காஃபி கேக்

தேதி: January 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு- 250 கிராம்
முட்டை-4
பொடித்த சீனி- 250 கிராம்
வெண்ணெய்- 250 கிராம்
பேக்கிங் பவுடர்- 2 டீஸ்பூன்
இன்ஸ்டண்ட் காஃபி பவுடர்- 2 மேசைக்கரண்டி
சூடான நீர்- 5 மேசைக்கரண்டி
காஃபி எஸென்ஸ்- 2 டீஸ்பூன்


 

காஃபி பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலந்து ஆற வைக்கவும்.
மைதாவையும் பேக்கிங் பெளடரையும் 3 முறை சலித்துக் கொள்ளவும்.
மிருதுவான வெண்ணெயையும் பொடித்த சீனியையும் நன்கு அடித்துக் கொள்ளவும்.
பின் ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து நன்கு அடிக்கவும்.
மைதா கலவையையும் காஃபி கலவையையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக்கொண்டே அடிக்கவும் அல்லது ஒரு ஸ்பாட்டுலாவால் நன்கு கலக்கவும். இறுதியாக எஸென்ஸைக் கலக்கவும்.
160 டிகிரி C-யில் 25 -35 நிமிடங்கள் பேக் செய்யவும்.
ஆறியதும் துண்டுகள் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோ மேடம்,
காஃபி எஸ்சென்ஸ் என்றால் என்ன?

காஃபி கேக் நன்றாக வந்தது. டேஸ்ட் நன்றாக இருந்தது. நான் காஃபி எஸன்ஸ் சேர்க்காமல் செய்தேன்.
காஃபி கலவை சேர்த்தேன்,ஆனால் எஸன்ஸ் இல்லாமல் செய்தேன். நன்றி.

காஃபி கேக் நன்றாக வந்தது என்ற உங்களின் அன்பான பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. எஸென்ஸ் சேர்க்காமலும் செய்யலாம். எஸென்ஸ் சேர்ப்பது கூடுதலான சுவைக்காகத்தான்.