சாய்துக்ரா

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரட் - ஒரு பாக்கெட்
பால் - அரை லிட்டர்
சீனி - 400 கிராம்
குங்குமப்பூ - கால் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 6
பாதாம்பருப்பு - 6
பிஸ்தாப்பருப்பு - 6


 

முதலில் பிரட்டை எடுத்துக் கொண்டு அதன் ஓரங்களை வெட்டவும். பின் அதனை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
அதன்பிறகு பாலை நன்கு காய்ச்சவும். பால் நன்கு காய்ந்தவுடன் அதில் சீனியையும் குங்குமப்பூவையும் சேர்த்து மறுபடியும் பால் நன்கு சுண்டும் வரை காய்ச்சவும்.
பால் நன்கு சுண்டியவுடன் அதில் பொரித்து எடுத்துள்ள ப்ரட் துண்டுகளை போட்டு ஊற வைக்கவும்.
பிறகு பாதாம், முந்திரிப்பருப்பு, பிஸ்தா இவைகளை துருவி, ஊற வைத்துள்ள ப்ரட் துண்டுகளுடன் சேர்த்து விடவும்.


மேலும் சில குறிப்புகள்