எனது தோழிக்கும் அவளுடைய கணவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை.

எனது தோழி abortion செய்துவிட்டாள். ஊருக்கு போய் திரும்பி வந்துள்ளாள். இப்போது ஒரு புதிய பிரச்சினை தொடங்கியுள்ளது. நான் ஏற்கனவே சொன்னேன் அவளுடைய கணவர் அவளுக்கு எந்த உதவியும் செய்வதில்லை என்று. ஏற்கனவே இருவருக்கிடையேயும் கருத்து வேற்றுமை இருந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். ஆனால் திருமணத்துக்கு பிறகு கணவர் அவளை எடுத்தெறிந்து நடந்து கொள்வதால் இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இப்போது அவள் abortion செய்ததும் அவருடைய விருப்பத்தை கேட்டுதான். ஆனால் abortion பண்ணிய பிறகு அது அவருடைய பிள்ளை இல்லை. அதனால் தான் abortion பண்ண வேண்டும் என்று துடித்தாய் என்று சண்டை பிடித்து இப்போது அவளுடன் கதைப்பது கூட இல்லையாம். ரொம்ப கவளைப்பட்டு அழுதாள். ஏன் தான் மனிதர்கள் இப்படியெல்லாம் இருக்கிறார்களோ. பாவம் அவள் அவளுடய இயலாமையா abortion பண்ணிவிட்டு அந்த வருத்தத்தில் கூட அவளுடன் சண்டை போட்டு ..... இப்படியும் மனிதர்களா? அவர்கள் இருவரும் அவருடைய அம்மா வீட்டில் இருப்பதால் எதற்கும் அவளை எதிர்பார்க்காமல் அம்மாவோடு மட்டும் கதைத்துக்கொண்டிருக்கிறாறாம். பாவம்.

தோழி.. இது போன்ற சமயங்களில் அழுவது உங்கள் தோழியின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. ஆண்கள் கல் மனம் படைத்தவர்கள். அதனால் தான் "கல் ஆனாலும் கணவன்"னு சொன்னாங்க போல. உங்க தோழியை தைரியமாக இருக்க சொல்லுங்கள். கணவர் முன் அழ வேண்டாம் என்றும் சொல்லுங்கள். ஆண்கள் முன் பெண்கள் என்றும் அழ கூடாது, அது அவர்களுக்கு அந்த பெண்ணின் வீக் பாயின்ட்டை காட்டிவிடும். தைரியமாய் கணவர் முன் வாழ்ந்து காட்டுவதே அவருக்கு பாடமாய் அமையும். அவர் கவலை படவில்லையே மனைவியிடம் பேசாமல் இருக்க.... பின் உங்கள் தோழிக்கு மட்டும் ஏன் வருத்தம்?! இருவர் மனதிலும் இருப்பதற்கு பெயர் தான் காதல்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழிகளே கர்ப்பமக இர்க்கும் பெண்கள் குங்கும பூ சாப்பிடலாமா

வேணி தாராளமா சாப்பிடுங்கோ.ஆனா குழந்தை வெள்ளையா பிறக்கும் எண்டு மூட நம்பிக்கை வைக்காதீங்கோ.
குங்குமப்பூ தாய்க்கும் பிள்ளைக்கும் இரத்த விருத்திக்கு நல்லது.இது கொஞ்சம் விலை அதிகம் இரத்தத்துக்கு நல்லது எண்டு சொன்னா கேக்கமாட்டீங்கள் அதால தான் வெள்ளைகுழந்தை பிறக்கும் எண்டு சொல்லினம்.
ஒரு டாக்டர் [குமுதம்]உரையில் கேட்ட யாபகம் அவா தன்னட்ட வார பேஷண்ட் ’டாக்டர் குங்குமப்பூ சாப்பிட்ட குழந்தை நல்ல கலரா சிவப்பா பிறக்குமா எண்டு கேட்டா அப்போ கீரை சாப்பிட்டா பச்சையா பிறக்குமா எண்டு கேப்பாவாம்.

நீங்கள் பாலில் போட்டு ஒவ்வொருநாளும் குடிக்கலாம்.நல்லது.
சுரேஜினி

’’நம்ப நட நம்பி நட’இது வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.சந்தேகம் என்பது நோய் கணவனுக்கோ மனைவிக்கோ வந்துவிட்டால் அதை முளையிலேயே கிள்ளி எறிவது அவசியம்.

