என்னுடைய குழப்பத்தை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்

ஹாய்,அருசுவை தோழிகளே,எனக்கு திருமணமாகி 1 வருடம் 4 மாதமாகிறது.முதல் 6 மாதத்தில் கன்சிவ் இருந்து,5 வாரத்துலா ஸ்கேன் பார்த்துவிட்டு டாக்டர் இதயத்துடிப்பு வாரலைனு சொல்லி 1வாரம் பார்க்கலாம்,1 வாரத்துக்கு அப்புரமும் வரலைனா அபஸன் பன்டனும்சொன்னாங்க. டாக்டர் சொல்லி,1 வாரத்துலா அபஸன் செய்துடங்க,டாக்டர் 6 மாதம் குழந்தை வேண்டாம்,தள்ளிபோட சொன்னாங்க,அவங்க சொன்ன 6 மாதம் முடிந்து அதற்க்கும் மேல்3 மாதம் ஆகிவிட்டதல்.குழந்தை வேண்டி ப்ளேன் செய்தோம்.எனக்கு ரெகுலர் பிரியட்ஸ் தான்,ஆனால் போன மாதம் 1நாள் முன்னதாகவே ,இந்த மாதம் 2நாள் முன்னதாக ,நாங்கள் ரொம்ப எதிர் பார்த்து ஏமந்து விட்டோம்.எங்கள் இருவர் வீட்டிலும் ரொம்ப ஆவளாக உள்ளனர்,
1) நாங்கள் டாக்டர்கிட் போகலாமா?
2)இன்னும் கொஞ்சநாள் வெய்ட் பன்டலமா?
3)நான் போலிக் ஆசிட் மாத்திரை மாருத்து ஆலோசனை படி சாப்பிடுகிறேன்.
என்னுடைய குழப்பத்தை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்,மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது,

ஹாய் சுரேஜினி மற்றும் தோழியரே,
பிரியட்ஸ் தள்ளிபோனா எத்தணை நாள் கழித்து டாக்டர்கிட்ட போகனும்(10 &15).கொஜ்சம் பதில் சொல்லுங்கப்பா.

கவிசாரா உங்களுக்கு ரெகுலர் என்றால் அடுத்தநாளிலே கூட போகலாம். வீட்டில டெஸ்ட் செய்ய வேணாம் என்றால் ஒரு வாரத்திலே கூட டாக்டரிடம் சென்று காண்பிக்கலாம். என்ன அவங்க பிளட் டெஸ்ட் செய்து கன்பார்ம் பண்ணுவாங்க. குட் லக்!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கவிசாரா, சங்கீதா, ருத்வி கடவுளை நம்புங்கள்,எல்லாம் நல்லதே நடக்கும்.
இர்ரெகுலர் பீரியட்ஸிற்கு சுரேஜினி கூறியிருக்கும் விளக்கம் சரியானது தான்.
கவிசாரா பொதுவாக 40ஆவது நாளிற்குப்பின் (அதாவது 10 நாட்கள் தள்ளியப்பிறகு) ரெகுலர் பீரியட்ஸ் உள்ளவர்கள் டாக்டரிடம் செல்லலாம். மனதைச் சலனப் படுத்தாமல் எப்பொழுதும் சந்தோசமாகயிருங்கள், எல்லாம் நல்லதாகவே நடக்கும். எல்லோருக்கும், எல்லா நன்மைகளும் கிடைக்க இறைவனைப் பிராத்திக்கிறேன்.

அன்புடன்:-)..........
உத்தமி:-)

ஹாய் தோழிகளே ஒரு சந்தோசமான செய்தி ,எங்க வீடுக்கு ஒரு குட்டி பாப்பா சீக்கிறம் வரப்போரா.உங்கள் பிறத்தனை எனக்கு பலன் கொடுத்தது.இதேபோல் மற்ற தோழிகளுக்கும்,விரைவில் இந்த சந்தோசம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.(நம் மன்றத் தோழிகளுக்குதான் முதலில் சொல்கிறேன்.எங்கள் வீட்டுக்கு கூட சொல்ல வில்லை.உங்கள் அறிவுரை எப்பொலுதும் தேவை.Homeடெஸ்ட்டுத்தான் .பார்த்திருக்கோம்.டாக்டர் அப்பய்ன்மென்டு கிடைக்கத்தல் இன்னும் 2 வாரம் ஆகும்.அதற்க்குல் என்னால் தங்கவில்லை..

வாழ்த்துக்கள் கவி.கேக்கவே சந்தோசமா இருக்கு.
சரி சரி போய் தனியா ஒரு திரட் தொடங்குங்கோ.கர்ப்பிணிகள் திரட்டெல்லாம் பழசாப்போச்சு .நீங்கள் என்னென்ன எல்லாம் கடைப்பிடிக்க வேணும் எண்டு கேளுங்கோ.எதுக்கும் பழைய திரட்டுகளையும் பாருங்கோ.திருப்பித்திருப்பி கேட்டா அம்மாக்கள் அடிப்பினம் சரியோ.

சுரேஜினி

கவிசாரா, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல சேதி சொன்னதற்கு ஆ... காட்டுங்க..... இந்தாங்க பாதாம் பர்ஃபி. உடலை நல்லா கவனிச்சுக்கோங்க, சத்தான சாப்பாடு சாப்பிடுங்கப்பா....... டேக் கேர்...............:-)

அன்புடன்:-)........
உத்தமி:-)

கவிசாரா எப்படி இருக்கிங்க. உங்கலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்பா.....
உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க. நால்லா ரெஸ்ட்டு எடுங்கப்பா... நல்ல சத்தான சாப்பாடா சாப்புடுங்க.
மற்ற தோழிகள் செல்லும் ஆலோசனை படி நடந்துக் கோள்ளுங்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

சுரேஜினி அக்கா, உத்தமி எப்படி இருக்கிங்க. உங்க கிட்ட பேசி ரெம்ப நாள் ஆயிடுச்சி.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மிக்க நன்றி சுரேஜினி,உத்தமி,&பிரபாதாமு,சுரேஜினி நீங்க சொன்னமாதிரியே ஒரு திரட் ஒப்பன் பன்னிடேன்.
என் சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் சந்தோசம்.

வாழ்த்துக்கள் கவி.

உங்கள்’’ட்ட இருந்து நல்ல செய்தி கேட்டது சந்தொசமாக இருக்கு.

நல்ல ஃப்ரெஸ் காய்கள், பழங்கள் சாப்பிடுங்க,

*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மேலும் சில பதிவுகள்