பெண்களுக்கு உதவும் கருத்தடை வழிமுறைகள் :-

< ---- நீக்கப்படுகின்றது.. ---- >

இந்த குறிப்பு பெண்களுக்கு உதவும் என நினைக்கிறேன். ஒரு மகப்பேறு மருத்துவர் சொன்னது....

**அன்புடன் ஃபஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

Nisha Rohit

மிகவும் அருமையனா குறிப்புகள் கொடுத்து இருக்கிறிர்கள். மிக்க நன்றி.

Nisha Rohit

பிற தளங்களில் வெளியான கட்டுரைகள், மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை நமது தளங்களில் வெளியிட நாம் அனுமதிப்பதில்லை. எந்த ஒரு தகவலாயினும் ஆக்கம் உங்களுடையதாக இருக்க வேண்டும். மின்னஞ்சலில் உங்களுக்கு வந்திருந்தாலும் அதனை அனுப்பியவர் பிற தளங்களில் இருந்து எடுத்திருப்பார். இது எல்லோருக்குமே பிரச்சனை தரக்கூடியது.

நல்ல விசயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் உங்களின் ஆர்வம் வரவேற்பிற்குரியது. அதேசமயம், இணைய விதிமுறைகள், காப்பிரைட் விதிமுறைகள் என்று சில விசயங்கள் இருக்கின்றன. அந்த விசயத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றோம். எனவே இவற்றை அனுமதிக்க இயலாது. நீங்கள் இணையத்தளங்களைப் பார்த்து கற்றறிந்து உங்களது சொந்த நடையில் இங்கே தகவல்கள் கொடுத்தால் அதில் தவறு இல்லை. அங்கே இருக்கும் விசயத்தை அப்படியே காப்பி செய்து இங்கே பேஸ்ட் செய்வது, அதையே மற்ற தளங்களுக்கும் கொடுப்பது போன்ற செயல்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

நான் பலமுறை குறிப்பிட்ட விசயம். அது சமையல் குறிப்பாகட்டும் மற்ற தகவல்கள் ஆகட்டும். பிற தளங்களிலோ அல்லது பிற ஊடகங்களில் இருந்தோ எடுத்து கொடுக்கப்பட்டிருந்தால், அது உங்களின் கண்ணில் பட்டால் எனக்கு உடன் தெரியப்படுத்தவும். எல்லாவற்றையும் பரிசோதிப்பது எங்களால் மட்டும் இயலாது. நீங்களும் உதவிடுங்கள்.

அட்மின் அண்ணா..

இது ஒரு செய்திதாளின், இலவச இணைப்பு புத்தகத்தில் வெளியான கட்டுரை,

மெயிலில் வந்ததை நான் கொடுக்கவில்லை,

உபயோகமான தகவல் நம் தோழிகளுக்கு உதவும் என்று தான் சில மாற்றங்கள் செய்து ,இங்கே நான் பதிவு செய்தேன்.

நீங்கள் இதை நீக்கிவிட்டதை கண்டு எனக்கு அத்ர்ச்சி,நான் செய்தது தவறு என்றால் மன்னிக்கவும்.

*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

அட்மின் அண்ணா..

புத்தகத்தில் படித்ததை கூடவா இங்கே பதிவு செய்யகூடாது ??

தயவு செய்து விளக்கம் தரவும்...உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்...

*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

இது பொது தளம் என்று தான் இங்கே பதிவை போட்டேன்,

தவறாக மன்னிப்பு கேட்டுவிட்டேன்.

நான் மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை.

*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

இது பொது தளம் என்று தான் இங்கே பதிவை போட்டேன்,

தவறாக மன்னிப்பு கேட்டுவிட்டேன்.

மன்னிப்பு கேட்க வேண்டியது நான் இல்லை.

*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

#$5834#$#$

சகோதரி பஜீலா அவர்களுக்கு,

நான் காலையில்தான் தூங்குகின்றேன். உங்கள் பதிவை இப்போதுதான் பார்க்கின்றேன். அதுதான் பதில் கொடுக்க தாமதம்.

உங்களின் பொதுத்தளம் என்பதற்கான விளக்கம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. பொதுத்தளம் என்றால் மற்ற ஊடகங்களில் இருக்கும் விசயத்தையெல்லாம் எடுத்து போட அனுமதி உண்டு என்று சொல்ல வருகின்றீர்களா? இதற்கு நீங்கள் மன்னிப்பும் மறுப்பும் தெரிவிக்க தேவையில்லை. ஆனால் மன்னிப்பு கேட்க வேண்டியது நானில்லை என்ற வார்த்தையும் எதற்கு என்று தெரியவில்லை. சரி, விளக்கம் கேட்டிருக்கின்றீர்கள். இதனைப்பற்றி எல்லோருமே தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சற்று விரிவான விளக்கம் தருகின்றேன்.