அபோஷன் ஆகுவதற்கு மருந்து வேண்டிக்கொடுத்தது அவர் கணவர் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறீங்கள். அப்படியிருக்க எப்படி முழுப்பழியையும் இந்த பெண்மீது போடலாம்.அவர் அபோஷன் செய்த டாக்டரிடம் போய் உங்கள் மெடிக்கல் றிப்போட்டின்படி இதுக்கு ஏதாவது ப்ரூ கிடைக்குமா என்று முயற்சி செய்யவும்.ஒருவருடைய சந்தேகத்தை ஆதாரங்களுடன் உண்மையை நிரூபிக்கும்போது சந்தேகம் என்ற பேருக்கான எதிர்விளைவுளை அவர்கள் அறிந்து கொண்டு திருந்த ஏதுவாகும்.இது உங்கள் பக்கம் ஒரு பலத்தையும் சந்தேகத்திற்குரியவருக்கு பலகீனத்தையும் ஏற்படுத்துமாதலால்முடிந்தால் முயற்சிக்கவும்.

சுரேஜினி

பதிலளித்தவர்களுக்கு நன்றி. அவளுடைய மனவேதனையை சொல்லி அழுததால் என்னால் முடிந்த ஆறுதலை சொன்னேன். ஆனால் அவளுடைய குடும்பத்தை விட்டு வந்து கணவனையே நம்பி வந்தவளுக்கு இப்படியொரு சோதனை வந்தது மிகவும் கவலையாக உள்ளது. இப்போது அவளுடைய கணவர் கதைப்பது கூட இல்லை. நீ என் குழந்தையை கொன்றுவிட்டாய் என்று திட்டுகிறாறாம். என்ன கொடுமை. பாவம் அவள். அழுது அழுது துரும்பாக இளைத்துவிட்டாள்.

Lalitha

வாழ்க வளமுடன்.

வாழ்க வளமுடன்.

வனிதா நீங்கள் சொல்வது அணைத்து ஆண்களயும் கல் என்று இது முற்றிலும் தவறு சில பேர் நல்லா குணம் வுள்ளவர் களும் கண்டிப்பா ஆண்களில் உள்ளனர் உங்கள் மனதை நான் புண் படுத்தும் படி கருத்து சொல்லி இருந்தால் மன்னிக்கவும்

ஆஹா... என்றோ யாருக்கோ அவர் தோழியின் கணவர் பற்றி சொன்ன கருத்துக்கு இன்று எதிர்ப்பா??? நியாயமா??? நான் பாவம்பா. நான் எல்லாரையும் சொல்லலங்க... அவங்க தோழியின் கணவரி பற்றி தான் சொல்லிருக்கேன். இதுல மற்றவர் வருந்த ஏதும் இல்லை. எல்லாரையும்னு சொன்னா அதுல என் கணவரும் அடங்குவாரே!!! எப்படி சொல்ல... அவர் அன்பை நான் மறப்பேனோ??? நான் அவர் தோழிக்காக சொன்ன கருத்து உங்க மனசை காயப்படுத்தி இருந்தா மன்னியுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் தோழிக்காக கேட்கிறேன்.. அவளின் கோபமும் பதட்டமும் நியாயமா என்று புரியவில்லை.. ஆனால் மிகவும் பயப்படுகிறாள்.. எனக்கு சமாதானம் செய்ய தெரியவில்லை.. உங்களிடம் ஷேர் செய்தால் ஏதேனும் வித்தியாசமான கண்ணோட்டம் மற்றும் தீர்வு கிடைக்கும்.. நடந்ததை சொல்கிறேன்.. அவளுக்காக உதவுங்கள்.. பெயர் குறிப்பிட விருப்பம் இல்லை..

