HI DEVA AND SINTHU

Hi எனக்கு sensitive skin.
மாய்ஸ்சுரைஸிங் லோஷன்
ப்வுண்டேஷன்
பேஸ் காம்பாக்ட் பவுடர்
ஐ ஷேடோ
மஸ்காரா
இதெல்லாம் எந்த brand வாங்கனும்.
தற்போது நான்
1) முகத்திற்கு - Johnson's baby sorbolene cream,
2) Body lotion - Johnson's dreamy skin - Aromasoothe with Moonflower for all types skin,
3) Powder - Johnson's baby powder,
4) Soap - Dove
5) Sampoo & Conditioner - Garnier fructis - reinforced active fruit concentrate-oily roots, dry ends
6) Body wash - Dove cucumber & green tea fragrance.

பாவித்து வருகின்றேன். எனக்கு தலையின் பொடுகு உள்ளது. அதனால் 3 நாட்களிற்கு ஒருமுறை தலைக்கு குளிப்பேன்.

ஹாய் தீப்தி,
உங்க ஸ்கின் சென்சிட்டிவ்னு சொல்லி இருக்கறதால, நீங்க வழக்கமா உபயோகப்படுத்தற ஜான்சன் லோஷனையே மேக்கப்புக்கு பேசா(Base) யூஸ் பண்ணுங்க. உங்களுக்கு எந்த பிராண்டு சரிவரும், எதுல அலர்ஜி ஏற்படும்னு மருத்துவரால கூட டெஸ்ட் பண்ணாம சொல்ல முடியாது. அதனால நல்ல தரமான பிராண்டா பார்த்து பவுண்டேஷன், காம்பாக்ட் பவுடர், ஐஷேடோ, மஸ்காரான்னு வாங்குங்க. எனக்கு சில தரமான பிராண்டுகளே அலர்ஜி ஏற்படுத்தும். இதற்கு சரியான வழி, காஸ்மெட்டிக் கடைக்கு போகும் முன்பு நல்லா முகம் கழுவிட்டு எந்த மேக்கப்பும் போடாம போங்க. போகும்போது கையோட கொஞ்சம் காட்டன் பால்சும், டிஷ்யூவும் எடுத்துட்டுப் போங்க. உங்க நிறத்துகேற்ற பவுண்டேஷனை தேர்ந்தெடுத்து, அதை உங்கள் விரலால் முகத்துக்கு தடவுங்கள். பிறகு டிஷ்யூ அல்லது காட்டன் பால்சால் உங்கள் நிறத்துக்கேற்ற காம்பாக்ட் பவுடரை தொட்டு அதுக்கு மேலே லேசா அப்ளை பண்ணுங்க. கொஞ்சம் கையின் மேல் புறத்திலும் தடவுங்க. அதோட வீட்டுக்குப் போய் கழுவாம இரவு வரை வெச்சிருந்து பாருங்க. அலர்ஜி எதுவும் வரலன்னா அது உங்க ஸ்கின்னுக்கு சரியா வரும்னு அர்த்தம். அடுத்த முறை சென்று ஐஷேடோவும், மஸ்காராவும் ட்ரை பண்னி கண்டு பிடிங்க. இப்படி டெஸ்டிங் பண்ணிட்டு வாங்கறதால உங்களுக்கு பணமும் வீணாகாது. இந்தியன் சருமத்துக்கு ஏற்ற மேக்கப் ப்ராடக்ட்ஸ்னு ஏற்கனவே ஒரு பதிவு மன்றத்தில் அழகு குறிப்புகள் பகுதியில் எழுதி இருக்கேன். படிச்சுப் பாருங்க. எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்க. அதுல உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்னு நம்பறேன்.

இப்போ Maybelline ல் Minerals வந்திருக்கு. அது போன்ற மினரல் கலெக்ஷன் வாங்கிக் கொண்டால் பவுண்டேஷன், பவுடர்னு சேர்ந்து வாங்கின மாதிரி ஆயிடும். மினரலஸ் மேக்கப் உபயோகிக்கும்போது பவுடர் தேவையில்லை. Loreal, Avon லும் Minerals ரொம்ப நல்லா இருக்கு.

