கார்ட்போர்டில் போட்டோ ப்ரேம் செய்வது எப்படி?

தேதி: January 24, 2009

5
Average: 5 (3 votes)

கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் குறிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கும் திருமதி. ரேணுகா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக விளக்கப்படங்களுடன் செய்து காட்டியுள்ள அழகிய போட்டோ ப்ரேம்.

 

அட்டை
கத்திரிக்கோல்
கத்தி
ஸ்கேல்
ரிப்பன் - சிறிது
பென்சில்
பசை அல்லது செல்லோ டேப்
வண்ண பேப்பர்கள் (விருப்பத்திற்கு ஏற்ப)

 

போட்டோ ப்ரேம் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
அட்டையில் 7 இன்ச் அகலமும் 5 இன்ச் நீளமும் கொண்ட அளவுகளில் 2 அட்டைகள் வெட்டிக் கொள்ளவும்.
ஒரு அட்டையில் நான்கு புறமும் 1 இன்ச் இடைவெளி விட்டு படத்தில் உள்ளது போல் ஒரு செவ்வகம் வரைந்துக் கொள்ளவும்.
வரைந்து வைத்திருக்கும் நடுவில் உள்ள அந்த செவ்வக பகுதியை தனியே வெட்டி எடுத்து விடவும்.
அதன் பிறகு வண்ண பேப்பரில் 9 இன்ச் அகலமும் 7 இன்ச் நீளமும் கொண்ட அளவுகளில் 2 பேப்பர்கள் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பேப்பரில் நான்கு புறமும் ஒரு இன்ச் இடைவேளி விட்டு ஒரு செவ்வகம் வரையவும், அந்த செவ்வகத்தில் இருந்து ஒரு இன்ச் இடைவெளி விட்டு ஒரு சிறிய செவ்வகம் வரையவும். அடுத்து அதன் தொடர்ச்சியாக ஒரு இன்ச் இடைவெளியில் மற்றொரு செவ்வகம் வரையவும்.
கடைசியாக உள்ள சிறிய செவ்வகத்தை மட்டும் தனியே வெட்டி எடுக்கவும். அதன் நான்கு மூலைகளிலும் படத்தில் காட்டியுள்ளது போல் கோடுகள் வரைந்துக் கொள்ளவும்.
நடுப்பகுதியை வெட்டாத முழுமையாக உள்ள அட்டையும் பேப்பரையும் ஒன்றாக சேர்த்து ஒட்டவும்
கோடுகள் வரைந்து வைத்திருக்கும் பேப்பரை அடியில் வைத்து அதன் மேல் நடுப்பகுதி இல்லாத அட்டையை வைக்கவும். பேப்பரில் கோடுகள் வரைந்திருக்கும் பகுதியை நறுக்கி விட்டு பேப்பரை மடக்கி அட்டையின் மேல் பக்கம் வைத்து ஒட்டவும்
வெளிப்புறத்தில் உள்ள பேப்பரில் மேல் பக்கம் உள்ள இரண்டு மூலைகளிலும் நறுக்கி விட்டு அதன் நடுப்பகுதியில் உள்ள பேப்பரை மட்டும் மடித்து ஒட்டிக் கொள்ளவும்.
அட்டையை திருப்பிக் கொண்டு மற்றொரு வண்ண பேப்பரை சிறிதளவு வெட்டி விரும்பிய இடத்தில் ஒட்டிக் கொள்ளவும். இது ப்ளெய்ன் பேப்பராக இல்லாமல் இருப்பதற்காக ஒட்டுவது. இது அவசியம் இல்லை
மீண்டும் பின்புறமாக திருப்பி ஏற்கனவே தயாரித்து வைத்து உள்ள முழு அட்டையை வைத்து அதன் மேல் மடக்காமல் இருக்கும் மீதமுள்ள பேப்பரை வைத்து ஒட்டவும்.
பின்புறம் அட்டை தெரியாதவாறு ஏதேனும் ஒரு பேப்பரை வைத்து ஒட்டிக் கொள்ளவும். ஆணியில் மாட்டுவதற்கு ஏற்றது போல் சிறிதளவு ரிப்பனை வெட்டி ஒட்டவும்.
அழகான போட்டோ பிரேம் தயார். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் ஓரங்களில் அலங்கரித்துக் கொள்ளலாம்.
மேல் புறத்தின் வழியே போட்டோவை சொருகிக் கொள்ளவும். கலர் பேப்பர் இல்லாமல் வெள்ளை பேப்பரில் செய்து விரும்பிய படம் வரைந்து கொள்ளலாம், அல்லது கிஃப்ட் பேப்பரில் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

யாரது நம்ப ரேனுவா இது??நம்பவே முடியல.இந்த வேலையெல்லாம் கூட உண்டா..வெரி குட்

ரொம்ப நல்லாயிருக்கு உங்க க்ராப்ட் ஒர்க்.

