தயவுசெய்து விளக்கம் தரமுடியுமா?

தோழிகளே,
எனக்கு ஆறு மாதத்தில் ஒரு குழந்தையும் ஏழு மாதத்தில் ( water bag உடைந்து) ஒரு குழந்தையும் தவறிவிட்டது. ஏன் அப்படி நடந்தது என்று வைத்தியர்களால் கண்டு பிடிக்கமுடியவில்லை. இப்பொழுது வைத்தியர்களிடம் கேட்டபொழுது அவர்கள் கூறியதாவது: இனிமேல் நான் கர்ப்பம் தரித்தால் கர்ப்பம் தரித்த சில மாதங்களிலேயே குழந்தை பிறக்கும் வாசலைத் (mouth of uterus) தைத்து விடுவதாகவும் பின் 30 வாரங்களை நெருங்கும் பொழுது அதனை (தையலை) அறுத்துவிடுவதாகவும்; அப்படிச்செய்தால் கர்ப்பம் கலையும் (early abortion) அபாயத்தைத் தவிர்க்கலாம் என்றும் கூறினார்கள். தேவைப்பட்டால் பத்து மாதங்கள் வரையும் என்னை வைத்தியசாலையிலேயே வைத்துப் பார்ப்பதாகவும் கூறினார்கள்.
என் கேள்வி என்னவென்றால்; உங்களில் யாராவது இந்த முறையில் குழந்தை பெற்றுள்ளீர்களா? அல்லது உங்கள் உறவினர்களிலோ, நட்புவட்டாரத்திலோ யாராவது இம்முறையில் குழந்தை பெற்றுள்ளார்களா? அப்படியாயின், இம்முறை மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி அறியவிரும்புகின்றேன். நான் அறிந்து கொண்டவரையில் அந்த தையலை போடும்பொழுது என்னை முழுவதுமாக மயக்கித்தான் செய்வார்கள், பின் அந்தப் புண் காய சிறிது காலங்கள் ஏற்படுமாம்?! அது எவ்வளவு தூரம் வேதனை (வலி) யாக இருக்குமென்று தெரியவில்லை, இதை உணர்ந்தவர்களால்தான் விளக்கமாகச் சொல்லமுடியும்.
தயவு செய்து இதனைப் பற்றித் தெரிந்தவர்கள் (ஏற்கனவே இம்முறையைச்செய்து குழந்தை பெற்றவர்கள்) எனக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கி விளக்கமுடியுமா?

Early Total Cervix Occlusion
Or
Late Total Cervix Occlusion
என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதனைப் பற்றி நிறைய வாசித்துவிட்டேன், இருப்பினும் இதனைச் செய்தவர்கள் அந்த அனுபவத்தைக் கூறினால் கூடுதல் விளக்கம் கிடைக்கும் என நம்புகின்றேன்.

ஹாய் Mrs.Kanthan,
சாரிபா, இதபத்தி எனக்கு தெரியாது. நம் தோழிகள் யாராவது வந்து பதில் தருவாங்க. அதுவரை காத்திருக்கவும்.
be healthy

be healthy

இது பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது ஆனால் என் கணவரின் அண்ணிக்கு நீங்கள் சொன்னது போல் செய்து உள்ளார்கள்..அவர்களுக்கும் முதல் குழந்தை பாதியில் தவறிவிட்டது எனவே டாக்டர்ஸ் அட்வைஸ் செய்தபடி தையல் போட்டு 9வது மாதத்தில் நீக்கினார்கள்..எனக்கு தெரிந்து அவ்வளவு வலி தெரியாது..பயப்பட தேவையில்லை,குழந்தைக்கும் உங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது..இத்தனைக்கும் அவருக்கு அந்த பிரசவத்தில் டிவின்ஸ் பிறந்தது, சுகபிரசவம்தான்..அடுத்தும் ஒரு பையன் பிறந்தான் அதும் சுகபிரசவம் தான்..எனக்கு தெரிந்து டாக்டர்ஸ் அட்வைஸ்படி நடந்து கொள்வது நல்லது தான்..எனக்கு தெரிந்து அவ்வளவு தான் இதற்கு மேல் உங்களுக்கு விளக்க நம் தோழிகள் வருவார்கள்..கவலைபட வேண்டாம்..நீங்கள் விரைவில் குழந்தைக்கு தாயாக வாழ்த்துகிறேன்..

திருமதி காந்தன்!!!
எனக்கு இது பற்றி ஒன்னும் தெரியாதுங்க.I am really sorry for your loss. I read some articles after seeing your thread . Thamarai's answer is also positive. I hope you to be poitive and you are in my prayers. Feel better.

ila

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் தாமரை,
எப்படி இருக்கீங்க?
சந்தோஷ் நலமா?
be healthy

be healthy

நல்லா இருக்கோம் பா ,இப்போ தான் பார்த்தேன், சந்தோஷ் நல்லா இருக்கான் பா..நீங்க எப்படி இருக்கீங்க? கொஞ்சம் பிஸி பா அதான் அருசுவைக்கு அடிக்கடி வர முடியல பா..

தாமரை,
அதேதான்பா இங்கயும். என் மகள் டைப் பண்ண விடமாட்டாள். என் பெயர் நியாபகம் இருக்கா?
be healthy

be healthy

உங்க பேர் மட்டும் இல்லபா எல்லோர் பேரும் ஞாபகம் வச்சுக்க டிரை பண்றேன்,,ஆனால் பாதி பேர் ஞாபகம் வரமாட்டேங்குது..உங்க பேர் சரியா பா?

ஹாய் திருமதி. காந்தன்,
இலங்கையில் இருந்தபோது தெரிந்த ஒருவர் இந்த முறையில் இரண்டு குழந்தைகள் பெற்றார். தீமை எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. அவர் லீவு எடுத்ததாகவும் ஞாபகம் இல்லை. வெகு சாதாரணமாகத்தான் இருந்தார். குழந்தைகள் இப்போது பெரியவர்கள். எப்போதும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார்கள். தையலால் காயம் வரும் என்று நினைக்கவில்லை. கை, காலில் தையல் போடுவது மாதிரித்தான். அதைவிட வேதனை குறைவாக இருக்கும். ஆரம்ப நாட்களில் சிகிச்சை காரணமான அசௌகரியம் இருக்கும்தானே. (உங்கள் உடல்நிலை அவரைப் போல் இராது. அதனால் அனுபவம் வித்தியாசமாக இருக்கலாம்.) ஆனால் நிச்சயம் கஷ்டமாக இராது. யோசிக்காமல் இருங்கள். மீதியை உங்கள் மருத்துவர் பார்த்துக் கொள்வார். எல்லாம் நல்லபடி நடக்கும். உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நானும் பிரார்த்தனை செய்கிறேன். ;-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

என் அக்காவுக்கும் இதுபோல செய்தார்கள். பயப்படும்படி இதில் ஒன்றும் இல்லை. வலியும் அத்தனை பெரியதில்லை. அக்கா delivery வரை normal - laa தான் இருந்தார்கள். குழந்தையும் நல் லபடியே பிறந்து தாயும் baby -yum நலமாகவே இருக்கிறார்கள். இப்போது மருத்துவம் பெரிதும் முன்னேறி விட்டது. கடவுளை வேண்டி தைரியமாக இருங்கள்.

இன்பமே சூழ்க....எல்லோரும் வாழ்க!!

இன்பமே சூழ்க....எல்லோரும் வாழ்க!!

மேலும் சில பதிவுகள்