சிக்கன் ஹாரா மசாலா

தேதி: January 24, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் எலும்பில்லாதது - கால் கிலோ
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தயிர் - 100 மில்லி
ப்ரெஸ் சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்
க்ரீன் ஆப்பிள் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி இலை - 4 டேபிள்ஸ்பூன்
புதினா - 2 டேபிள்ஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் - ஒரு பன்ச்
உலர் திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

சிக்கனை சிறிய துண்டுகளாக்கி கழுவி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும்.
ஆப்பிளை தோல் சீவி சிறிய துண்டுகளாக்கவும்.
ஆப்பிள் 3 டேபிள்ஸ்பூன், மல்லி இலை, 2 டேபிள்ஸ்பூன் புதினா, தயிர், ஃப்ரெஷ் சீஸ், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு, உப்பு, சர்க்கரை எல்லாம் மொத்தமாக போட்டு பல்ப் பண்ணிக்கொள்ளவும்.
நாண்ஸ்டிக் கடாயில் எண்ணெய் சூடு பண்ணி அரைத்த கலவையை போட்டு 2 நிமிடம் சூடு பண்ணவும்.
அதனுடன் சிக்கன் துண்டு சேர்த்து சிம்மில் 15 நிமிடம் வேக விடவும்.
வெந்த பின்பு உலர் திராட்சையை சேர்த்து மீதி இருக்கும் மல்லியை தூவி பரிமாறவும்.
சுவையான சிக்கன் ஹாரா மசாலா ரெடி.


இதை நாண், சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ் உடன் சைட் டிஸ் ஆக பரிமாறலாம். பார்ட்டியில் செய்து வைத்தால் எல்லோர் கவனத்தையும் கவரும். நான் முன்பு ஒரு டீவி சேனலில் பார்த்தது.

மேலும் சில குறிப்புகள்