வத்சலா க்கு பிறந்தநாள்

வத்சலா க்கு பிறந்தநாள் வாழ்த்துவோம் வாங்கோ.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வத்சலா.. உங்கள் உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது ?

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இன்று அறுசுவைக்கு வந்ததும் எனக்கு கிடைக்கப் பெற்ற வாழ்த்துக்களைப் பார்த்ததும் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன்.

சுரேஜினி
இந்த இழையை தொடக்கி வாழ்த்து கூறிய சுரேஜினிக்கு
எனது மனமார்ந்த நன்றிகள்.முடிந்தளவு சமையல் குறிப்புக்கள் கொடுக்க முயற்சிக்கிறேன்.

காயத்திரி,உங்களுக்கும் எனது நன்றிகள்.

இமா, உங்களுக்கும் எனது நன்றிகள்.

உத்தமி, உங்களுக்கும் எனது நன்றிகள்.

கீதாஆச்சல், உங்களுக்கும் எனது நன்றிகள்.

பிரபாதாமு, உங்களுக்கும் எனது நன்றிகள்.

அம்முலு,நான் ஓரளவு நலமாக இருக்கிறேன். உங்களுக்கும் எனது நன்றிகள்.

துஷியந்தி, உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.

ஜலீலா,உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.

ஸாதிகாவிற்கும் எனது நன்றிகள்.

சீதாலக்ஷ்மிக்கும் எனது நன்றிகள்.

சகோதரர் பாபுவிற்கும் பாப்பிக்கும் எனது நன்றிகள்.
பாப்பி எனக்கு இப்பொழுது காய்ச்சல் இல்லை,தடிமன்
தான் இன்னமும் குறையவில்லை.

நிசாந்தினிக்கும் எனது நன்றிகள்.

கவி எஸ், உங்களுக்கும் எனது நன்றிகள்.

ஜெயலக்‌ஷ்மிசுதர்சன், உங்களுக்கும் எனது நன்றிகள்.

சுஜாதா,இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.
சுஜாதா,உங்களுக்கும்,எனக்கும் அத்துடன் எனது அண்ணாவிற்கும் இன்று தான் பிறந்தநாள்.

வைஷணவி, உங்களுக்கும் எனது நன்றிகள்.

செல்வியக்கா, உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.

ஆசியா, உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.

சுகன்யா, ஓரளவு நலமாக இருக்கிறேன். நீங்கள் நலமா? புது வீடு எப்படி இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.

மேனகா,உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.
ஒரு ஸ்பெசலும் இல்லை.

அதிரா,ஒரளவு நலமாக இருக்கிறேன்.உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். நான் கேக் வெட்டி கொண்டாடுவதில்லை. எங்கள் வீட்டில் நாலு பேருக்கும இந்த மாதத்தில் பிறந்தநாள். மகனுக்கு 2ம் திகதி,எனக்கும் அண்ணாவிற்கும் இன்று, கணவருக்கு 20ம் திகதி. சனிக்கிழமை மகனின் பிறந்தநாள் கொண்டாட இருக்கிறோம். அன்று கேக் வெட்டி உங்களுக்கு ஒரு பாசல் அனுப்புகிறேன்.இமாவிற்கு சொல்ல வேண்டாம்.

விஜி,உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். நாளை தான் மகனுக்கு கேக் செய்யப் போகிறேன்.என்ன ஐசிங் செய்வது என்று யோசிக்கிறேன்.

இலா,உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். இப்பொழுது ஓரளவு பரவாயில்லை.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

இது கொஞ்சமும் நல்லா இல்லை வத்சலா. ;(( உங்களை வாழ்த்த வரச் சொல்லி நான் தான் அதிராவைக் கூப்பிட்டனான். இப்ப ரெண்டு பேரும் எனக்கெதிராச் சதி செய்யுறீங்கள் என்ன? ;-((
அன்பில்லாத இமா
வாழ்த்துக்கள் சுஜாதா. பிறந்த நாள் சந்தோஷமாகக் கொண்டாடியிருப்பீங்கள் எண்டு நினைக்கிறன். ;-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

வத்சலா உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இனி வரும் வருடங்களில் என் பிறந்த நாளன்று உங்களையும் நினைவில் கொள்வேன்.
இமா உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. பிறந்த நாள் சந்தோஷமாகக் கொண்டாடினேன்.
அன்புடன்
சுஜாதா

இமா கோபித்துக்கொள்ள வேண்டாம் உங்களுக்கு கேக்குடன் என்ன பலகாரம் செய்கிறேனோ அத்தனையும் அனுப்பி வைக்கிறேன். அன்பில்லாத இமா என்று சொல்ல வேண்டாம்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அன்புள்ள வத்சலா, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒரே வேலை பிஸி அது தான் இந்த பக்கம் வருவது குறைவு.
வாணி

வத்சலா.. எனக்கு முட்டை போடாமல் ஒரு பெரிய பார்சல் கேக் அனுப்புங்கோ... இமா.. இப்படிக்கோபிக்கலாமோ.. உங்களுக்கும் உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன் அதுதான் கேக் கூடாதென்று அனுப்ப வேண்டாம் என்று எவ்வளவு அக்கறையோடு சொன்னனான்... ஒரு நன்றி சொல்லவேணும் என்று நினைக்காமல்.. நன்மை செய்த அதிராவையே சதி என்றெல்லாம் சொல்லி.. சிரிக்கவேண்டிய வயதில என்னை அழ வச்சிட்டீங்கள்:(

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பின் வத்சலா, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். லேட்தான் என்றாலும் எனக்கும் கேக் பிடிக்கும். :)
-நர்மதா :)

Belated B'day wishes.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

வாணி, நர்மதா,அமராக் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

அதிராவிற்கு ஒரு முட்டை இல்லாக் கேக் ஒரு பார்சலும், இமாவிற்கு கேக்கும், ரோல்ஸ்,சூசியம்,பருத்தித்துறை வடையும் ,நர்மதாவிற்கு கேக் பார்சலும் அனுப்பியுள்ளேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

மேலும் சில பதிவுகள்