நலமா இருக்கீங்களா. மகன் வெங்கட் எப்படி இருக்கார். கெட்டூகெதர் அன்று உங்களிடம் பேச முடியவில்லை. வருத்தமாக இருந்தது. தேவா நான் லாக்மே (பவுண்டேஷன், காம்பாக்ட் பவுடர், மஸ்காரா) ப்ராடக்ட்ஸ்தான் யூஸ் பண்ணுகிறேன். பேஸ் (base) முதலில் ஒலே யூஸ் பண்ணினேன் ரொம்ப பரு வரவும் நீங்கள் சொல்லியபடி திரும்பவும் பேர் அன் லவ்லி யூஸ் பண்ணுகிறேன். ஆனால் இப்பவும் பரு நிறைய வருகிறது. பரு வந்தாலும் பயங்கரமாக வலிக்கிறது. பெருசா இருக்கு. இரண்டு கன்னத்திலும் அசிங்கமா நிறைய வருது. நெற்றி, நாடி எல்லாம் கூட விட்டு வைக்கல. என் சிறு வயது முதல் எனக்கு பரு வந்ததே கிடையாது தேவா. நான் மேக்கப் ப்ராடக்ட்ஸ் எல்லாம் இப்போழுதான் யூஸ் பண்ணுகிறேன் அதுவும் தினமும் அல்ல. கிளியரசில் பேஸ்வாஷ் உபயோகிக்கிறேன். ஆனால் எந்த மாற்றமும் இல்லை. எனக்கு ஆலோசனை கூறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

Thanks DEVA, வாங்கி பாவித்து விட்டு சொல்கிறேன் எப்படி உள்ளது என.

எப்படி இருக்கீங்க? உங்க செல்லப் பொண்ணு அஃப்ரா எப்படி இருக்கா? என் பையன் வெங்கடேஷ் நல்லா இருக்கான். இந்தியா பயணமெல்லாம் எப்படி இருந்தது? உங்களுக்குப் பிடிச்ச ரமணிச்சந்திரன் நாவல்கள் 120 போல சிடியில் ஸ்டோர் பண்ணிட்டேன். இந்தியா வரும்போது அட்மின்கிட்ட கொடுத்துடறேன். நீங்க போனால் வாங்கிக்கோங்க.

உங்க பருத்தொல்லைக்கு நாம சாப்பிடற சாப்பாடு மற்றும் சில காஸ்மெட்டிக் ஒவ்வாமை கூட காரணமா இருக்கலாம். முதல்ல வாரம் ஒரு முறை முல்தானிமட்டி, எலுமிச்சை சாறு, கடலைமாவு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள் கலந்த பேக்கை தொடர்ந்து போட்டுட்டு வாங்க. முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையை முல்தானிமட்டி சுத்தமா எடுத்துடும். உங்களுக்கு பருக்கள் முற்றிலும் போன பிறகு பேக் போடுவதை 15 நாளைக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ என்று மாற்றிக் கொள்ளுங்கள். இது நிச்சயம் நல்ல பலன் தரும். எப்பேர்ப்பட்ட பருத் தொல்லைக்கும் இது சரியான தீர்வுன்னு சொல்வேன். முல்தானி மட்டி கிடைக்காட்டி மட்டும் க்ளே( Clay) கலந்த பேஸ் பாக் உபயோகியுங்கள். ரெடி மேடாக கடைகளில் விற்கும் பேஸ் பேக்கை வாங்காதீர்கள்.

