இது நம்ம ஏரியா... உள்ளே வாங்க, அரட்டை அடிங்க.

இது நம்ம ஏரியா... உள்ளே வாங்க, அரட்டை அடிங்க. :)

பழசு நிரம்பிடுச்சு.... அதனால ஜெயா, உமா, உத்ரா, மேனகா, சித்தி, அதிரா, தாஜ், சந்தோ, மர்ழி, செல்வி, கீதா, இலா, இமா, ஆசியா, பேர் விட்டுபோன எல்லா தோழிகளும் வாங வாங... எல்லாரும் வந்து அரட்டைய ஆரம்பிச்சு வைங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம்

வனிதா, நலமா? இப்போ தான் 44 முழுதும் படித்து விட்டு, பெரிய பதிவாய் போட்டால், அதுக்குள்ள இங்கே புதுசா ஒர் அரட்டையை துவக்கிட்டீங்களா?

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ஹாய் தனிஷா, நல்லபடியாக ஊருக்குப் போய் வந்தாச்சா? (ஹிஹி லேட்டான பதிவு தான், இப்போ தான் பார்த்தேன்) ஊரில் எல்லோரும் நலமா? பொன்னுக்கு காது குத்தியாச்சா? இனி நீங்கள் கம்மல் இது வாங்குவோம், அது வாங்குவோம்னு போட்டு அழகு பார்த்துட்டே இருக்கப் போறீங்க.. நான் சென்ற மாதம் ஊருக்கு வந்தேன்.ஊரில் தான் இருக்கிறேன்.. அப்பா நலமாக இருக்கிறார். விசாரித்தமைக்கு மிகுந்த நன்றிகள்...
தாமரை எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் மகன் எப்படி இருக்கிறான்? உமாவுக்கும், மர்ழியாவுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
சித்தினு கூப்பிடரதுல யாரோ எல்லோருக்கும் சித்தி போல இருக்குன்னு நினைத்தேன். மெதுவா பெயர் பார்த்த பிறகு பேருன்னு தெரிந்தது.. எப்படி இருக்கிறீர்கள் சித்தி..
ஆசியா உமர், வனிதா, மேனகா, தனு, இமா, மல்லிகா(இதுதான் உங்க பேரா), ஃபஜிலா, தாஜ், சசி(உங்க பேர்ல எனக்கு ஒரு ஃப்ரென்டு இருக்காங்க), விஜி, ஜலிலாக்கா, சாதிகாக்கா, ஜெயலஷ்மி எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? சீதாலஷ்மிம்மா, செல்விம்மா (மனசில் என்றுமே சோர்வடையா செல்விம்மான்னு சொல்லலாமா...), ஜெ மாமி எப்படிம்மா நீங்கள் எல்லாரும் ஆல் ரவுன்டராக இருக்கிறீர்கள்? சீதாலஷ்மி மேடம் வயசு எல்லாம் என்றும் 16 தான் மேடம்.. இன்னும் 10 வருசம் ஆனாலும் எல்லோருமே அரட்டை அடிக்க வேண்டும் இதுபோல... நீண்ட நாட்களாவே எப்படி தோழிகள் (அறுசுவையிலும், வீட்டிலும், வேலையிலும்)டைம் மானேஜ் செய்கிறார்கள் என்று வியந்து போயி இருக்கிறேன்...
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ஹஹஹா... நான் இப்பொ தான் அதை படிச்சிட்டு வற்றென். நலமா? எங்க ரொம்ப நாளா உங்களை காணோம்?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்பாடா படிச்சுட்டீங்களா? எங்கே யாரும் படிக்காம விட்டுருவாங்களோன்னு தான் இங்கேயும் போட்டு வைத்தேன்...
கொஞ்சம் வேலை(?) பிஸியாக இருந்துட்டேன்.
இந்தியப் பயணம், இங்கு வீட்டில் நெட் கனெக்ஷன் delay அது இதுன்னு இப்ப தான் நேரம் கிடைத்தது...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

வனிதா, எங்கே இருக்கிறீர்கள்? பட்டிமன்றங்களில் உங்கள் பதிவுகள் பார்த்து இருக்கிறேன்..

அன்புடன்,
ஆயிஸ்ரீ

என்னங்க ஏரியாப் பக்கம் யாரையும் காணோமுங்க?

அன்புடன்,
ஆயிஸ்ரீ

வணக்கம்
எப்படி இருக்கிறீர்கள்?US ல் எங்கு இருக்கிறீர்கள்?உங்கள் பெயரில் என்னுடைய friend இங்கு US ல் தான் இருக்கிறாள்.ஆனால், எங்கு இருக்கிறாள் என்று எனக்கு தெரியாது! உங்களுக்கு தெய்வநாயகி ,(இந்தியாவில் இருந்து ) தெரியுமா?

தெய்வநாயகியை தெரியாமலா? உங்களுக்கு தெய்வநாயகியை எப்படி தெரியும்? என் கல்லூரித் தோழி அவள். என் பெயரில் உங்களுக்குத் தோழியா?குழப்பறீங்க? நான் கலிஃபோர்னியாவில் இருந்தேன். இப்போ இந்தியாவில் இருக்கிறேன். உங்களைப் பற்றி சொல்லுங்கள் கவி...சுத்தி வளைக்காதீங்க கவி.. சாரி, உங்களை எனக்கு தெரியல... என் பேர் சரியா டைப் பண்ணி இருக்கீங்க... யாரும்மா நீங்க... கொஞ்சம் விவரம் சொல்லுங்க...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

வணக்கம்
தெய்வநாயகியும் நானும் KSR collegeல் ஒன்னா work செய்தோம்.அவள் உங்களை பற்றி சொல்லி இருக்கிறாள்.

மேலும் சில பதிவுகள்