துக்கடா

தேதி: January 21, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 250 கிராம்,
பச்சை மிளகாய் - 10,
பெருங்காயம் - சிறிது,
நெய் - 2 மேசைக்கரண்டி,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.


 

பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
மைதா மாவில் உருக்கிய நெய், அரைத்த விழுது, தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ரொம்ப மெலிதாகவோ, மொத்தமாகவோ இல்லாமல் சப்பாத்திகளாக தேய்த்து, முக்கோண வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டியவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து, டப்பாக்களில் போட்டு வைக்கவும்.


மாலை வேளையில் நொறுவலாக (ஸ்னாக்ஸ்) பயன்படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்