தேவா மேடம்,
நான் johnsons shea cocoa butter moisturising lotion, covergirl foundation useபண்றேன். அதற்கு ஏற்றார் போல் face powder வாங்கயும் என் முகத்தில் போட்ட சில நேரம் கழித்து கறுப்பாக இருபது போல் தெரிகிறது. அதற்கு பதில் johnsons baby powder போட்டால் , அல்லது ponds talcum powder போட்டால் அவளவு கறுப்பாக தெரிவதில்லை. மேலும் நான் mascara மட்டும் use பண்றேன் . வேறு எந்த cosmetics use பண்றதில்லை. என் சந்தேகம் உடன் johnsons lotion சேர்த்து foundation போடுவது தப்பா?? போடும் பொது நன்றாக உள்ளது .சிறுது நேரம் கழித்து கலர் மாறுகிறது .
என்ன காரணமாக இருக்கும் . ஒரு அரை மணி நேரம் கழித்து அப்படி இருக்குனு சொல்லலாம் ..

i m wheatish brown color..i use classic beige (230) in covergirl. is this match to my color. when i get ready i look so good , once i reach a place i feel some spots highlighted with powder and other parts in my original color.. this difference is not noted at the time of make up.

wat to do?? not to change black. to be frank, many times i feel.. without makeup. i look fair. but iit doesnt last for long, makeup spoils my color but look fresh. enna seiya??

DEVA madam,

where r u ?? help pls

ஹாய் பாலம்மு, இதோ வந்துட்டேன். இன்னைக்கு காலையில் உங்களுக்கு முதலில் பதில் அடிக்கணும்னு யோசிச்சுக்கிட்டேதான் கார் ஓட்டினேன். ஆபிசில் சரி பிசி. அதான் உடனடியா எந்த கேள்விகளுக்கும் பதில் அனுப்ப முடியல. உங்களுக்கு மேக்கப்பில் ஏற்பட்டிருக்கற பிரச்சணை பொதுவா நிறைய பேருக்கு வர்றதுதான். இதுக்கு முக்கிய காரணம் பவுண்டேஷன். அடுத்து பேஸ் (Base) க்ரீம். நீங்க ரெண்டு விஷயத்துலயும் மாட்டிக்கிட்டீங்க.

நான் என்னோட இந்தியன் மேக்கப் ப்ராடக்ட்ஸ் பத்தின பதிவுலேயே இதை சொல்லி இருக்கேன். சரியான பவுண்டேஷன் செலக்ட் பண்றது ரொம்ப ரொம்ப முக்கியம். இல்லாட்டி முகத்தை கருப்பாக்கிதான் காட்டும். உங்களுக்கு ஒரு ட்ரபுள் ப்ரீ செலெக்ஷன் சொல்றேன். L'Oreal ல் Matt Finish ல Golden Sun நல்லா இருக்கும். இந்த ரேஞ்சில் உள்ள Sand Biege கூட ஓக்கே. இது தவிர முகத்தை கருப்பாக்காத ( தப்பான ஷேட் செலெக்ஷனாக இருந்தாலும்) இன்னொரு பவுண்டேஷன் Range,Maybelline ன் Minerals மற்றும் Christian Dior Range. Clinique ல் இந்தியன் சருமத்துக்கு சிலது மட்டுமே ஓக்கே ரகம்.

நீங்க மேக்கப்பிற்கு பவுண்டேஷன் தேrந்தெடுக்கும்போது செய்ய வேண்டியது இதுதான். இந்த விஷயத்தை பல பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கேன். மேக்கப் எதுவும் போடாமல் முகத்தை நல்லா கழுவிட்டு கடைக்குப் போங்க. அங்கே நீங்க செலெக்ட் பண்ண பவுண்டேஷனை எப்பவும் முகத்துக்கு போடற மாதிரி நல்லா போட்டுக்குங்க(டெஸ்டர் நிச்சயம் எல்லா கடைகளிலும் இருக்கும். இல்லாட்டியும் கடையில் கேளுங்க). அதோட மற்ற ஷாப்பிங்கையும் முடிங்க. வீட்டுக்குப் போய் உங்களோட காம்பாக்ட் பவுடரை அதன் மேல் (வேண்டுமென்றால்) லேசாக அப்ளை செய்தும் பாருங்கள். அது கருப்பாக காட்டாவிட்டால் மட்டுமே அடுத்த நாள் சென்று அதனை வாங்குங்கள். இதனால் பணமும் மிச்சமாகும். சரியான தேர்வும் செய்து விடலாம்.

