5 மாத குழந்தை தூக்கம்

அன்பு தோழிகளே...என் 5 மாத பையன் தூங்க வைக்க ஹெல்ப் பன்னுங்க பிளீஸ். இரவில் 8 மணிக்கு படுத்தால் நள்ளிரவு 2 / 3 மணி வரை தூங்குகிரன்..அதன் பின் அவன் நெளிந்துகிட்டே இருக்கான். தாய்பால் தான் கொடுக்கிறேன்...நிரய்ய நாள் காலையில் இன்னும் தூக்கம் ulladhu pola ..காலையில் அவன் தெளிவாக எழும்புவது இல்லை...அப்புறம் சற்று விளயாடி தூஙக வைப்பேன்.அவன் pacifier..வைத்தாலோ அல்லது தாய்ப்பால் கொடுத்தலோ தான் உறங்குகிறான் தோளிலே போட்டும்,பாட்டு போட்டும்..பார்த்தச்சு...மதியமும் இதே கதை தான்..காலையில் அவனுக்கு rice cereal கொடுக்க ஆரம்பித்துள்ளேன்...நான் US il உள்ளேன்.எனக்கு அம்மா இல்லை..அத்தைக்கும் தெரியவில்லை...ஹெல்ப் பிளீஸ்..

எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க..கொஞ்சம் கவனிச்சு பார்த்தால் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிடும் ஏன் தூக்கம் வரலனு..சரி இதுக்கு முன்னால நிறைய பேர் நீங்க கேட்ட இதே கேள்விய கேட்டு இருக்காங்க...அவங்களுக்கு நம்ம தோழிகள் சொன்ன பதில நான் தரேன்..

1.சாயந்தரம் நல்லா அசந்து தூங்குறானா பாருங்க..அப்படி தூங்கினால் நைட் கொஞ்சம் தூக்கம் குறையலாம்..
2.நீங்க கொடுக்கிற தாய்பாலாகட்டும்,rice cereal எதுவும் வயித்துக்கு போதுமானதா இருக்கா பாருங்க, இல்ல அதுனால வயித்துல ஏதாவது பிரச்சனை (கேஸ் ட்ரபுல்,வயிற்று வலி)இருக்கா பாருங்க..
3.நீங்க டயஃபர் போடுறீங்களா? அது ஈரமாக இருக்கா பாருங்க,இல்ல அடிக்கடி மாத்துங்க..
4.நீங்க போடுற டயஃபர் சரியான அளவா? குழந்தையோட உடம்புல இறுக்காமல் இருக்கா?
5.டயஃபர் பழக்கம் இல்லையென்றால் போட்டு பாருங்க..
6.நீங்க எங்க இருக்கீங்கனு தெரியல, முடிந்தால் சாயங்காலம் நல்ல இளஞ்சூடான தண்ணீருல குளிக்க வைங்க..முடியலனா நல்ல ஹாட் வாட்டர்ல உடம்பு முழுவதும் துடைச்சு விடுங்க..
7.குழந்தைக்கு சூடு பிடிச்சிருக்கா?ஒன் பாத்ரூம் நல்லா போறானா பாருங்க, சூடா போறானா பாருங்க..
8.குழந்தைக்கு பேபி ஆயில் வச்சு நல்லா மசாஜ் பண்ணி குளிக்க வைங்க..
9.ரொம்ப நேரம் கீழயும் போடாதீங்க, கைலயும் வச்சிருக்காதீங்க..
10.கடைசியா தொட்டில் கட்டி தூங்க வச்சு பாருங்க..

இது எல்லாம் ட்ரை பண்ணி பாருங்க பா..சீக்கிரம் உங்க குழந்தை நல்லா தூங்கி ஆரோக்கியமா இருக்க நான் கடவுள வேண்டிக்கிறேன்..

ஒரு வயசு போல மாறிடுவார் பாருங்க..எழுந்து நடக்க தொடங்கிட்டா டயர்ட் ஆகியே தூங்கும்..நல்ல ஓட விடலாம் அப்ப.
பின்னெ ஆயில் மசாஜ் செய்யுங்க நல்ல தூங்கும்..இரவில் விழித்தால் பாட்டிலில் தண்ணி கொடுங்க..பால் கொடுப்பதை மெல்ல படிப்படியா நிறுத்தினா தூங்கும்.புரியாட்டா கூட நல்ல ஸ்டோரி புக் படிசோ அல்லது உங்க மதப்படி ஸ்லோகம் அது மாதிரி எடுவாவது நல்ல மெல்லிய குரலில் குழந்தை விரும்பும்படியா பாடி சொல்லலாம்..அது கேட்டு கூட தூங்கும்.
லைட்டை போடவே போடாதீங்க.கொஞ்சம் பெரிசானா நீங்களே கொஞ்சம் சமாளிக்க பழகிடுவீங்க அவரும் தூங்க பழகிடுவார்

thanks for the immiediate reply pa...will try...udane badhil alitha thozhigaluku nanRi...

மேலும் சில பதிவுகள்