எவையெல்லாம் இங்கு இடம் பெறும்

தமிழகச் சுவைகள் என்ற தலைப்பின் கீழ் எதனைப் பற்றியெல்லாம் இங்கு உரையாடலாம்?

தமிழகத்தின் பல்வேறு வட்டாரங்களில், பல்வேறு வகையான உணவுப் பழக்கங்கள், செய்முறைகள் வழக்கத்தில் உள்ளன. இவற்றில் குறிப்பிடும்படியாகச் சொல்லக்கூடியவை - செட்டிநாடு சமையல், கொங்கு சமையல், தஞ்சை சமையல், மதுரை சமையல், நெல்லை சமையல், சேலம் சமையல் ஆகியன. இவற்றைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் தனித்துவம் பெற்ற உணவுவகைகள் பழக்கத்தில் உள்ளன. அனைத்து வட்டார உணவுகள் குறித்த கேள்விகள், சந்தேகங்கள் அனைத்தையும் இங்கே எழுப்பி, பதில்கள் பெறலாம். உங்களுக்கு தெரிந்த உணவுக் குறிப்புகளையும் இங்கே வெளியிடலாம்.

மதுரை ஆதிகாலத்து மிட்டாய்கடை யில் கிடைக்கும் காராசேவு ஒரு அற்புதமான சுவை.சபரி மலை செல்லும் பக்தர்கள் இங்கு இருந்து வாங்கி செல்லுவது வாடிக்கை.அதே போல் முகவை மாவ்ட்டத்தில் ராமநாதபுரத்தில் பார்வதி வெண்ணை கடையில் கிடைக்கும் நெய்க்காகவே கூட்டம் கடை வாசலை மொய்த்துக்கொண்டு இருக்கும்.ஒரு பிரயோஜனமான தலைப்பு இது.
சகோதரிகள் இந்த பகுதிக்கு தங்களுக்கு தெரிந்தவற்றை பதிவு செய்தால் அனைவரும் பயன் பெறலாம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சிதம்பரத்தில் மூர்த்தி ஹோட்டலில் பரோட்டாவும், குருமா மற்றும் சிக்கன் வெரைட்டீஸ் ரொம்ப நல்லா இருக்கும். பரோட்டா அளவு ரொம்ப சின்னதா இருந்தாலும் டேஸ்ட் நல்லா இருக்கும். அதே மாதிரி அங்கே வாத்தியார் இட்லி கடைன்னு இருக்கும். இட்லி ரொம்ப சாஃப்ட்டா வீட்டு இட்லி மாதிரி இருக்கும். அங்கே இட்லிக்கு கொத்சுதான் சைட் டிஷ். சட்னியெல்லாம் இருந்தாலும் கொத்சுதான் எல்லோரும் விரும்பி வாங்குவாங்க. இந்த இட்லிக்கடையில், தோசை வீட்டு தோசை மாதிரியே இருக்கும். அங்கே அக்ஷயா ஹோட்டலில் க்ரீம் டொமாட்டோ சூப் ரொம்ப நல்லா இருக்கும். சிதம்பரத்தில் தெருக்களில் வண்டிகளில் மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் செய்து விற்பார்கள். மற்ற ஊர்களில் கிடைக்கும் காயவைத்த சிப்ஸ் போல் இல்லாமல் பிரெஷ்ஷாக இருக்கும். பூண்டு வாசனையோடு , கடினமாக இல்லாமல் உருளைக்கிழங்கு சிப்ஸ் போலவே க்ரிஸ்ப்பியாக இருக்கும். ராஜ்மந்திர்னு ஒரு சின்ன ஹோட்டல் கோயில் பக்கத்தில் இருக்கும். அது நார்த் இண்டியன் கடை. அங்கே கிடைக்கும் சப்பாத்தி, ஆலு பரோட்டா ரொம்ப சாப்ட்& டேஸ்ட்டி. சாரதா ராம்ஸ் பாஸ்ட் புட் கடையில் எல்லா சாட் அயிட்டமும் நல்லா இருக்கும். JS Cakes & Bakes ல சில்லி பிரெட் ரொம்ப நல்லா இருக்கும். Casino Bakery னு கோயில் பக்கத்தில் இருக்கு. அங்கே சாப்பிட்ட கேக் வெரைட்டீஸ் இன்னும் மறக்க முடியாது. அத்தனை பிரெஷ்ஷா, சாப்ட்டா இருக்கும். கோயில் அருகே பனங்கற்கண்டு பால் கிடைக்கும் கடையில் கூட்டம் அதிகமா இருக்கும். பெரும்பாலான கடைகளில் மில்க் ஷேக் சாப்பிடாமல் இருப்பது நல்லது. காய்ச்சாத பாலில்தான் மில்க் ஷேக் செய்கிறார்கள். வயிற்றுக்கு நல்லதல்ல.

மாயவரத்திலிருந்து சிதம்பரம் போகும் வழியில் புத்தூரில் ஒரு ஹோட்டல் இருக்கும். அங்கே எல்லா சிக்கன் வெரைட்டீசும் நன்றாக இருக்கும். அந்த கடையில் சிக்கனை விட தயிர்தான் பிரபலம். அது போன்ற சுவையான தயிரை நான் இதுவரை சாப்பிட்டதில்லை. கடைக்கு பேர்கூட இல்லை. அந்த ஹோட்டல் ரொம்ப வசதியாகவும் இருக்காது. வடலூரில் கடைத்தெருவில் ( சிதம்பரத்திலிருந்து சென்னை போகும் வழியில்) ஒரு கடையில் (கிருஷ்ணா பேக்கரின்னு நினைக்கிறேன்)தம்ரொட் கிடைக்கும். மிகவும் நன்றாக இருக்கும். இன்னும் ஞாபகம் வந்தால் எழுதுகிறேன். மற்ற ஊர்களில் உள்ள உணவகங்களைப் பற்றியும் தனித் தனியாக எழுதணும். அவரவர் ஊரின் ஸ்பெஷலை எல்லாரும் எழுதினால் நன்றாக இருக்கும்.

மேலும் சில பதிவுகள்