தேதி: January 31, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான <b> செல்வி. விசா </b> அவர்கள் திருமதி. நர்மதா அவர்களின் குறிப்பினை பார்த்து சில மாற்றங்களுடன் செய்து காட்டியுள்ள குறிப்பு இது.
பாஸ்மதி அரிசி - 2 கப்
சிறிய உருளைக்கிழங்கு - 6
கேரட் - 2
நறுக்கிய முட்டைகோஸ் - 2 கப்
டோஃபு (Tofu) / பனீர் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைப்பட்டாணி - ஒரு கப்
பச்சை மிளகாய் - 5
ஏலக்காய் - 6 + 3
கிராம்பு - 5
கறுவாப்பட்டை - 4" துண்டு + ஒரு சிறிய துண்டு
பிரிஞ்சி இலை - 2
முந்திரி - 20
பிளம்ஸ் (Raisins) - 35 கிராம்
கொத்தமல்லித்தழை - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
பட்டர் / நெய் - 3 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - சிறிது












Comments
விசா
எல்லா டிஷ்ஷையும் Colourful-ஆ பண்ணி காமிச்சு கலக்கறீங்க.
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
visa & narmatha
வாவ். பார்க்கும் போதே சாப்பிடதோனுது, வாய் ஊர வச்சிட்டீங்க.நான் இதை செய்து பார்கிரேன்alhamdhulillah
alhamdhulillah
ஹாய் விசா,
உருளை,வெங்காயம்,பனீர் பொரிதெடுத்து சேர்ப்பதால் இது வித்தியாசமான ரிச் சுவையுடைய வெஜ் பிரியாணியாகத்தான் இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
பார்த்தும்
பார்த்ததும் சாப்பிடனும்னு தான் தோணுது, சரி இவ்ளோ அழகா எப்படி காய்கறியை கட் பண்ணீங்க?கத்தில இது மாதிரி கட் பண்ணமுடியுமா? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க, சீக்கிரன் ட்ரை பண்ணி பார்த்துவிட்டு, பின்னூட்டல் தரேன்பா.ரொம்ப தேங்ஸ் செல்வி.விசா மற்றும் திருமதி.நர்மதா..
விசா
விசா
எப்படி இவ்வளவு அழகா பொறுமையா செய்தீங்க. நான் சமையலில் நாலைந்து steps இருந்தாலே தவிர்த்துடுவேன். பார்க்கவே ரொம்ப நல்லாயிருக்கு .
அன்புடன்
கிருத்திகா
amarakbaranthony , HAJAJASMINE, ஆசியா உமர் மேடம், தாமரை, kirthi
ஹலோ amarakbaranthony (உங்களை எப்படிக் கூப்பிடுறது?), நன்றி :-)
ஹலோ HAJAJASMINE, நன்றி :-) நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் (நன்றி நர்மதா அக்கா).
ஹலோ ஆசியா உமர் மேடம்,
நீங்கள் சொல்வதுபோலவே நன்றாக இருந்தது.
ஹலோ தாமரை மேடம்/ அக்கா எப்படி கூப்பிட? பாராட்டுகளுக்கு நன்றி. கத்தியால்தாங்க வெட்டினேன்...செய்துபார்த்து நிச்சயமாய் பின்னூட்டம் கொடுங்கள்.
ஹலோ kirthika, நன்றி :-)
நர்மதா அக்கா, உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி :-)
அன்புடன்,
விசா
விசா
மேடம் எல்லாம் வேண்டாம்,நீங்க தாமரைன்னே என்ன கூப்பிடலாம்,ஆனால் அக்கானு கூப்பிட்டலும் சந்தோசம் தான்..சரி கத்தில வெட்டினீங்களா?ஆச்சரியம் எப்படினு கொஞ்சம் முடிஞ்சா விளக்குங்க,ஏன்னா நான் கட் பண்ணினால் இவ்ளோ அழகா வர மாட்டேங்குதுபா..
விசா முகப்பை பார்த்ததும்
விசா முகப்பை பார்த்ததும் நீங்களா இருக்கும் என்று தான் ஓப்பன் செய்தேன்.
ரொம்ப அருமை.
ஜலீலா
Jaleelakamal
ஹலோ தாமரை அக்கா, ஹலோ ஜலீலா மேடம்
ஹலோ தாமரை அக்கா, மரக்கறிகளை முதலில் குறுக்காக வெட்டிவிட்டு (ஓரே தடிப்பில்) பின் நீளவாக்கில் வெட்டினேன்...ஒரு வேளை ஆறுதலாக வெட்டுவதாக இருக்கும்...நான் நல்லா டைம் எடுத்து வெட்டுவேன் :-)
ஹலோ ஜலீலா மேடம், நன்றி :-)
அன்புடன் விசா
அன்பு தங்கை விசா
ரொம்ப நன்றிபா பதில் அனுப்பினதுக்கு, உங்களுக்கு ரொம்ப பொருமை தான், நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்பா..
வெஜிடபுள் பிரியாணி.
இந்த வெஜிடபுள் பிரியாணி செய்து பார்த்தேன் சூப்பராக வந்தது. உடனே போடோ எடுத்து யாஹூவில் பேசிக்கொண்டிருக்கும்போதே அனுப்பினேன். சகோதரியின் மகள் உடனே செய்யப்போவதாகச் சொன்னா. அது மட்டுமா எனக்கும் பாராட்டு மழைதான். இது அத்தனையும் விசாவிற்கும், நர்மதாவிற்கும்தான். நன்றி விசா, நர்மதா.
அன்புடன் ரிகா.
ஹலோ ரிகா
ஹலோ ரிகா,
செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி :-)
எனக்கும் கூட இது மிகவும் பிடித்திருந்தது அதனால் தான் யாரும் சமைக்கலாமிற்கு அனுப்பினேன். குறிப்பு கொடுத்த நர்மதா அக்காவிற்குத்தான் நன்றி சொல்லவேண்டும், நன்றி :-)
அன்புடன் விசா
நன்றி
அன்பின் விசா, எனது குறிப்பை செய்து பார்த்து அதனை அழகாக படமெடுத்து அனுப்பிய உங்களுக்கு நன்றி.
மற்றும் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.
-நர்மதா :)