ஆட்டுக்கால் சூப் (செட்டிநாடு )

தேதி: January 31, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (7 votes)

 

ஆட்டுக்கால் - 1 செட் (4 கால்)
மிளகு - 2- 3 டீஸ்பூன்
மல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 1 (விரும்பினால்)
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - சிறிது
கறிவேப்பிலை - 2 இணுக்கு


 

கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும். ஐந்து வெங்காயம் மட்டும் கட் செய்து வைக்கவும். மீதியை அரைக்க முழுதாக வைக்கவும்.
மிளகு, சீரகம், மல்லி லேசாக வெதுப்பிக்கொள்ளவும். மிக்ஸியில் மூன்றையும் போட்டு, வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
குக்கரில் ஒரு லிட்டர் அளவுக்கு (கால் மூழ்கும் அளவுக்கு சிறிது கூட) தண்ணீர் வைத்து உப்பு போடாமல், அரைத்த மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும், இரண்டு விசில் வந்தவுடன் அரைமணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியவுடன் திறக்கவும். உப்பு சேர்க்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கட் செய்த வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். கொஞ்சம் திக்காக வேண்டும் என்றால் 2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றலாம். மல்லி இலை தூவவும்.
சுவையான, சத்தான ஆட்டுக்கால் சூப் ரெடி. இதனை அப்படியே பவுளில் ஸ்பூன் போட்டு பரிமாறலாம்.


ஆட்டுக்கால் எல்லா இடங்களிலும் சுத்தம் செய்து கிடைக்காது. எனவே சுத்தம் செய்ய ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஒரு சிறிய பாக்கெட் சுண்ணாம்பு போடவும், அதில் ஆட்டுக்காலை போடவும், ஐந்து நிமிடம் கழித்து மேல் இருக்கும் மயிரை கையால் இழுத்துப்பார்த்தால் வந்துவிடும். அப்பொழுது எடுத்து தனியாகவைக்கவும். ஒவ்வொன்றாக கத்திக்கொண்டு சூவில் இருந்து மேல் நோக்கி லேசாக தேய்த்தாலே முடி வந்து விடும். பின்பு கத்தியின் முனை கொண்டு சூவை கழட்ட வேண்டும், இப்படியே நான்கையையும் சுத்தம் செய்யவும். கேஸ் அடுப்பில் அல்லது விறகு அடுப்பில் காட்டி ஈரப்பதம் போகும் அளவுக்கு சுட்டு எடுக்கவும். கருகிவிடக்கூடாது. அதனை தேங்காய் உரிக்கும் அருவாளால் ஒரு மரக்கட்டையில் வைத்து 2 அல்லது 3 -ஆக துண்டு போடவும். பின்பு இரண்டு சூவுக்கிடையில் கத்தியால் கீறினால் சிறிய புழு போல் இருக்கும், அதனை கவனமாக நீக்கவும். பின்பு இதனை சிறிது மைதா மாவு, தண்ணீரினால் தேய்த்து நன்கு அலசவும். சுத்தமான ஆட்டுக்கால் ரெடி. எங்கள் வீட்டில் கால் வாங்கினால் நாங்களே தான் இம்முறையில் சுத்தம் செய்வோம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நேற்று செய்து பார்த்தேன், மிக நன்றாக இருந்தது, நன்றி நன்றி நன்றி.

உலகில் எல்லா உயிரும் வாழ புலால் உணவு தவிர்பீர்,
பிறர் கொன்றதை மட்டும் தின்பீர்.

அதுசரி பால், தேன், சைவமா ?
பட்டு சீலை புனிதமா ?

மிக எளிய முறையில் இருக்கிறது, நல்ல சுவையிலும் இருக்கிறது, நன்றி,

மீண்டும் செய்யலாம் என்று இருக்கிறேன். இஞ்சி தேவை இல்லையா ?

உலகில் எல்லா உயிரும் வாழ புலால் உணவு தவிர்பீர்,
பிறர் கொன்றதை மட்டும் தின்பீர்.

அதுசரி பால், தேன், சைவமா ?
பட்டு சீலை புனிதமா ?

ரொம்ப நாளா இந்த குறிப்பை தான் எதிர்ப்பார்த்தேன்.ஆட்டுக்கால் எப்படி சுத்தம் செய்யனும்னு அழகா விளக்கியிருக்கிங்க.இதனால் நானும் எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.எங்க வீட்ல யாருக்கும் எப்படி சுத்தம் செய்றதுனு தெரியாது அதனால் கடையிலேயே சுத்தம் செய்து வாங்கிடுவோம்.ரொம்ப நன்றிக்கா இந்த குறிப்பை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு.

மேனகா,ரிலாக்ஸாக இருக்கும் போது ட்ரை பண்ணுங்க,ஆட்டுக்காலை பொறுமையாக ஓன்று ஒன்றாகவும் போட்டு எடுத்து நான் சொன்ன முறையில் செய்யலாம்,வழுத்துவிடாமல் சரியாக பக்குவம் பார்த்து எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.