க.

அன்புடன்
ஜெயந்தி மாமி

hello jayanthi mami
ihave recently joined arusuvai club can u pls tell me hw to make rasam podi
thanks

மர்ழியா,
ஊருக்குப் போறீங்களா? நலமே குழந்தைபெற்று விரைவில் திரும்பி வந்து எம்மோடு கதைக்க வேணும் என்று வாழ்த்துகிறேன்.

குழந்தை கிடைத்ததும் எப்படியாவது அறுசுவையில் அறியப்படுத்துங்கள். நாங்கள் கொஞ்ச நாளைக்கு உங்களை மிஸ் பண்ணப்போகிறோம். என்பது வருத்தமாக இருக்கிறது.

மணிசாரா ஊருக்குப் போயிருந்தீங்களா? எங்கே காணவில்லையே என யோசித்தேன்...

ஜெயந்திமாமியைப் பாருங்கோ காமெடி என்றதும் ஓட்டோடி வந்திட்டா.... மாமி நான் கண்டுபிடிச்சிட்டேன்.:)
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நல்லபடியாக குழந்தை பெற்று வர வாழ்த்துக்கள் :) குழந்தை பிறந்ததும் எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.

அன்புடன்
உமா

நல்லப் படியாக குழந்தை பெற்றெடுக்க என் வாழ்த்துக்கள்.சீக்கிரம் வந்து எங்களோடு கலந்துக்குங்க.உங்களை ரொம்ப மிஸ்பண்றோம்ப்பா.

அதென்ன **நான் ஊருக்கு கிளப்புகிறேனுங்கோ** யாரை ஊருக்கு கிளப்புகிறீங்க.நல்லவேளை நம்ம கவி.எஸ் இல்லைஇருந்தால் உங்களை ஒரு வழிப்பண்ணிருப்பாங்க.

மேலும் சில பதிவுகள்