ஹாய்,அருசுவை தோழிகளே,எனக்கு திருமணமாகி 1 வருடம் 4 மாதமாகிறது.முதல் 6 மாதத்தில் கன்சிவ் இருந்து,5 வாரத்துலா ஸ்கேன் பார்த்துவிட்டு டாக்டர் இதயத்துடிப்பு வாரலைனு சொல்லி 1வாரம் பார்க்கலாம்,1 வாரத்துக்கு அப்புரமும் வரலைனா அபஸன் பன்டனும்சொன்னாங்க. டாக்டர் சொல்லி,1 வாரத்துலா அபஸன் செய்துடங்க,டாக்டர் 6 மாதம் குழந்தை வேண்டாம்,தள்ளிபோட சொன்னாங்க,அவங்க சொன்ன 6 மாதம் முடிந்து அதற்க்கும் மேல்3 மாதம் ஆகிவிட்டதல்.குழந்தை வேண்டி ப்ளேன் செய்தோம்.எனக்கு ரெகுலர் பிரியட்ஸ் தான்,ஆனால் போன மாதம் 1நாள் முன்னதாகவே ,இந்த மாதம் 2நாள் முன்னதாக ,நாங்கள் ரொம்ப எதிர் பார்த்து ஏமந்து விட்டோம்.எங்கள் இருவர் வீட்டிலும் ரொம்ப ஆவளாக உள்ளனர்,
1) நாங்கள் டாக்டர்கிட் போகலாமா?
2)இன்னும் கொஞ்சநாள் வெய்ட் பன்டலமா?
3)நான் போலிக் ஆசிட் மாத்திரை மாருத்து ஆலோசனை படி சாப்பிடுகிறேன்.
என்னுடைய குழப்பத்தை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்,மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது,
கவிதா
ஃ ஹாய் கவிதா...
உங்கள் மனநிலை புரிகிறது,
#கவலைபடாதிங்க,மனதை ரிலாக்ஸா வைங்க,
#நான் விரைவில் ஆரோக்கியமான குழந்தைக்கு தாயாவேன் என்று நினைங்க,
#மன திருப்திக்காக டாக்டரிடம் செல்லவும்.
#நம்பிக்கை தான் வாழ்க்கை,இறைவன் மீது நம்பிக்கை வைக்கவும்.எல்லாம் நல்லதாக நடக்கும்.
#சத்தான உணவு, காய்,கனி வகைகளை சாப்பிடவும்.
#எப்போதும் கவலையாக இருக்காமல், மனதை மகிழ்ச்சியாக வைங்க..
~~ LIFE IS A CHALLENGE, MEET IT WITH COURAGE, KEEP SMILING ~~~
**அன்புடன் ஃபஜீலா**
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*
தோழிகளே...
தோழிகளே...
யாராவது கவிதாவுக்கு பதில் போடுங்கப்பா...
யாருமே இந்த பதிவை பார்க்கலையா?????
யாருமே இல்லையா ??????.
சீக்கிரம் வாங்க ,பதில் போடுங்கப்பா....
:-(
*அன்புடன் பஜீலா*
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*
Hai kavitha
hai ,
i am sri fromsingapore...just now i saw ur msg.. dont worry.. u see .. i had 2 DNC and then i have one male baby ..i have the same problem.....dont worry kavi.... just u pray to god.. each and every is good for u and ur baby... eat well and thing positive thingonly......... ok.... i will u send the details mail
மன்ற தோழிகளிகளே பதில் போட வாருங்கள்
நன்றி தோழி பஜீலா&தோழி ஸ்ரீ,உங்கள் பதில் பார்த்து மனதிற்க்கு இதமாக இருந்தது, இது நார்மல்தானா?இல்லை டாக்டர் இப்பவே போகலாமா?மன்ற தோழிகளிகளே பதில் போட வாருங்கள்.
kavisara27
அன்புடன் கவிசாராவிற்கு,வைத்தியக்கலாநிதி செ.ஆனைமுகன் எழுதிய ‘மகப்பேறும் மகளிர் மருத்துவமும்’ என்ற நூலிலிருந்து உங்கள் குழப்பத்துக்கான பதில்
1.நீங்கள் எப்போது மருத்துவரைப்பார்க்க வேண்டும்?