கணக்கு பிள்ளைவாள் அவர்களே. நான் கணக்கில் தான் நிங்க புலி என்று நினைத்து இருந்தேன். கை வண்ணத்திலும் உங்க திறமையை காட்டியிருக்கிங்க, ரொம்ப நன்றாகவும் எளிமையாகவும் இருக்கு. மேலும் நிறய்ய அனுப்புங்க.

அட நம்ம ரேணுகாவா கணக்குல தான் புலி என்று நினைத்தேம்.கிராஃப்ட் வொர்க்கிலுமா?

யார் அந்த குட்டீஸ் , உங்கள் குரலை வைத்து பார்க்கும் போது ஒரு வேளை நீங்களா இர்க்குமோ?

ஜலீலா

ம்ம் இன்னும் நிறைய கொடுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

இன்னும் என்ன திறமை எல்லாம் ஒளிச்சு வைச்சு இருக்கீங்க
"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அந்த ரேணுகாவா இந்த ரேணுகா... யாராவது confirm பண்ணுங்கோ.அழகாக இருக்கிறது ரேணுகா.

இலா!! தெரியாமல் கேட்கிறேன் இதெல்லாம் சொல்லிட்டா பண்ணவேணும்:)

"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water//
இலா நாங்கள் தொட்டால் சுருங்கிகள் அல்ல, பார்த்தால் பசு பாய்ந்தால் புலி எண்டு காட்டிட மாட்டோம்:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பாபு அண்ணா ரெம்ப நன்றி,அதுகுள்ள போட்டுட்டீங்க,நான் இன்னும் நாள் ஆகும் என்று நினைத்தேன்,உடனே வந்ததில் ரெம்ப மகிழ்ச்சி
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தேங்க் யூ தளிகா,எனக்கு இந்த மாதிரி வேலைகள் ரெம்ப இஷ்டம்,என் பொழுது போக்கும் கிராப்ட் செய்வது தான்,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரெம்ப நன்றி மேனகா,இது ரெம்ப ஈசி செய்வது,செய்து பாருங்கள்
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நன்றி விஜி,கட்டாயம் நிறையா அனுப்பறேன்,செய்து பாருங்க,எனக்கு போட்டோஸ் வீட்டில் மாட்டிவைக்க ரெம்ப விருப்பம்,அப்படி முயன்று தான் இது வந்தது,
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஜலிலா அக்கா என்னை கனக்கில் புலி என்று சொல்லிட்டீங்களே இனிமே நிறையா கணக்கு கத்துக்கனும்,

இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது,அவளை பார்த்தால் என்னை போலவா இருக்கு,அந்த பொன்னு என் கணவரின் அண்ணன் மகள்,அந்த பையன் என் பையன்,அந்த படம் ஊரில் எடுத்தது

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இன்னும் எனக்கு என்ன திறமை இருக்குன்னு எனக்கே தெரியல இலா,உங்க பதிவுக்கு கீழ இருக்கே ஆங்கில வரிகள் அது போல் தான் எல்லாம்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சுபர்ப் ரேணுகா. :-) தொடர்ந்து குறிப்புகள் தரவேண்டும்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அதிரா உங்களுக்கு ஏன் அவரா இவர் என்று இத்தனை சந்தேகம்,முடிந்தவரை வீட்டில் இருக்கும் பொருட்களை வீனாக்காமல் எதேனும் செய்ய ஆசை படுவேன்,அதுவும் நல்ல அட்டையாக கிடைத்தால் சேர்த்து வைப்பேன்,ஏதாவது செய்ய ஆகும் என்று,அவ்வப்போது அதனால் திட்டும் வாங்குவேன்,வீட்டில் குப்பை சேர்க்கிறேன் என்று.

