எண்ணெய் குறைந்த மிக்ஸர்

தேதி: February 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கார்ன்பிளேக்ஸ் - 1 1/2கப்
வேர்க்கடலை - 1/4 கப்
பொட்டுக்கடலை - 1/4 கப்
மிக்ஸர் அவல் - 1/4 கப்
பொரி - 1 கப்
ப்ளாக் சால்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

எண்ணெயில் கார்ன்பிளேக்ஸை பொரித்து வடிதட்டில் போடவும்.
அவலையும் பொரித்து எடுத்து வடிதட்டில் போடவும்.
எண்ணெயை வேறு பாத்திரத்துக்கு மாற்றி விட்டு, அதே சட்டியில் வேர்க்கடலை, பொட்டுக்கடலையை சிவக்க வறுக்கவும்.
இவை அனைத்தையும் ப்ளாக் சால்ட், பொரியுடன் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
மிகவும் சுலபாமாக, எண்ணெய் குறைந்த அளவிலும் செய்யக்கூடிய மிக்ஸர் இது.
ப்ளாக் சால்ட் தவிர மிளகாய்ப்பொடி, சாட்மசாலா எதாவது ஒன்றினையும் சேர்க்கலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஸாதிகா உங்க மிக்சர் நல்லா இருக்கு. ஆனா பிளேக் சால்ட் இன்னா என்ன?
இத எவ்வளவு நாள் கெடாம வேச்சுக்கலா.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிளேக் சால்ட் என்பது கருப்பாக கல் போல் தோற்றத்தில் இருக்கும்.இது அத்தனை சுலபத்தில் கெடாது.மிக்ஸியில் தூள்செய்து உபயோகப்படுத்தலாம்.அனேக புரொவிஷன் கடைகளிலும் கிடைக்கும்.மிக்ஸர் 10 நாட்களுக்கு மேல் வரும்.காற்றுப்புகாத டப்பாவில் ஸ்டோர் பண்ணி வைத்தால்.பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

உடனே பதில் தந்ததுக்கு நன்றிபா. எனக்கு oil கம்மியா இருக்குர ரெசிபிதான் அதிகம் எதிர்பார்க்கிரேன். அதனால் தான் கேட்டேன்.
நாம சாதா சால்ட் போடலாமா. செல்லுங்கள் please....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

உடனே பதில் தந்ததுக்கு நன்றிபா.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிளேக் சால்ட் இல்லாமலும் சாதா தூள் உப்பு சேர்த்தும் செய்யலாம்.மிளகாய்த்தூள் சேர்த்தால் உப்பு சேர்க்கவேண்டும்.சாட் மசாலா சேர்க்கும் பொழுது அதிலேயே உப்பு ஆட் ஆகி இருப்பதால் சேர்க்கத்தேவை இல்லை.
ஸாதிகா

arusuvai is a wonderful website