சில்லி சிக்கன்

தேதி: January 24, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சிக்கன் துண்டுகள் – 6 (ஓரளவு பெரியதுண்டுகளாக எலும்புகளோடு எடுத்துக் கொள்ளவும்)
சில்லி சாஸ் – 1 1/2 - 2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி
காரட் – பாதி
பச்சை மிளகாய் – 2
பெப்பர் (சிவப்பு/பச்சை) – பாதி
சிவப்பு வெங்காயம் பெரியது – கால் பாகம்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு - சிறிது
எண்ணெய் – தேவையான அளவு


 

சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
காரட்டை தோல் சீவி, மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். பெப்பரை சதுரத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தில் ஒரு பகுதியை மெல்லிய துண்டுகளாகவும், மீதமுள்ளதை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சிக்கன் துண்டுகளை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் காரட் மற்றும் பெப்பரை போட்டு வதக்கவும்.
சில நிமிடங்கள் கழித்து அதனுடன் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சிறிது நேரம் வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்.
பின்னர் சில்லி சாஸை சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.
இறக்குவதற்கு முன் சோயா சாஸ் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்கு பிரட்டி விடவும்.
இறுதியில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
சுவையான சில்லி சிக்கன் ரெடி. இந்த குறிப்பினை செய்து காட்டியவர், கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான <b> செல்வி. விசா </b> அவர்கள். இவர் தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும் சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

very good

hello ramya

r u there?

விசா இதில் முன்றாவது ஸ்டெப் சிக்கனை எந்த மசாலாவும் போடாமல் அப்படியே பொரிக்கனுமா?
இந்த சில்லி சிக்கனும் வித்தியாசமாக இருக்கு.
ஜலீலா

Jaleelakamal

ஹலோ ஜலீலா மேடம்,
ஆமாம், எந்த மசாலாவும் சேர்க்கத்தேவையில்லை. அப்படியே பொரித்துவிட்டு பின்புதான் எல்லா சாஸும் சேர்ப்பது.

நன்றி,
விசா

Hi Visa,

If u don't mind, can u tell me which brand chilli sauce is good for this?

Thanks
Santhya

ஹலோ சந்தியா,
எந்த சில்லி பேஸ்ட்/சாஸாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிறேன்..ஆனால் எனக்கு Sambal Oelek (Ground fresh chili paste, சைனீஸ் சாப்பாடுகளில் உபயோகிப்பது) பிடிக்கும். நான் உபயோகிப்பதும் அதுவே.

அன்புடன்,
விசா

உங்களோட presentation nice.எப்பவும் படங்கள் தெளிவாக பார்ப்பதற்கு attractive -ஆக இருக்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹலோ ஆசியா உமர் மேடம்,
நன்றிகள் :-)

அன்புடன் விசா

where & when to put salt?

ஹலோ Rajji,
ஆறாவது ஸ்டெப்பில்தான் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்ப்பது.

அன்புடன் விசா