வாழ்த்து அட்டை செய்முறை - 3

தேதி: January 16, 2009

Average: 5 (1 vote)

இந்த வாழ்த்து அட்டை செய்முறையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இங்கே செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை. இதை நீர்வீழ்ச்சி வாழ்த்து அட்டை என்பார்கள். இதை ஒரு Art fair-ல் பார்த்துவிட்டு வந்து புத்தகங்கள், வலைத்தளங்கள் எல்லாம் தேடி கண்டுப்பிடித்து செய்து பார்த்து அதை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். இந்த வாழ்த்து மட்டை குழந்தைகளை மிகவும் கவரும், பெரியவர்களையும் தான். :)

 

வெறும் வாழ்த்து அட்டை & உறை
சிறிய படங்கள் (பூக்கள், பறவைகள், பழங்கள், பூச்சிகள்)
பசை/கோந்து
வர்ண அட்டைகள்
கத்தரிக்கோல்
ரிப்பன்
பின் (push pin)

 

வாழ்த்து அட்டை செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். இங்க துணியிலிருந்து வெட்டப்பட்ட உருவப் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப் போல் பூக்கள், இலைகள் போன்றவற்றை பழைய துணிகள், புத்தகங்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
வெட்டி வைத்திருக்கும் படங்கள் ஒரு சதுரமான (2" X 2") வர்ண அட்டையில் ஒட்டிக் கொள்ளவும்.
இன்னொரு அட்டையில் 2" அகல (ஒட்டிய படங்களின் அளவு) நீளமான துண்டு ஒன்றை வெட்டவும். அதன் ஒரு முனையில் 2 X 2 சதுர துண்டை அளந்து குறித்து விட்டு பின்னர் அதிலிருந்து 3/4" தூரத்தில் 3 கோடுகளை குறித்துக் கொண்டு மடிக்கவும். (scoring) (எத்தனை படங்கள் இருக்கின்றனவோ அதைவிட ஒன்று குறைவாக 3/4" கோடுகள் போடவும்)
பின்னர் ஒரு படத்தை 2 X 2 மார்க் செய்த இடத்தில் வைத்து ஒட்டவும்.
பின்னர் மற்ற படங்களின் மேல் பக்கத்தில் மட்டும் சிறிது பசை தடவி 3/4" குறித்து வைத்திருக்கும் இடங்களில் வைத்து ஒட்டவும். பார்க்க ஒன்றன் மேல் ஒன்று இருப்பது போல தோன்றும்.
பின்னர் அந்த நீள அட்டையை இரண்டாக மடித்து வாழ்த்து அட்டையின் நடுவில் வைத்து கீழ் பகுதியை மார்க் செய்யவும்.
பின்னர் ஒரு சிறிய வர்ண அட்டையை வெட்டி மார்க் செய்த இடத்தில் வைத்து இரு கரையிலும் மட்டையுடன் சேர்த்து இணைக்கவும். ஒட்ட வேண்டாம். லூப் போல இருக்க வேண்டும்.
பின்னர் அதன் மேல் பக்கத்தில் சிறிது பசை தடவி படங்கள் ஒட்டிய அட்டையின் படம் ஒட்டிய பகுதியை வைத்து ஒட்டி மறுமுனையை அந்த லூப்பினுள் கோர்த்து எடுக்கவும்.
பின்னர் கீழ் முனையின் நடுப்பகுதியில் ஒரு துளை இடவும்.
அந்த துளையில் ஒரு சிறிய ரிப்பனை கோர்த்து கட்டி விடவும்.
பின்னர் அதன் மேல் தேவையான வாழ்த்து வாசகங்களை எழுதிக் கொள்ளவும்.
அழகிய வாழ்த்து அட்டை தயார்.
இதன் ரிப்பன் கட்டிய முனையை பிடித்து இழுக்க அது நீர்வீழ்ச்சி போல ஒவ்வொன்றாக விரியும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு குதூகலமாகவும் இருக்கும்.
இதே போல பழங்களை ஒட்டி குழந்தைகளுக்கு பழங்களின் பெயர்களை பழக்கலாம். பிளாஷ் கார்ட் போல இதுவும் ஃபன்னாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மிக அழகாக இருக்கிறது நர்மதா. எனக்குக் கற்பித்தலிலும் உதவும். விரைவில் இப்படி ஒன்று செய்யவேண்டும். :-)
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

எவ்வளவு பொறுமையாக அருமையா விளக்கி
இருக்கீங்க.சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பின் இமா, பாராட்டுக்கு நன்றி. செய்து போட்டு படம் எடுத்து அனுப்புங்கோ.:)

அன்பின் ஆசியா, உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நீங்க உடனுக்குடன் பாராட்டி போடுவீங்கள். நாந்தான் பதில் போட தாமதமாகிடுது. இப்ப கொஞ்சம் பிஸி. மடில மகள வைத்துகொண்டு பிஸிக்கு முன்னே இருந்தால் அவவும் ஏதேதோ தட்டி குழப்பிகொண்டு இருப்பா :) அதனால பதி லேட்டானா குறை நினைக்காதீங்க
-நர்மதா :)

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta