ஈஸி அவல் பாயசம்

தேதி: February 4, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - 3 கப்
அவல் - 1/2 கப்
ஏலக்காய் - 1
முந்திரிப் பருப்பு - 4
உலர்ந்த திராட்சை - 4
நெய் - 1/2 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டி
குங்குமபூ - 1 சிட்டிகை
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி


 

முதலில் 3 கப் பாலினை நன்றாக 2 கப் பாலாக வரும் வரை காய்ச்சவும்.
பின் ஒரு வாணலியில் முந்திரி மற்றும் உலர்ந்த திரட்சை நெய்யில் வறுத்து எடுக்கவும்.
இதனை பாலில் சேர்த்து கொள்ளவும். ஏலக்காயினை தட்டி பாலில் சேர்க்கவும்.
பிறகு நெய், சர்க்கரை மற்றும் குங்கும பூவினையும் இத்துடன் சேர்க்கவும்.
கடைசியில் அவலினை சேர்த்து கலக்கிவிட்டு அடுப்பினை அணைத்துவிடவும்.
இப்பொழுது சுவையான அவல் பாயசம் ரெடி.


அவல் போட்ட பிறகு வேகவிட வேண்டாம். அவல் அந்த சுடினிலேயே வெந்துவிடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அவல் பாயசம் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

மிகவும் நன்றி வத்சலா மேடம்.
அன்புடன்,
கீதா ஆச்சல்