யார் மறந்து போன உணவுகள்

மறந்து போன உணவுகள் என்றால் என்ன? யார் மறந்து போன உணவுகள்?

ஒரு காலத்தில் அதிகம் பழக்கத்தில் இருந்து, பிறகு காலப்போக்கில், நாகரிக வளர்ச்சியில், மக்கள் மறந்து போன, அதனால் மறைந்து போன உணவுகள் பற்றி இங்கே உரையாடலாம். இதற்கு உதாரணங்கள் நிறையச் சொல்லலாம். நமது வீட்டில் இருக்கும் வயதானவர்களிடம், அவர்கள் சிறுவயதில் சாப்பிட்ட உணவுகள் குறித்து கேட்டால், அவர்கள் சொல்வதில் சில நாம் வாழ்நாளில் சாப்பிட்டே பார்த்திராதது ஆக இருக்கும். கம்பு கொண்டு தயாரிக்கப்படும் சத்தான உணவுகள் பல இன்று நடைமுறையில் இல்லாது போயிற்று. இப்படிப்பட்ட பழங்கால உணவுகள், காலத்தால் அழிந்து போன உணவுகள் பற்றி இங்கே கேள்விகள் எழுப்பலாம். பதில்கள் அளிக்கலாம்

கேல்வரகு முருங்கைகீரை ரொட்டி

வீழ்வது நாம் என்றாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்
வாழ்கவளமுடன்

சோலைமணி

hlo how write tamil i dont know .hi admin sir pls explain to me ,
i am suresh from singapore

என்னப்பா கோழிகளே, யாரும் இந்த இழை பக்கம் வர்றதே இல்லையா? பாக்க ரொம்ப பாவமா இருக்குப்பா. எல்லாரும் வந்து இந்த இழைக்கு வாழ்வு குடுங்க. உங்களுக்கு தெரிஞ்ச எங்களுக்கு தெரியாத உணவுகள் பத்தி சொல்லுங்கப்பா.

எனக்கு எங்க பாட்டி செய்ற சிம்ளி உருண்டை ரொம்ப பிடிக்கும். கேழ்வரகு மாவை வேகவைத்து அதனை உரலில் போட்டு இடித்து அதனுடன் வறுத்த எள், வேர்க்கடலை, வெல்லம் சேர்த்து தருவாங்க. நல்ல டேஸ்டா இருக்கும். 3 நாள் வச்சு சாப்பிடலாம். இது எல்லார்க்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.

சோளக்கதிர் நல்ல ஈரப்பதமா இருக்கும்போது எடுத்து அதை பால்ல வேகவச்சு வெல்லம் போட்டு தருவாங்க. பேர் தெரியாது. மழைக்காலத்துல காயாத துவரம்பருப்பு இருந்தா அதோட மிளகாய் தூள் உப்பு போட்டு பிசிறி எண்ணெய்யில் போட்டு தருவாங்க. மழைக்கு இதமா இருக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுட்ட மரவள்ளி கிழங்கு

இதனை இந்த லிஸ்டில் போட முடிய்மோ என்னவோ...உணவு வேலை செய்யும்போதே பட்டி கிழங்கையும் சேர்த்து அடுப்பில் சுடுவார்கள்..கூட பலாப்பழ விதைகளையும் சுடுவார்கள்..இதன் சுவை ரொம்ப அருமையாக இருக்கும்.இன்றேது அடுப்பு அதெல்லாம் அந்த காலம்.ஆனால் அதன் மணம் இன்றும் மனதிலேயே இருக்கிறது

மரவள்ளிக்கிழங்கை சுடுவது போலவே நேந்திரம்பழத்தையும் தணலில் சுட்டு சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்.

