தேதி: January 26, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா - 2 கப்
பால் - 3/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
சீரகம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
மைதாவுடன் நெய்யை பிசறிக் கொள்ளவும்.
வெதுவெதுப்பான பால், உப்பு, சீரகம் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு பெரிய உருண்டை செய்து சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்க்கவும்.
தேய்த்த மாவை கத்தியால் சின்ன டைமண்ட் வடிவத்தில் கோடுகள் போடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடேறியதும், நறுக்கி வைத்த துண்டுகளை மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
கடைசியாக கறிவேப்பிலை பொரித்து நொறுக்கிப்போடலாம்.
விரும்பினால் காரத்திற்கு சில்லி ஃபிளேக்ஸ், மிளகாய்த்தூள், சாட்மசாலா எதாவது ஒன்றினையும் சேர்க்கலாம்.