அடுத்ததாக பேஸ் க்ரீம். மேக்கப் போடும்போது எண்ணெய்த் தன்மையே இல்லாத க்ரீமை மேக்கப் பேசாக உபயோகிப்பது அவசியம். ஆனால் நீங்கள் Shea Butter உள்ள மாய்சுரைசிங் லோஷனை உபயோகிக்கிறீர்கள். அது பவுண்டேஷனோடு சேர்ந்து இன்னும் நிறம் கம்மியாகவே காட்டும். இதற்கு பதிலாக ஜான்சனில் பிங்க் நிறத்தில் வரும் பேபி லோஷனை போட்டு அதனை நன்றாக உலர விடுங்கள். பிறகு மேக்கப் போடுங்கள். இது மேக்கப்பை நீண்ட நேரம் அப்படியே வைத்திருக்கும். Oil Free Base Cream/ Lotion போட ஆரம்பியுங்கள். கலர் வேறுபட்ட பவுண்டேஷன் போடும்போது நன்றாக இருப்பது போலத்தான் தோன்றும். பிறகுதான் கருப்படிக்கும்.

அடுத்து, சரியான பேஸ் க்ரீம் போட்டு உலர விட்டு, பவுண்டேஷன் போட்டதும் அதை ஒரு 10 நிமிடங்களாவது முகத்தில் பரவ விட வேண்டும். அப்போதுதான் அது திட்டு திட்டாக இருக்காது. இதனை ஈசி மேக்கப் என்ற பதிவில் சொல்லி இருக்கேன். அந்த நேரத்தில் கூந்தல் வேலையை முடித்துவிட்டு, பிறகு முகத்திற்கு காம்பாக்ட் பவுடர் உபயோகியுங்கள். அதுவும் பவுண்டேஷனோடு ஒத்துப் போகிற நிறமாக இருப்பது அவசியம். வெறும் பவுண்டேஷனோடு விட்டு விட்டால் சிறிது நேரத்தில் அங்கங்கே நிறம் குறைந்து தோன்றும். பவுடர் அடிக்க பிரியமில்லையென்றால் Minerals அல்லது Powder சேர்ந்த பவுண்டேஷனை தேர்ந்தெடுங்கள். அது நல்ல இயல்பான தோற்றத்தை கொடுக்கும். Max Factor ல்
வரும் மினரல்ஸ் ரேஞ்ச் லைட்டாக நன்றாக இருக்கிறது.

இதில் எதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள். அன்றே இல்லாவிட்டாலும் எப்படியாவது சீக்கிரம் பதில் அடிக்கப் பார்க்கிறேன்.

Hai Deva,

Could u please suggest brand names of oil free sunscreen lotion.
I do apply johnson milk lotion as moisturiser at night and i have combination skin. Is it ok?.

Also, my lips get drier all the time if i dont apply lip balm. I do use himalayas lip balm. It is becoming darker too. I use lipsticks only when i go out. I use either Lakme , Revlon, Marks Spencers and combinations at times. Please tell me what to do to get back normal lip colour and let me know abt some good lip moisturisers please.
Thank you in advance

