புளி உடலுக்கு தீங்கா?

தோழிகளே, புளி பாவிப்பது உடலுக்கு கூடாது குறிப்பாக இரத்தத்துக்கு கூடாது என்பார்கள். உண்மைதானா? புளிக்கு பதில் லைம் ஜூஸ் பாவிக்கலாமா? கொரக்கா என்று சொல்லப்படும் புலியை
இன்னொரு சந்தேகம் : கசகசாவில் என்ன சத்து இருக்கின்றது? அதில் போதை தரக்கூடிய ஒரு தன்மை இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் கசகசா பாவிப்பது நல்லதா?

Luxmy

லக்ஷ்மி, புளி அதிகம் சேர்க்கக் கூடாது என்பது சரிதான். வாதத்தை உண்டாக்கும் என்பார்கள். தக்காளி, எலுமிச்சை, தயிர் போன்றவற்றை மாற்றாக உபயோகிக்கலாம். ஆனால் எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான்.
கசகசா போதைத்தன்மை உடையது என்பதும் சரியே! அரபு நாடுகளில் அதைக் கொண்டு வந்தால் கைது செய்து விடுவார்கள். எனது தந்தையின் உறவினருக்கு நிறைய குழந்தைகள். குழந்தைகள் ரொம்ப விஷமம் செய்யும் பொழுது சிறிது கசகசாவை அரைத்து கொடுத்து விடுவார்களாம். குழந்தைகள் தூங்கி விடுவார்களாம். எங்கள் வீடுகளில் முன்பு ககசாவை குழம்புகளில் தேங்காயோடு அரைத்து விடுவதுண்டு. இப்பொழுது இல்லை.

மேலும் சில பதிவுகள்