ஒரு சிறிய குறிப்பினை எங்கேனும் படித்து அதனை புத்தகத்தில் படித்ததாக குறிப்பிடும்போது பெரிதாக பிரச்சனை வராது. ஆனால், இது கிட்டத்திட்ட ஒரு கட்டுரை அளவிற்கு இருக்கின்றது. இதையே வேறு தளங்களிலும் பார்க்க முடிந்தது.

இதுபோன்ற ஒரு தொகுப்பினை உருவாக்க ஒருவர் எவ்வளவு சிரமம் மேற்கொண்டு இருப்பார் என்பதை நாம் யோசிக்க வேண்டும். ஒரு படைப்பாளிக்குதான் படைப்பின் அருமை தெரியும். ஒருவரது படைப்பை மிக எளிதாக அப்படியே எடுத்து நாம் பயன்படுத்துதல் கூடாது.

இப்போதுதான் குறிப்பிடுகின்றீர்கள் ஒரு புத்தகத்தில் இலவச இணைப்பில் இருந்தது என்றெல்லாம். நியாயமாக நீங்கள் செய்திருக்க வேண்டிய விசயம், இதனை முன்பே குறிப்பிட்டு, இந்த புத்தகத்தில் இவர் கொடுத்திருந்தார் என்று அவரது பெயரையும் புத்தகத்தின் பெயரையும் குறிப்பிட்டு கொடுத்திருந்தீர்கள் என்றால் அதில் பிரச்சனை இருந்திருக்காது.

மீண்டும் இதையேத்தான் சொல்வேன். எல்லோருமே எங்கோ படித்தோ, கேட்டோதான் விசய ஞானம் பெறுகின்றோம். அதை வெளிப்படுத்தும்போது நமது சொந்த நடையில் வெளிப்படுத்தினால் பிரச்சனைகள் இல்லை. அப்படியே காப்பி செய்வது, அந்த ஒரிஜினல் படைப்பாளியை காயப்படுத்தும். நம்மையும் பாதிக்கும்.

படைப்பாளியின் அனுமதி பெற்று வெளியிடப்படும் விசயங்களுக்கு இங்கே அனுமதி உண்டு. மிகவும் நல்ல தகவல்கள், புத்தகங்களில் இருப்பதை பகிர்ந்து கொள்ள விரும்பினால், அந்த புத்தகத்தின் பெயர் அல்லது ஆசிரியர் பெயர் குறிப்பிட்டு நன்றி குறிப்பிட வேண்டியது அவசியம். Source: so and so என்று குறிப்பிடுவார்கள். இதனை எல்லோரும் அனுமதிப்பதில்லை. அதனால்தான் அதை நான் வலியுறுத்தவில்லை.

வெறும் நன்றி மட்டும் தெரிவிப்பதினால் ஒருவரது படைப்பை எடுத்து வெளியிடும் உரிமை மற்றவர்களுக்கு வந்துவிடாது. உதாரணத்திற்கு இங்கே யாரும் சமைக்கலாமில் உள்ள குறிப்புகள் அனைத்தையும் ஒருவர் எடுத்து அவரது தளத்தில் போட்டுக்கொண்டு, நன்றி: அறுசுவை என்று போட்டுவிட்டால் நான் விட்டுவிடுவேனா? அடுத்த நாளே வழக்கு தொடர்ந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வாங்காவிட்டால், நான் ஒரு பிரபல வழக்கறிஞரின் மகனே அல்ல. :-)

எனவே source போட்டுவிட்டால் எல்லாத் தகவல்களையும் இங்கே வெளியிடலாம் என்று எண்ணவேண்டாம். இப்போது நான் மிகவும் கண்டிப்பு காட்ட காரணம், சமீபத்தில் வரிசையாக சில பதிவுகள் இதுபோல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு பாராட்டும் கிடைக்கின்றது. இதனை அனுமதித்தால் அடுத்து எல்லோருமே அதை பின்பற்ற தொடங்கிவிடுவார்கள். வரிசையாக எல்லாப் பதிவுகளும் புத்தகங்களிலும், மின்னஞ்சல்களிலும் வந்ததாக மாறிவிடும். மின்னஞ்சலில் வரும் சுவையான விசயங்கள் மின்னஞ்சலிலேயே செல்லட்டும். உங்களுக்கு வந்துள்ளதுபோல் எல்லோருக்குமே தினமும் நிறைய விசயங்கள் மின்னஞ்சல்களில் வருகின்றன. அவற்றையெல்லாம் ஒரு portal ல் கொண்டு வரக்கூடாது. உங்களது சொந்த blog ல் வேண்டுமானால் வெளியிடலாம். இதனை சகோதரி பஜீலா அவர்களுக்கு என்று குறிப்பிடவில்லை. இது எல்லோருக்குமான பதிவு.

தயவுசெய்து ஒத்துழைப்பு தாருங்கள்.

மேலும் சில பதிவுகள்