சாலியா டிரிங்ஃ [மலிக்கா]

சாலியா டிரிங்ஃ [மலிக்கா]

தேவையானவை

சாலியா 25 கிராம்
முட்டை 1
தேங்காய்பால் 1 கப் [தேங்காய்பாலுக்கு பதிலாக பசும்பாலும் சேர்க்கலாம்]
சி பிஞ் உப்பு
சர்க்கரை[ஜீனீ] தேவைக்கு ஏற்ப்ப

முதலில் சாலியாவை நன்கு சலித்துவிட்டு ஒருமுறை தண்ணீரில் கழுகவும்.
பின்பு ஒருபாத்திரத்தில் 2 கப் தண்ணீரில் சலியாவைகளந்து அடுப்பில் வைக்கவும்
அது கொதித்து இளம் மஞ்சள்நிறத்தில் வரும்போது
தீயை குறைத்துவைத்து முட்டையை உடைத்து ஊற்றி
நன்றாக கிளறிவிடவும்

பின்பு உப்பைய்யும் சர்க்கரையும் போட்டு சற்றுநேரம்வைத்து இறக்கவும்

இந்த டிஸ் உடம்புக்கு மிகவும் நல்லது குளிர்ச்சி தரக்கூடியது

மாதவிடாய் அதிகமானால் 4, 5வதுநாளில்
இரவு ஊரவைத்து காலையில் காய்ச்சாத பாலுடன் சேர்த்துகுடிக்கலாம்

மாதவிடாய் வருவதர்கு 1 நாள் 2நாள் தள்ளிப்போனாலும்
வெரும் தண்ணீரில் ஊரவைத்து குடிக்கலாம்

சூட்டின்மேல் வலியாக இருந்தாலும் பால்மட்டும்சேர்த்து கொதிக்கவைத்து குடிக்கலாம்.
இதை சூடாகவும் குடிக்கலாம் ஃபிரிஜில் வைத்தும் குடிக்கலாம்
இளஞ்சூட்டில் குடிப்பது நல்லது

இதை சூடாகவும் குடிக்கலாம் ஃபிரிஜில் வைத்தும் குடிக்கலாம்
இளஞ்சூட்டில் குடிப்பது நல்லது

[பின் குறிப்பு[
சாலியா ரெட்கலரில் இருக்கும் [சர்பத்தில் இருக்கும் சப்ஜாவிதை கருப்பாக இருக்கும்] இதுவும் ஒருவகை விதைதான்

அன்புடன் மலிக்கா

மேலும் சில பதிவுகள்