காராசேவ்

தேதி: January 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - 1 கிலோ,
அரிசி மாவு - 50 கிராம்,
டால்டா - 50 கிராம்,
மிளகுப்பொடி - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
பெருங்காயம் - சிறிது,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு.


 

உப்பு, டால்டா, கடலை மாவு, அரிசி மாவு, மிளகுப்பொடி, ஆப்ப சோடா, பெருங்காய பொடி எல்லாம் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் காய விட்டு, காராசேவ் தேய்க்கும் கரண்டியில் சிறிது மாவை வைத்து, உள்ளங்கையால் அழுத்தி தேய்க்கவும்.
திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும்.
காராசேவ் தேய்க்கும் கரண்டி இல்லையெனில் முறுக்கு குழாயில் தேன்குழல் அச்சில் போட்டு நேரடியாக எண்ணெயில் பிழிந்து எடுத்து, ஒடித்து கொள்ளலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

aapa sodana baking powderra?

அன்பு அம்மு,
ஆப்ப சோடா என்பது பேக்கிங் பவுடர் அல்ல. இட்லி சோடா அல்லது சோடா மாவு என்றும் அழைப்பர்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.