ஓமப்பொடி

தேதி: January 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கடலை மாவு - 1 தம்ளர்,
அரிசி மாவு - கால் தம்ளர்,
ஓமம் - அரை தேக்கரண்டி,
உப்பு - அரை தேக்கரண்டி,
நெய் - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு.


 

ஓமத்தை கல் அரித்து நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுது, உப்பு, நெய், கடலை மாவு, அரிசி மாவு எல்லாம் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஓம்ப்பொடி அச்சில் இட்டு, வாணலியில் எண்ணெய் காய விட்டு, நேரடியாக எண்ணெயில் பிழியவும்.
ஒருமுறை திருப்பி விட்டு உடனே எடுக்கவும். (அடுப்பை மிதமாக வைக்க வேண்டும்)


இதை தனியாகவும் சாப்பிடலாம், பேல் பூரிக்கு கலப்பதற்கும் வைத்துக் கொள்ளலாம். ஓமப்பொடி அச்சு மெல்லிய கண்ணாக இருக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்