கருத்தடை பாவிக்காது ,1 கிழமைக்கு 2-3 தடவைகள் உடலுறவு கொண்டு இதன்மூலம் 1 வருடத்தில் நீங்கள் கருத்தரிக்க முடியாது போனால் நீங்கள் வைத்தியரைப்பார்த்தல் நல்லது.
[மேற்கூறிய உடலுறவு கொள்வோர் 75வீதமானவர் 12 மாதத்துக்குள் கருத்தரிப்பார்.]
உங்கள் மாதவிடாய் ஒழுங்கர்று இருந்தால் 12 மாதங்கள் காத்திராமல் வைத்தியரை நாடுவது நல்லது.
இதைத்தொடர்ந்து வைத்தியர் உங்களுக்கு செய்யும் ஆரம்ப பரிசோதனைகள் எவை என்பதையும் அவற்றை செய்வதற்கான காரணங்களையும் விளக்கியிருக்கின்றார்
உங்களுக்கு தேவையென்றால் நான் அவற்றை தருகிறேன்
சுரேஜினி
நன்றி சுரேஜினி
நன்றி சுரேஜினி.உங்கள் பதில் பார்த்ததில் மகிழ்ச்சி.நீங்கள் சொன்ன புத்தகம்,எனக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்,அந்த புத்தகத்தை வெப்சட்ல பார்க்க முடியுமா? வெப் முகவரி என்ன? நீங்க ஸப்ட் காபி வைத்துயிருந்தால் எனக்கு இ-மெயில்ல அனுப்ப முடியுமா?
மன்றத்தில் தோழிகள் யாரும் இல்லையா,எனக்கு பதில் போட வாருங்கள்
மன்றத்தில் தோழிகள் யாரும் இல்லையா,எனக்கு பதில் போட வாருங்கள்
27
கவிசாரா ஏன் இந்தக்கத்தல்????வந்துகொண்டு இருக்கமுல்ல.கவி இது 672 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம்.ஐடி குடுங்கோ.நான் உங்களு்டைய பிரச்னையை மனதில் கொண்டு உங்களுக்கு தேவையான பக்கங்கள் எல்லாவற்றையும் அனுப்பி வைக்கிறேன். அல்லது இதில் உள்ள பொருளடக்கத்தை முதலில் அனுப்பி வைக்கிறேன் அதில் எவை எவை உங்களுக்கு தேவைப்படும் என்று சொன்னீர்களானால் அவற்றையெல்லாம் அனுப்புகிறேன்.
ஐடி யை பாதுகாப்பா குடுக்க விரும்பினா ஏதாவது ஒரு குறிப்புக்கு கீழே குடுங்கோ.ஏனெண்டா பின்னூட்டங்கள் நீக்க இருப்பதால் இந்த ஐடியா.
சுரேஜினி
kavisara
ஹாய் கவிதா,
நீங்கள் இந்த தளங்களில் நிறைய குறிப்புகள் பார்க்கலாம்.
http://www.indiaparenting.com/
http://parenting.ivillage.com/ttc/topics/0,,4rwd,00.html
கவலையின்றி இருங்கள். நல்லதே நடக்கும்.
US ல யா இருக்கீங்க. மத்தியானத்துல யாரும் அதிகம் வரதில்லை.
அன்புடன்
கிருத்திகா
நன்றி சுரேஜினி& மீனா
நன்றி சுரேஜினி .நீங்க நான் போட்ட இந்த பதிவுக்கு மேல் வழங்கியவர்.அத்தோடு அட் யாகூ அய்டிக்கு அனுப்புங்க.ரொம்ப நன்றி சுரேஜினி,
#மீனா மிக்க மகிழ்ச்சி உங்கள் பதில் பார்த்து.நீங்க கொடுத்த லிங்க்கு எனக்கு பயனுள்ல்தாக அமையும் என்று நினைகிரேன்