பேனா கரையை நீக்க உதவவும்

என் பையன் பால் பாயிண்ட் பென்னை வைத்து சோபாவில் (துணியில்) கிறுக்கி இருக்கான்.அந்த கறையை எப்படி நிக்குவது..

எனக்கும் இதே பிரச்சனை இருக்கு,உங்களுக்கு யாராவது பதில் சொன்னால் எனக்கும் அது உபயோகமாக இருக்கும்,நன்றி கீதா குமரேசன்..
என்னோட ஷோபா துணி இல்ல,அது பார்க்க லெதர் மாதிரி இருக்கு,யாராவது வந்து பதில் சொல்லுங்கபா..

santho உங்களுக்கும் இதே பிரச்சனையா..என்னோடது துணி மாதிரியும் இல்ல, லெதர் மாதிரியும் இல்ல..என் பையன் சோபாவில் மட்டும் கிறுக்கல வீட்டு சுவர் ல பென்சில், பேனா,crayons எல்லாம் பன்னிருக்கான்..என்னப்பா நம்ப சந்தேகத்தை தீர்க யாருமே வரல..யாராவது வாங்கப்பா..

முதல்ல உங்கட பிள்ளைகளுக்கு அவயளின் ரூம் ல் ஒரு பிளாக்போட் [ஸ்கூல் மாதிரி} பிக்ஸ் பண்ணி குடுங்கோ.அதிலயும் பேப்பரிலயும் மட்டும்தான் கிறுக்கவேணும் எண்டு சொல்லிக்குடுங்கோ.இது வேறு நாட்டுக்காரர் சொல்லி அறிஞ்சிருக்கிறேன்.வெள்ளை கலரா இருந்தா ஜவக்ஸ் ஓர் வினிகர் போட்டு பாருங்கோ.அல்லது களர் ஆ இருந்தா அந்த கலர்ல துணிக்கு அடிக்கிற பெயிண்ட் இருக்கு வாங்கி அதுல பூசலாமோ பாருங்கோ.ஏதோ எனக்கு தெரிஞ்சது கோவிக்காதேங்கோ.ஆனா அவயள் சுவரில கிறுக்கினதுக்கெல்லாம் திட்டாதீங்கோ .ஒவ்வொரு குழந்தையும் எதையோ ஒரு உருவத்தை மனதில கற்பனை பண்ணிக்கொண்டுதான் கீறுவினமாம் .அது உங்களுக்குதான் கிறுக்கல்.அவயள் அதை பெரிய சாதனையா நினைப்பினமாம். புக்ல படிச்சனான்.

சுரேஜினி

அருமை சுரேயினி

என்ன சுரேஜினி இதுக்கு போயி கோவிப்பாங்களா..சுவர்ல கலர் சரி.. சோஷபா கரையை நீங்க தான் கேட்டேன் யாராவது தெரிஞ்சா சொல்லுங்க..
உங்கள் profileபார்த்தேன் canada இருந்தது..canada வுல எங்கே இருக்கீங்க..

என்ன தாளிக்கா ஒரு வார்த்தைல முடிச்சுட்டிங்க.. எப்படி இருக்கிங்க ..உங்க பதிவு எல்லாம் பார்த்தேன்..நீங்க இலா,மர்ழியா,அதிரா,(விடுப்பட்ட தோழிகள் எல்லோரும்)உங்க solution மற்றும் பேசுர விஷயம் எல்லாம் படிக்கவே ரொம்ப நல்ல இருக்கு..

சின்ன குழந்தைகள் இருக்கும் இடத்தில் இது எல்லாம் normal ஆன விசயம். கடைகளில் magic erazerஎன்று கிடைக்கும். அதை வாங்கி try பண்ணி பாருங்கள். ஆனால் அது சுவரில் பட்ட கறைகளை சுலபமாக நீக்கி விடும். சோபாவில் try பண்ணி பாருங்கள்.
always smile

எனக்கு ஒரு தோழி சொன்னது. பேப் வைப்ஸ் வைத்து துடைத்தால் போகுமாம்.
நான் என் மகள் சுவரில் க்ரேயான் & பென்சிலால் நல்லாவே வரைந்து வைத்து இருந்தாள். அதை இந்த பேபி வைப்ஸால் துடைத்தேன். போயே போயிந்தி.

இந்த லிங்க்ல படம் காமிக்கிறாங்க.. :-)

<a href="http://www.ehow.com/video_2598_remove-ink-stains.html" target="_blank"> http://www.ehow.com/video_2598_remove-ink-stains.html </a>

உதவிக்கு ஓடி வந்த அனைவருக்கும் நன்றி,அண்ணா நீங்க அனுப்பின படத்த பார்த்தேன்,ட்ரை பண்ணி பார்க்கலாம்..ஏன்னா அங்க எல்லாம் துணில இருக்கு, என்னோட ஷோபா லெதர் மாதிரி இருக்கு..இன்னும் யாருக்காவது தெரிஞ்சா ஈஸியான வழி இருந்தா சொல்லுங்க..மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்

மேலும் சில பதிவுகள்