சத்து மாவு

சத்து மாவு கஞ்சி பவுடரில் என்ன என்ன செர்ப்பார்கள்?

அதை யார் வேண்டுமானாலும் குடிக்கலாமா?

அதில் எள்ளு செர்ப்பார்கலா? குழந்தையை எதிர் பார்ப்பவர் குடிக்கலாமா. கூறுங்கள் please........

ஹாய் பிரபாதாமு,
எப்படி இருக்கீங்க? நான் நலம்.. உங்க பதிவை இப்போதுதான் பார்த்தேன் சத்துமாவு கஞ்சியில் ராகி,கோதுமை,அரிசி,பொட்டுக்கடலை,பாதம்,பிஸ்தா,ஏலக்காய்,மக்கசோளம்,பார்லி,கம்பு ,கொள்ளு,கசகச,முந்திரி ,பயறு இவை எல்லாம் சேர்ப்பார்கள்.இதில் எள்ளு சேர்க்கமாட்டார்கள் .இதை யார் வேண்டுமானலும் குடிக்கலாம்.இது உடம்பிற்கு நல்லது அதுவும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.

என்றும் அன்புடன்,
மைதிலிபாபு.

Mb

ஹாய் பிரபாதாமு,
எப்படி இருக்கீங்க? நான் நலம்.. உங்க பதிவை இப்போதுதான் பார்த்தேன் சத்துமாவு கஞ்சியில் ராகி,கோதுமை,அரிசி,பொட்டுக்கடலை,பாதம்,பிஸ்தா,ஏலக்காய்,மக்கசோளம்,பார்லி,கம்பு ,கொள்ளு,கசகச,முந்திரி ,பயறு இவை எல்லாம் சேர்ப்பார்கள்.இதில் எள்ளு சேர்க்கமாட்டார்கள் .இதை யார் வேண்டுமானலும் குடிக்கலாம்.இது உடம்பிற்கு நல்லது அதுவும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.

என்றும் அன்புடன்,
மைதிலிபாபு.

Mb

நன்றி .... மைதிலி அக்கா எப்படி இருக்கிங்க. எனக்கு பதில் தந்ததுக்கு மிக்க நன்றி. அதில் கெள்ளு சேர்த்து இருப்பதாக செல்லுகுரிர்கள். அது சூடுதான பரவாயில்லையா. நான் சாப்பிடலாமா.... செல்லுங்கள் please....

நான் குழந்தைக்கா எதிர்பாத்து காத்துக்கிட்டு இருக்கேன் அதனால்தான் கேட்டேன்.
தவறு இருந்தால் மன்னிக்கவும்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

சத்து மாவு பாக்கெட்டில் ப்ரத்யேகம் எழுதியிருக்கும் கர்பினிகளுக்கு மிகவும் நல்லது என்று..சில மருத்துவமனைகளில் எழுதியே தருவார்கள் சத்து மாவை

சத்துமாவு தயாரிப்பதில் பாசிப்பயறு, உடைத்தகடலை, கோதுமை, கேழ்வரகு, பார்லிஅரிசி, கம்பு, தினை, கொள்ளு தவிர எல்லாவற்றையும் 100கி அளவில் வாங்கி
சிறுதீயில் வறுக்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, ஏலக்காய் போன்றவற்றை 10கி அலவில் வாங்கி வறுத்து சேர்த்து அரைக்கலாம். குழந்தை எதிர்பார்ப்பவர்கள் கொள்ளு சேர்க்கவேன்டாம்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

பிரபா நான் நல்லா இருக்கேன். என்னை அக்கா என்று கூப்பிட்டதற்கு சந்தோஷ்மாக இருக்கிறது.
சத்து மாவில் கொள்ளு சேர்க்காமல் சாப்பிடுங்கள்.
நீங்கள் குழந்தைக்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கிறிர்கள் என்று கூறினிர்கள்.
நேரம் காலம் கூடிவரும் எல்லாம் நல்லபடியாக நடக்கும். சந்தோஷ்மாக இருங்கள்.
உங்களுக்காக நான் கடவுள்கிட்ட பிராத்தனை செய்கிறேன். மன்னிக்கவும் என்று சொல்ல வேண்டாம் . பிரபா....,ஓகே..:-)).

என்றும் அன்புடன்,
மைதிலிபாபு.

Mb

தாளிக்கா அக்கா எப்படி இருக்கிங்க. உங்க குழந்தை எப்படி இருக்கு. எனக்கு பதிவு போட்ட உங்கலுக்கு என்னுடைய நான்றிக்கா..... நான் குழந்தையை எதிர்ப்பார்த்து இருப்பதால் தான் கேட்டேன்.

சரஸ்வதி அக்கா எப்படி இருக்கிங்க. உங்க பதிவு பார்தேன் நான்றிக்கா.....

மைதிலி அக்கா எப்படி இருக்கிங்க நான் அக்கா கூப்பிட்டது உங்கலுக்கு சந்தேஷம் என்றால் எனக்கு ரேட்டிப்பு சந்தேஷம். உங்க பிராத்தனைக்கு நான்றிக்கா......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா அப்படி ஒரு பயம் இருந்தால் அவர்கள் சொல்லுவது போல கொள்ளு தவிர்த்து செய்யுங்கள்..ஆனால் அப்ப்டியெல்லம் பொடிக்க சிரமம் இல்லையா?என் மருத்துவர் ஊரில் கட்டாயம் முதல் 4 மாதம் சத்து மாவு தினசரி காலை ப்ரேக்ஃபாஸ்டுக்கு முன்பு குடிக்க சொன்னார்.இம்முறை நானே நிரபராமாவில் சத்து மாவு வாங்கி அடிக்கடி காய்ச்சி குடிப்பேன்..அது சுடுபாலில் கலந்து குடித்தால் போதும்.நல்லபடியாக குழந்தையை பிரசவிக்க வாழ்த்துக்கள்

இதில் வறுப்பது அவ்வளவு கஷ்டம் இல்லை. சிங்கப்பூரில் இருக்கிறீர்கள் என்று உறுப்பினர் பக்கம் பார்த்தேன். அங்கே இந்தியா போல் மிஷின் இருக்கிறதே. சந்தேகம் இருந்தால் குழந்தை எதிர்பார்ப்பவர்கள் ஏன் மாவை வாங்கி சாப்பிட. நாமே தயாரித்து அரைத்தால் சந்தேகமில்லாமல் தைரியமாக சாப்பிடலாம். சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

தாளிக்கா அக்கா, சரஸ்வதி அக்கா ரொம்ப நன்றிக்கா.......

தாளிக்கா அக்கா நீங்கலும், ரீமாகுட்டியும், வயதுக்குல்ல இருக்குர குட்டி பாப்பாவும் நல்லா இருக்கா.... உங்க உடம்ப பாத்துக் கோங்கக்கா.....

சரஸ்வதி அக்கா எப்படி இருக்கிங்க. உங்க கிட்ட பேசுனது ரொம்ப சந்தேஷம். உங்கலுடைய ஆருதலான் வார்த்தை மனதுக்கு தொம்பு கெடுக்குரது. அதற்க்கு நன்றிக்கா........
அக்கா நீங்க சென்னா மாதிரி நான் சத்துமாவு கஞ்சி அரைத்து தான் குடிக்கிரேன்.

மைதிலி அக்கா
தாளிக்கா அக்கா
சரஸ்வதி அக்கா.

அனைவருக்கும் நான்றிகள் பல.......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்