வாழ்த்து அட்டை செய்முறை - 4

தேதி: January 27, 2009

3
Average: 3 (2 votes)

இந்த வாழ்த்து அட்டை செய்முறையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இங்கே செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை. இதை நீர்வீழ்ச்சி வாழ்த்து அட்டை என்பார்கள். இதை ஒரு Art fair-ல் பார்த்துவிட்டு வந்து புத்தகங்கள், வலைத்தளங்கள் எல்லாம் தேடி கண்டுப்பிடித்து செய்து பார்த்து அதை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

 

வெறும் வாழ்த்து அட்டை & உறை
வர்ண கடுதாசி/அட்டை
சிறிய படங்கள் (பூக்கள், பறவைகள், பழங்கள், பூச்சிகள், etc)
பசை/கோந்து
கத்தரிக்கோல்
ரிப்பன்

 

பாப்-அப் வாழ்த்து அட்டை செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
ஒரு வர்ண அட்டையை வெறும் வாழ்த்து அட்டையின் மேல் வைத்து அதன் மூன்று பக்கங்களிலும்(மேலே, கீழே, வலப்புறம்) அரை அங்குல இடைவெளி இருக்கும்படி விட்டு தேவையான அளவு வெட்டிக் கொள்ளவும். விரும்பினால் அந்த வர்ண அட்டையின் அடிப்பகுதியில் டிசைனர் கத்தரிகோலால் வெட்டி விடலாம்.
பிறகு வாழ்த்து அட்டையின் நடுப்பகுதியில் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு அங்குல இடைவெளியில் இரு ஒரு அங்குல கோடுகளை வரைந்து வெட்டவும்.
அதனை படத்தில் காட்டியுள்ளது போலவே உள்நோக்கி மடித்து விடவும்.
பின்னர் வெட்டிய வர்ண காகிதத்தை வாழ்த்து அட்டையின் மேல் வைத்து ஒட்டவும்.
அதன் மேல் ரிப்பனை படத்தில் உள்ளது போல் ஒட்டி அலங்கரித்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு சிறிய நீள்சதுர/சதுர அட்டையில் (2" x 3" அல்லது 2" x 2") பிடித்தமான படத்தை வைத்து ஒட்டவும். (பூ/பறவை/மிருகம் etc.,)
இதனை ரிப்பன்கள் சந்திக்கும் இடத்தில் வைத்து ஒட்டி அதன் மேல் சிறிய பூக்கள், இலைகளை வைத்து ஒட்டி அழகாக்கவும்.
பின்னர் ஒரு சிறிய துண்டு அட்டையில் உங்களுக்கு விருப்பமான வாசகங்களை எழுதி அல்லது ஸ்டாம்ப் செய்து வாழ்த்து அட்டையின் உள்புறத்தே மடித்த பகுதியில் வைத்து அடியில் ஒட்டவும்(மடிக்கும் போது எளிதாக இருக்க வேண்டும்). எளிமையான முறையில் பாப்-அப் வாழ்த்து அட்டை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஹலோ நர்மதா அக்கா,
சூப்பராய் அழகாய் இருக்கிறது உங்கள் வாழ்த்து மடல் :-)

அன்புடன்,
விசா

நர்மதா, உங்கள் எல்லா வாழ்த்து அட்டைகளுமே அழகாக இருக்கின்றன. உங்கள் ஐ டீ இங்கு எங்காவது கொடுத்திருக்கிறீர்களா? அட்மின் பிசியாக இருப்பதால் கேட்கக் கஷ்டமாக இருக்கிறது. லயா எப்படி இருக்கிறா?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அன்பின் விசா, இமா, பாராட்டுக்கு நன்றி. இமா இ.தோ.ச பாகம் பாகம் 4 இல் கொடுக்கிறேன் பாருங்கள்.
-நர்மதா :)

நர்மதா,
வாழ்த்து அட்டை செய்முறை மிக அழகாகவும் சுலபமாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
செபா.

நர்மதா அருமையான வாழ்த்து அட்டை.
எப்படி உங்களுக்கு இவ்வளவு பொருமையா செய்ய டைம் கிடைக்குது.

ஜலீலா

Jaleelakamal

நர்மதா,
இ.தோ.ச. பா-4 பார்த்தேன். நன்றி. உங்கள் பதில் வரும் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ;-)
இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta