உதவுங்கள்..ப்ளீஸ்

என்னுடைய சருமம் மிகவும் வறண்டசருமம் அதைபோக்க வழி சொல்லுங்கள்.dove,ponds.vaselin
முதலிய லோஷன்கள் பயன்படுத்தியும் பலனில்லை. கை, காலெல்லாம் எதோ கடிக்கிரமாதிரி இருக்கு..
தோழிகளே உங்களுக்கு தெரிந்த அறிவுரைகளை கூறுங்கள்.

சோப் மாத்தி பாருங்களேன் டவ் சோப் உபயோகிங்க..முகத்துக்கு ஹிமாலயாஸ் ஃபேஸ் வாஷ் போடுங்க.அப்ரம் மாயிஸ்சரைசெர் போட்டு பாருங்க.

உங்கள் அறிவுரைக்கு. இப்ப நான் லைபாய்கோல்ட் சோப் யூஸ் பண்ணிட்டு இருக்கேன்.நீங்க சோன்ன மாதிரி டவ் சோப் பயன்படுத்தி பார்க்கிறேன்..

ஜான்சன்ஸ் பேபி சோப் பயன் படுத்தவும், இல்லை ரெக்சோனா கோக்க நெட் சோப்.

தினம் பாதம் ஆயில் (அ) தேங்காய் எண்ணை,(அ) ஆலிவ் எண்ணை முகத்தில் தேய்க்கவும்.

வாரம் இரு முறை பாலடையில் ஏதாவது எண்ணை கலந்து சிறிது கடலை மாவு சேர்த்து நன்கு முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து லேஸ் வெது வெதுப்பான வெண்ணிரில் முகம் அலம்பவும்.
ஜலீலா

Jaleelakamal

பயத்தம்பருப்பு மாவு போட்டுக்குளிச்சேன். அப்படியும் சரியாகல.குளிகிரதுக்கு முன்னாடி தேங்காயெண்ணெய் தேய்க்கிறேன்.
முகத்தைவிட உடம்புலதான் வறண்டதன்மை அதிகமா தெரியுது..
தேங்காயெண்ணெய் யூஸ் பண்ணினா உடல் கருத்து போகுமா??

ஹாய் பரிமலா எப்டி இருக்கிங்க. பான்ஸ்க்ரீம் யூஸ் பன்னலாம் எனக்கும் வருன்ட சருமாம் தான். குழிர் காலத்தில் யூஸ் பன்ரது வெயில் காலத்தில் யூஸ்பன்ரது இரன்டுமே இருக்கு நான் இதைத்தான் யூஸ்பன்றேன். காலத்திர்க்கு ஏர்ப்ப யூஸ்பன்னலாம். உடம்பு பூராம் தேய்க்கலாம் நல்ல பள பளப்பாவும் இருக்கு காலை இரவு இரன்டு வேலை தேய்த்தாலே போதும். எனக்கு சுல்லு சுல்லுன்னு அரிக்கிரதும் போஇடுச்சு.

பிரியா குளிக்கும் முன் தண்ணீரில் ஒரு மூடி ஆயில் போட்டு கொள்ளுங்கள்.

குளித்து முடித்ததும் , ஜான்ஸன்ஸ் மாயஸ்ரெஸிங் லோஷன் (அ) வாஸ்லின் மாய்ஸ்ரெஸிங் லோஷன் (அ) நிவ்யா மாய்ஸ்ரெஸிங் லோஷன் உடல் முழுவதும் பூசிக்கொள்ளுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் பரிமளா,
நீங்க குளித்து விட்டு,உடனே ஜான்சன்ஸ் மாய்சரைஸர்(gohnsons moisture 24 hour soft cream) போட்டு பாருங்கள்.நான் பொதுவா முகத்தில் எந்த க்ரீமும் போட மாட்டேன்.இந்த குளிர்காலத்தில் தாங்க முடியாம இந்த க்ரீமை வாங்கி ட்ரை பண்ணி பார்த்தேன்.எவ்வளவு நேரம் ஆனாலும் முகம் வறட்சியாகாமல் இருக்கு.இதை ட்ரை பண்ணி பாருங்கள்.அடிக்கடி சோப்பை மாற்றாதீர்கள்.உங்கள் ஸ்கின் எப்படியும் ஒரு சோப்புக்கு பழக்க மாகி இருக்கும்.
தோழி சொன்னது போல் டவ்(dove) சோப் யூஸ் பண்ணி பாருங்கள்.ஆனால் அது குளிக்கும் போதும்,குளித்து சில நிமிடம் கழித்து மறுபடியும் சருமம் வறண்டு போய் விடும்.வறண்டு போகாம இருக்க ஏதாவது க்ரீம் உபயோகித்தால் தான் சரியாகும்.

இந்தியாவில் எங்க இருக்கிங்க பரிமலா. என்னோட சொந்த ஊர் மதுரை பக்கம். விருப்ப பட்டடா சொல்லுங்கப்பா. உங்கல பேர் சொல்லி கூப்டலாமா? நீங்க பெரியவங்கலா சின்ன பொன்னான்னு தெரியலப்பா.

எங்க இருக்கீங்கனு கேட்கறதுக்கு ஏன் இவ்ளோ தயக்கம். நான் பெங்களூரில் இருக்கிறேன். நீங்க எங்க இருக்கீங்க..என்னோட சொந்த ஊர் தூத்துக்குடி.
என்னோட வயசு 26 சின்னபொண்ணா, பெரிய பொண்ணானு நீங்களே முடிவுபண்ணிக்கோங்க..

உங்களுடைய அறிவுரைக்கு என்னுடைய நன்றிகள்..

மேலும் சில பதிவுகள்