தேவா மேடம் ,
எனக்கு அனுப்ப வேண்டிய பதில் நினைத்தே நீங்க கார் ஒட்டியது ஒரு பக்கம் எனக்கு சந்தோஷம்னாலும் , கவனமா செய்ங்க.
மேலும் நீங்க சொளிற்கும் இதை L'Oreal ல் Matt Finish ல Golden Sunவாங்கலாமா ... இது என் ஸ்கின் கும் ஓகே தானா ?? நான் இந்த brandt சிந்திச்சு எடுத்தாலும் அது பொருந்துவதில்லை. நான் கூட இந்த mineralsட்ரை பண்ண நினைத்தேன் . ஆனா அது powder மாதிரி தானே இருக்கும் . என் மகன் ஒரு தடவு தடவினால் அழிந்து விடுமேய்னு யோசிச்சேன் .உண்மையாவே சொல்லனும்னா என்கு select பண்றது தான் கஷ்டம் ..கொஞ்சம உதவுங்களேன் .தேவா மேடம் ,
எனக்கு அனுப்ப வேண்டிய பதில் நினைத்தே நீங்க கார் ஒட்டியது ஒரு பக்கம் எனக்கு சந்தோஷம்னாலும் , கவனமா செய்ங்க.
மேலும் நீங்க சொளிற்கும் இதை L'Oreal ல் Matt Finish ல Golden Sunவாங்கலாமா ... இது என் ஸ்கின் கும் ஓகே தானா ?? நான் இந்த brandt சிந்திச்சு எடுத்தாலும் அது பொருந்துவதில்லை. நான் கூட இந்த mineralsட்ரை பண்ண நினைத்தேன் . ஆனா அது powder மாதிரி தானே இருக்கும் . என் மகன் ஒரு தடவு தடவினால் அழிந்து விடுமேய்னு யோசிச்சேன் .உண்மையாவே சொல்லனும்னா என்கு select பண்றது தான் கஷ்டம் ..கொஞ்சம உதவுங்களேன் .

ஹாய் பாலம்மு (இனி என்னை தேவான்னே சொல்லுங்க. மேடம்லாம் வேணாம்), உங்க அக்கறைக்கு நன்றி. நிச்சயம் கவனமா ஓட்டறேன். நீங்க மினரல்ஸ், பவுடர் மாதிரி இருக்கறதால அது காம்பாக்ட் பவுடர் மாதிரி அழிஞ்சிடுமோன்னு நினைக்கிறீங்க. ஆனால் அப்படியல்ல. அது பவுடர் வடிவில் இருக்கும் பவுண்டேஷன் தான். அது நீண்ட நேரம் அப்படியேதான் இருக்கும். நீங்க, நான் சொன்ன மாதிரி, முதலில் டெஸ்டர் கொண்டு அப்ளை பண்ணிட்டு சில மணி நேரங்கள் கழிச்சு பாருங்க. மினரல்ஸ் மேக்கப் நீங்க கை கொண்டு அழித்தாலுமே போகாது. முகத்தை மேக்கப் ரிமூவர் கொண்டோ அல்லது கழுவியோதான் நீக்க முடியும். அப்படியிருக்க உங்க குட்டிப் பையனின் பிஞ்சுக்கை பட்டு நிச்சயம் போகாது ( பையன் பேர் என்ன?).

நீங்க மாநிறத்துக்கும் அடுத்த நிறமாக இருந்தால் L'Oreal ல் நான் சொன்ன ஷேடை ட்ரை செய்துப் பாருங்கள் ( என் பேவரைட் ஷேட் அது). மேக்கப் போட்டிருக்கேன் என்று நீங்கள் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி அழகாக ஸ்கின்னோடு சேர்ந்துவிடும். பார்க்கவும் பளிச்சென்று இயற்கையாக இருக்கும். எதற்கும் உங்கள் நிறத்திற்கு ஒரு முறை ட்ரை செய்து விட்டு வாங்குங்கள். மேக்கப் போடும்போது பவுண்டேஷனை புள்ளி புள்ளியாக ஒவ்வொரு ஏரியாவாக வைத்து விரல்களால் நன்கு தேய்த்து விட்டு, பிறகு அடுத்த எரியாவில் வையுங்கள். முகம் முழுக்க புள்ளி வைத்து விட்டு இரண்டு கைகளாலும் தேய்த்தால் சரியாக இருக்காது. ட்ரை செய்து விட்டு சொல்லுங்கள்.

மேலும் சில பதிவுகள்