ஏன் தளி அடுப்பு இல்லேனு கவலைப்படுறீங்க. அதான் இப்பல்லாம் பார்பிக்யூ இருக்கே அதிலும் செய்யலாமே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தளிகா,நீங்க சொன்ன உடன் தான் எனக்கு ஞாபகம் வருது. சின்ன பசங்களா இருக்கும் போது வீட்ல பலாப்பழம் வாங்கினா அதை சாப்டு மீதி இருக்குற கொட்டைய பெரும்பாலும் கூட உருளை பட்டாணி போட்டு வறுவல் பண்ணிடுவாங்க. எங்களுக்கு சுட்டு சாப்பிட பிடிக்கும். எங்க வீட்ல சுட முடியாதே, அப்புறம் எங்கள அடுப்புல தூக்கி போட்டு சுட்டுடுவாங்க :( அதனால ஒரு 5 அல்லது 6 பலாக்கொட்டையை வீட்ல இருக்குறவங்களுக்கு தெரியாம சுட்டு (?) பக்கத்து வீட்டு அடுப்புல போட்டு சுட்டு சாப்பிடுவோம். அது சுவையே சுவை தான் :D

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் சின்னவளா இருக்கும்போது ஸ்கூல் விட்டு வந்ததும் எங்க வீட்டு
வேலைக்காரி சீனிக்கிழங்கை குமுட்டி அடுப்பில் போட்டு சுட்டு தரு வா
என்ன டேஸ்டா இருக்கும். அதுபோல பனங்கிழங்கும் சுட்டு தருவா.
பலாக்கொட்டையும் உண்டு. இப்போ மலரும் நினைவுகளாகத்தான்
நினைச்சுக்க முடியுது.

என் பாட்டி ஆட்டிறைச்சியில் ஒரு குழம்பு செய்வார்கள். அதில் கீரை , கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்திருப்பார்கள். சுவை அபராகமாக இருக்கும்.
பழைய சாதத்தில் தண்ணீர் விட்டு சிறிதளவு மோர் உப்பு சேர்த்து ஒரு குழி பண்ணி அதில் இரண்டு நாள் முன் (சட்டியில்) செய்து சுண்டவைத்த (கருவாட்டு) புளிகொழம்பு ஒரு சொட்டு ஊற்றி சாபிட்டால் ஆஹா .........
கேழ்வரகு கூழ் + கருவாட்டு கொழம்பு

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என் பாட்டியின் மாமியார் புதுவிதமான சமையல் குறிப்புகள் எல்லாம் செய்வார்களாம். அதில் ஒன்று இந்த முக்களி அடை ரெசிப்பி. சமீபத்தில் என் பாட்டி அம்மாவுக்கு சொன்னது. அரிசியை அரைப்பதம் வறுத்து 1 அல்லது 2 மணி நேரம் ஊற வைத்து கொஞ்சம் ரவா பதத்துக்கு கொரகொரப்பா கிரைண்டர்ல அரைத்து எடுத்துக்கவும். அரைத்த மாவில் உப்பு போட்டு கலந்து தோசைக்கல்லில் சிறிது தடிமனான அடைகளாக ஊற்றி சுற்றிலும் நெய்விட்டு மொறு மொறுப்பாக சுட்டு எடுக்கவும். அடை ஆறியதும் நன்றாக கட்டியில்லாமல் உதிர்த்து விட்டு அதில் சீனி, தேங்காய் துருவல் கலந்து பிறகு முந்திரி, திராட்சை நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும். இந்த ரெசிப்பி சொல்லுபோது வித்தியாசமாக இருந்தது. "முக்களி அடை" என்று ஏன் பேரு வைச்சாங்கனு தெரியல. அதற்கான விளக்கத்த கேட்டு பிறகு சொல்கிறேன்.
அப்புறம் இன்னொரு ரெசிப்பி ஏகாதசி விரதம் அன்று செய்வார்கள் வெண்ணெய் புட்டு என்று. அரிசி, வெல்லம், பாசிப்பருப்பு நெய் இதுதான் இதற்கு முக்கிய பொருள்.

மேலும் சில பதிவுகள்