பைனாப்பிள் இனிப்பு கறி

தேதி: January 21, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பைனாப்பிள் - 1,
தேங்காய் பால் - 1/2 கப்,
கடலை மாவு - 1 கப்,
உலர் திராட்சை - 2 மேசைக்கரண்டி,
நெய் - 2 மேசைக்கரண்டி,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,

அரைக்க:-
-------------
தனியா தூள் - 2 தேக்கரண்டி,
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 6,
கசகசா - 3 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
பட்டை - சிறிது.


 

அன்னாசிப்பழத்தின் தோலை சீவி, துருவி வைக்கவும்.
பழத்துடன் கடலைமாவு, உப்பு, இரண்டையும் கலந்து வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு திராட்சைகளை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
அதே வாணலியில் மீதி நெய்யில் அரைத்த விழுது போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் கலந்து வைத்த அன்னாசிப்பழத்தை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் விட்டு இறக்கவும்.
வறுத்த திராட்சையை தூவவும்.


அடிக்கடி கிளறி விட வேண்டும். நாண், புலாவ், பரோட்டாவிற்கு சுவையான சைடிஷ். விருந்துகளில் பரிமாற ரிச்சாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்