என் தோழிக்காக கேட்கிறேன்.. அவளின் கோபமும் பதட்டமும் நியாயமா என்று புரியவில்லை.. ஆனால் மிகவும் பயப்படுகிறாள்.. எனக்கு சமாதானம் செய்ய தெரியவில்லை.. உங்களிடம் ஷேர் செய்தால் ஏதேனும் வித்தியாசமான கண்ணோட்டம் மற்றும் தீர்வு கிடைக்கும்.. நடந்ததை சொல்கிறேன்.. அவளுக்காக உதவுங்கள்.. பெயர் குறிப்பிட விருப்பம் இல்லை..
என் தோழியின் கணவரின் நெருங்கிய நண்பரின் தங்கை அந்த பெண்..

அந்த பெண்ணிற்கு வயது 40,ஆனால் பார்க்க 25வயது பெண் மாதிரி இருப்பார்.. அவருக்கு ஒரு மகன் 15வயதில் இருக்கிறான்.. அந்த பெண் கணவரை பத்து வருடம் பிரிந்து இப்போது பெயருக்கு சேர்ந்து வாழ்கிறாள்..

என் தோழியின் கணவர் நண்பன் வீட்டுக்கு அடிக்கடி செல்வார்.. இவருக்கு அங்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு..

அதனால் நன்பரின் தங்கை இவரிடம் மொபைல் நம்பர் வாங்கி உள்ளார்.. என் தோழியின் கணவருக்கு வயது 33..ஆனால் 27வயது போல தான் இருப்பார்..

என் தோழியின் கணவர் எதையும் இவளிடம் மறைக்க மாட்டார்.. ஒரு மெசேஜ் வந்தாலும் இருவரும் சேர்ந்து படித்து சிரிப்பது வழக்கம்..

என் தோழி தன் அம்மா வீட்டுக்கு ஒரு மாதம் சென்றுள்ளார்.. திரும்பி வந்து அவளும் அவள் கணவரும் பேசி கொண்டு இருந்தார்.. நிறைய மெசேஜ் கணவரின் மொபைலுக்கு வந்து கொண்டு இருந்தது.. தோழி வழக்கம் போல கணவருடன் சேர்ந்து பார்த்தாள்.. மெசேஜ் அனைத்தும் அந்த பெண்ணிடம் இருந்து வந்தது.. அனைத்தும் பார்வேர்ட் மெசேஜ், பொதுவான மெசேஜ்.. ஆயிரத்திற்கும் மேல் மெசேஜ்.. பாதி இவள் கணவர் open செய்ய வில்லை.. எதற்கும் பதிலும் அனுப்பவில்லை..

தோழிக்கு மிகவும் கோபம் வந்தது.. கணவரிடம் இவர் ஏன் உங்களுக்கு இப்படி மெசேஜ் பன்னுகிறார் என்று கேட்டால் .அவங்க சும்மா அனுப்புறாங்க, அதுவும் என் நண்பனின் தங்கை.. தவறாக நினைக்காதே என்றார்.. இவளும் பெரிதாக எடுக்கவில்லை..

நேற்றைய முன் தினம் என் தோழிக்கு மூன்றாவது திருமண நாள். அவரது நண்பர் மாலையில் வீட்டிற்கு அழைத்து இருந்தார்.. என் தோழியும் அவள் கணவரும் நண்பர் வீட்டுக்கு சென்றார்(நண்பரின் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்க)..

அங்கு அவர் தங்கை ஊரிலிருந்து வந்து இருந்தார்.. அந்த பெண்ணிற்கு இவர்களுக்கு திருமண நாள் என்று தெரியும்..
என் தோழி கணவருடன் வீட்டிற்குள் சென்றாள்.. உடனே நண்பரின் தங்கை ஓடி வந்து என் தோழியின் கணவரின் கையை பிடித்து குழுக்கி திருமணநாள் வாழ்த்துக்கள் என்றாள்..

இது சாதாரணம் என்றாலும் என் தோழியை அந்த பெண் கண்டு கொள்ள வில்லை.. அருகில் இருந்த இவளுக்கு வாழ்த்துக்கள் எதுவும் சொல்ல வில்லை..இவளுக்கு ஒருமாதிரி ஆகி விட்டது..ஆனால் அந்த பெண் அடிக்கடி எந்த function என்றாலும் இவள் கணவருக்கு போன் செய்து வாழ்த்துகிறாள்..

என் தோழி கொஞ்சம் பயப்படுகிறாள்.. இதற்கு என்ன தீர்வு..

மேலும் சில பதிவுகள்