மெயில் ஒரு பொய் சொல்லீட்டீங்க அதிரா,நல்லா எனக்கு அனுப்பியதை வாசிங்கோ,
இப்பொழுது தான் அறுசுவைக்கு வந்தேன்,வந்தவுடன் இன்ப அதிர்ச்சி,இனி நாளை முதல் பகலில் வருவேன்,பிறகு மெயில் அனுப்பறேன்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தெளிவாக அழகாக விளக்கியிருக்கீங்க.சூப்பர்.இன்னும் நிறைய குறிப்புக்கள் எதிர்பார்க்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி இமா நிச்சயம் தருகிறேன்,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆசியா அக்கா நிச்சயம் கஷ்டபட்டுவிட்டேன்,இந்த விளக்கங்கள் எழுதி,படம் எடுப்பதற்க்குள்,அத்தனை குழப்பம் என்னுள்,போக போக சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்,நன்றி

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இன்னைக்கு உங்களோட ஃபோட்டோ ஃப்ரேம் செய்து பார்த்தேன்..நல்லா இருக்கு,வெள்ளை பேப்பர்ல செய்து வச்சு இருக்கேன்,இன்னும் கொஞ்சம் அதாவது ஏதாவது பூ இலை கட் பண்ணி ஒட்டனும், முடிஞ்சதும் ஃபோட்டோ எடுத்து அனுப்புறேன்பா..ரொம்ப நன்றி..எனக்கும் இனிமேல ஃபோட்டோ ஃப்ரேம் செய்ய தெரியும்னு சொல்லிக்கலாம்..

தாமரை இன்று தான் பார்த்தேன்,மன்னிக்கவும் லேட்டான பதிலுக்கு,செய்ததில் மகிழ்ச்சி,நானும் முதலில் வெள்ளை பேப்பரில் தான் செய்தேன்,முடியும் போது போட்டோ அனுப்புங்க பார்க்கறேன்

மீண்டும் மன்னிக்கவும்,தாமதமான பதிலுக்கு

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு ரேணுகா,
மூன்று நாட்கள் முன்பு என் மாணவர்களுக்கு (11,12 வயதானவர்கள்) ஒரு அரை மணி நேர வகுப்பில் இதைச் சொல்லிக் கொடுத்தேன். அளவுகளைக் கொஞ்சம் மாற்றினேன். ரிப்பன் பயன் படுத்தவில்லை. பின் பக்கம் கடதாசி ஒட்டுமுன் ஃப்ரிஜ் காந்தம் ஒட்ட வைத்தேன். கண்ணாடி வரவேண்டிய இடத்தில் OHP கடதாசி வெட்டிச் செருகினார்கள். ஸ்டிக்கர்கள், பூக்கள் ஒட்டி அலங்கரித்தார்கள். ஃப்ரேம்கள் அழகாக வந்தன. குழந்தைகள் மிகவும் ரசித்துச் செய்தார்கள். நல்ல கிஃப்ட் ஐடியா என்று சொன்னார்கள். :)
குறிப்புக்கு மிக்க நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இந்த செய்முறையை பார்த்து திருமதி. தாஹிரா பானு அவர்கள் செய்த போட்டோ ஃப்ரேமின் படம்

<img src="files/pictures/cardboard-photoframe.jpg" alt="picture" />

இமா மிக்க நன்றி இப்ப தான் பார்தேன்,நல்ல அலகரித்தால் அழகாக கிப்ட்டாகவே கொடுக்கலாம்,மீண்டும் நன்றி இமா முடிந்தால் படம் அனுப்புங்க

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தாஹீரா ரெம்பவே அழகு சூப்பரா இருக்கு,நானும் இப்படிதான் ஒன்னும் சமீபத்தில் செய்தேன்.நன்றிப்பா,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

திருமதி. இமா அவர்கள் இந்த செய்முறையில் சில மாற்றம் செய்து, சுவற்றில் மாட்டுவதற்கு பதிலாக போட்டோப்ரேமின் பின்புறம் காந்தம் வைத்து ப்ரிட்ஜில் ஒட்டும்படி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அவரது மாணவர் ஒருவர் அதைப் போல் செய்து காண்பித்த போட்டோ ப்ரேம் இது.

<img src="files/pictures/photo-frame-1.jpg" alt="picture" />

படத்துக்கும் குறிப்புக்கும் நன்றி அட்மின். :)

முன்பே படம் எடுத்து வைத்து விட்டு, அனுப்ப மறந்து இருக்கிறேன் ரேணு. :) தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா சூப்பரா இருக்கு,எதுக்கு இமா மன்னிப்பு,ரெம்ப அழகா செய்து இருக்காங்க
மறந்தாலும் ஞாபகம் வந்து அனுப்பினிங்களே வெரிகுட் ...மிக்க நன்றி இமா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta