நான் ஊருக்கு கிளப்புகிறேனுங்கோ!!!

ஹாய் டியர் பிரண்ட்ஸ் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்..என்னால் அனைத்து தோழிகள்,அக்காமார்களுக்கும் தனிதனியாக மெயில் போட முடிய வில்லை அதனால் இதன் மூலம் எல்லோருக்கும் சொல்லி கொள்கிறேன்..

வருகின்ற 21 ஆம் தேதி டெலிவரிக்காக ஊர் செல்ல இருக்கின்றேன்..திரும்பி வர 2 அல்லது 3 மாசம் ஆகும்...(அதுவரை அனைவரும் நிம்மதியாக இருக்கலாம்)என்பதை தெரிவித்து கொ(ல்)ள்கின்றேன்...

அன்புடன்

உங்கள் மர்ழியா..

சீதா ஆச்சல் எப்படி இருக்கீங்க நலமா உங்க சுட்டி எப்படி இருக்கா?என் பொண்ணு நல்லா இருக்கா உங்க வாழ்த்துக்கு தேங்ஸ்மா

ஆசியா உமர் எபப்டி இருக்கீங்க?இன்சால்லாஹ் துஆ செய்யுங்க நல்ல முறையில் டெலிவரி ஆக குறைவில்லாத குழந்தை வர..

சபீனா நான் சென்னையில் இருக்கேமா நீங்க?

ஹாய் அரசி வ அலைக்குமுஸ்ஸலாம்..துஆ கேட்காமல் இருப்பேனா இன்னும் என் கண்ணில் இருக்கான் உங்க அழகு மகன் மாசால்லாஹ்..நீங்க நலமா?போன் போடுங்க என்னிடம் உங்க நம்பர் இல்லை..

டிய தாஜ் வ அலைக்குச்ஸலாம் உங்க துஆக்கு தேங்ஸ்..ஓதுகிறேன் ..

என்ன சந்தோ சிறிது நாளாக காணல?சந்தோஷ் எப்படி இருக்கார்?குழந்தை பிறந்ததும் நிச்சயம் செய்திகள் வரும் நான் சொல்லனும்னே தேவை இல்லை நிச்சயம் யாராவது பதிவு போடுவாங்க :)

மனிசாரா எபப்டி இருக்கீங்க ரொம்ப நாள் ஆகிர்ரு உங்களிடம் பேசி நலமா இருக்கீங்களா?பிரியானதும் மெயில் கொடுங்க உங்க வாழ்த்துக்கு நன்ரிமா

ஹா ஹா ஹா ஹாசினி எபப்டி இருக்கீங்க உங்க சுட்டி நலமா?உங்க வாழ்த்துக்கு தேங்ஸ்மா
ரேனு ரொம்ப சந்தோசம் வந்ததும் யாரப்பான்னு கேட்காமல் இருந்தால் சரி :) உங்க பதிவு உணமையில் மனசை கவர்ந்துட்டு தேங்ஸ்மா

பாரதி உங்க அன்பான வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி :)

ஜெயா என்ன ரொம்ப அரட்டை போல என்னால் வர முடியவில்லை உங்க வாழ்த்துக்கு தேங்ஸ்

ஜெ.மாமி உங்க வாழ்த்துக்கும் நன்றி மாமி பதிவை பார்த்து உடனே போனில் ரெஸிபியை சொன்னதுக்கும் நன்றிகள் பல..அது என்ன மாமி நான் பார்கலயே என்ன காமெடி நடக்குது?

அதிரா நன்றிமா..நிச்சயம் குழந்தை பிறந்ததும் தெரிய படுத்துகிறேன் :)

உமா எபப்டி இருக்கீங்க?உங்க அன்பான பதிவிற்க்கும்,வாழ்த்தியமைக்கும் நன்றி..

மேனு ரொம்ப நக்கல் ம்ம் சரி பொலச்சு போங்க நா அம்மாவா இருங்க வாரேன் அம்மா எப்படி அடிப்பாங்கன்னு காட்ட
உங்க வாழ்த்துக்கு நன்றி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஸாரி மர்லி சும்மா உங்கல கலாய்ச்சேன்பா.ஊர் போரீங்கலா மர்லி. நல்லபடியா பெற்றெடுத்து தாயும் சேயும் நலமாக இருக்க எல்லாம் வல்ல நாயன் துணை புறிவானாக.ஆமீன்

ஹாய் சித்தி

சலாம் அதெல்லாம் கோபம் பட மாட்டேன்..உங்க அன்பான துஆக்கு தேங்ஸ்மா

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா நல்லபடியா ஊருக்கு போய் குழந்தை பெற்று வர என்வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்
அன்புடன் பிரதீபா

மர்ழியா நல்லபடியா குழந்தை பெற்று வர என் வாழ்த்துக்கள்
சரி குழந்தை பெற்ற பிறகு சாப்பிடும் பிரசவலெகியம் எப்படி செய்வது பற்றி யாரும் சொல்லவெ இல்லையெ?
radika

ஹாய் மர்ழியா நல்ல படியா குழ்ந்தை பெற்று ஆரோக்கியமா நீங்கள் இருவரும் இருக்க வேண்டும் என்ரு கடவுளை வேண்டிக் கொள்கிரேன்

அன்புடன்
துஷி

மர்லியா ஊருக்கு போறீங்களா?
நல்ல படியா போய் வாங்க.
நல்ல படியாக குழந்தை பெற்று சுகமாய் வர தூவா செய்கிறேன்.

பிரசவ லேகியம் //காயம் மருந்தா// கேட்கிறீகள் அது குறிப்பு வேணுமா?

ஜலீலா

Jaleelakamal

மர்ழியா...!! பத்திரமா ஊருக்கு போய்வாங்க. ட்ரையினில்தானே போகிறீர்கள். லோயர் பர்த் - தானே ? குழந்தை பிறந்தவுடன் நாங்க எல்லோரும் வாழ்த்த மறுபடியும் வருகிறோம். சந்தோஷமா போயிட்டு வாங்க. இரண்டாவது டெலிவரி பொதுவாக ஈஸியாகத்தான் இருக்கும்.

lovelyமர்ளிமா எப்படி இருக்கீறீர்கள்
நல்லபடியாக போய் சுகமாய் பிரசவித்து
சொக்கத்தங்கமாய் சுடர்விடும்
மலரென்னும் மழழையை
மகிழ்ச்சியுடன் பெற்றெடுக்க
வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
கவலைப்படாமல் கலகலப்புடன் சென்றுவரவும்
அன்புடன் மலிக்கா

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

மர்ழியா,

நல்லபடியாக ஊருக்குப் போய்ட்டு வாங்க, தாயும் சேயும் நல்லபடியாக ஆரோக்கியமாக இருக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மரியம்கிட்ட எங்க எல்லோருடைய அன்பையும் தெரிவியுங்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்