போளி

தேதி: January 29, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 1 கப்
கடலைப் பருப்பு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் - 3
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் கலர் - சிறிதளவு(தேவையானால்)
நெய் - 1 மேசைக்கரண்டி + 1 மேசைக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். வெல்லத்தினை தூளக்கி கொள்ளவும். ஏலக்காயினை சர்க்கரையுடன் சேர்த்து பொடித்து வைக்கவும்.
கடலைப் பருப்பினை 15 நிமிடம் ஊறவைத்து பின் தண்ணீரில் போட்டு வேகவைக்கவும்.
கடலைப் பருப்பு நன்றாக வெந்த பிறகு தண்ணீரினை வடித்து சிறிது நேரம் காயவிடவும்.
ஒரு நாண் ஸ்டிக் கடாயில் வெல்லத்தினை போட்டு 3 நிமிடம் வைக்கவும்.
ஆறவைத்துள்ள கடலைப்பருப்பினை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற கூடாது). இதனை வெல்லத்துடன் சேர்த்து கிளறவும்.
அடிக்கடி சிறிது சிறிதாக நெய்(1 மேசைக் கரண்டி) சேர்த்து வெல்லம் கரையும் வரை கிளறவும். கடைசியில் பொடித்து வைத்துள்ள ஏலக்காயினை சேர்த்து கிளறவும்.
இப்பொழுது ஸ்டஃபிங் ரெடி.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, மஞ்சள் கலர் மற்றும் எண்ணெய் உடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
இப்பொழுது ஸ்டஃபிங் சிறிது நெய்யினை கையில் தொட்டு கொண்டு சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும். ஸ்டஃபிங் உருண்டைகளாக அளவு போலவே மைதா மாவில் உருண்டைகள் செய்யவும் மைதா மாவினை சப்பாத்தி உருட்டுவது போல் உருட்டி அதன் நடுவில் ஸ்டஃபிங்கை வைத்து நன்றாக முடி திரும்பவும் உருட்டி கொள்ளவும்.
தோசைக் கல்லினை காயவைத்து அதில் செய்து வைத்துள்ள போளியை போட்டு வேகவிடவும்.
ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு மற்ற பக்கம் திருப்பி போட்டு சிறிது நெய் ஊற்றி வேகவிடவும்.
இப்பொழுது சுவையான போளி ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்களின் இந்த போளியை நேற்று செய்து பார்த்தேன்.சாப்பிட சுவையாய் இருந்தது.நான் முன்பு ஒருமுறை போளி செய்த போது வெல்லத்தை கரைக்க சிறிது தண்ணீர் சேர்த்துவிட்டேன்.இந்த முறை உங்கள் குறிப்பில் உள்ளது போல் சிறிது நெய் சேர்த்து வெல்லத்தை கரைத்துவிட்டு,அதே போல் க.பருப்பை நல்லா ஆறவிட்டு அரைத்தேன்.அருமையா நீர்தன்மை இல்லாம உருண்டை பிடிக்க வசதியா இருந்தது.

உங்களிடம் சிறிது சந்தேகத்தை கேட்க வேண்டும்.இதில் வெல்லத்தில் உள்ள மண்ணை எப்படி நீக்குவது.ஏனென்றால் நேற்று சில போளிகளில் நற நறன்னு மண் மாதிரி வாயில் பட்டது.அதை போக்க வழி என்ன?கொஞ்சம் நீர் சேர்த்து வடிகட்டி சுண்ட வச்சு க.பருப்பை சேர்த்தால் சுவை மாறுமா?

இதனை நான் சும்மாவே சாப்பிட்டேன்.ரொம்ப அருமை.இதற்கு சைட் டிஷ் வைக்க வேணும்னா எதை வைக்கலாம்?

தங்களின் குறிப்புக்கு நன்றி.

மிகவும் நன்றி சுகன்யா.
எனக்கும் போளி என்றால் மிகவும் பிடிக்கும். இதனை செய்வது மிகவும் சுலபம் ஆனால் என்ன கொஞ்சம் நேரம் எடுக்கும் அவ்வளவு தான்.
நான் இதுவரை வெல்லத்தினை கரைத்து கொண்டு சேர்த்த்து இல்லை…ஆனால் நீங்கள் அப்படி சேர்த்தாலும் ஒன்றும் அவ்வளவாக வித்தியாசம் இருக்காது..ஆனால் என்ன நன்றாக தண்ணீர் வற்றவிட்ட பிறகு உருண்டைகள் பிடிக்கவும். அப்பொழுது தான் உருண்டைகள் நன்றாக வரும்.
இதன் செய்முறை படத்தினை அனுப்பியே குறைந்த்து 1 மாதமாவது இருக்கும்..ஏனே இன்னும் இதனை வெளியிடவில்லை…
இதற்கு Side dishஆக எதுவும் இல்லை..இதனை அப்படியே சாப்பிட வேண்டும்..
பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதாச்சல் அவர்களுக்கு
நேற்று உங்களின் போளி செய்தேன் .அதில் சிறிது வறுத்து தேங்காய் சேர்த்தேன். இனிப்பு சற்றும் பிடிக்காத ஏன் 6 வயது மகன் ஒன்று சாப்பிட்டான்.நன்றி
அனிதா அருண்