ஹலோ தோழிகளே! ஹென்னாவை வேர் கால்களில் படும்படி தேய்ப்பது நல்லதா? அல்லது முடியில் மட்டும் படும்படி தேய்ப்பது நல்லதா?பிறர் உதவி இல்லாமல் அனைத்து முடியிலும் குறிப்பாக வெள்ளை முடியில் தேய்க்க டிப்ஸ் சொல்லுங்கள் தோழிகளே
ஹலோ தோழிகளே! ஹென்னாவை வேர் கால்களில் படும்படி தேய்ப்பது நல்லதா? அல்லது முடியில் மட்டும் படும்படி தேய்ப்பது நல்லதா?பிறர் உதவி இல்லாமல் அனைத்து முடியிலும் குறிப்பாக வெள்ளை முடியில் தேய்க்க டிப்ஸ் சொல்லுங்கள் தோழிகளே
henna
சில சமயம் நானே போட்டுக் கொள்வேன்.பொடியை டீ டிகாஷன்,எலிமிச்சை நீர் சேர்த்து கலக்கி முடி கலர் செய்யும் ப்ரஷ்ஷால் நானாக தேய்ப்பேன்..இரட்டை ஜடை போல் பிரித்து விட்டு மெல்ல மெல்ல பொறுமையாய் தேய்ப்பேன்..காய்ந்ததும் குளிப்பேன்..கொஞ்ச நாளைக்கு முடி ரொம்ப அழகாய் இருக்கும்..தலை குளிர்ச்சியாக இருக்கும்..நான் தலை முடி வேர் முதல் கடைசி வரை தேய்ப்பேன்
hai thalika
ஹாய் தளிக்கா பதிலளித்தற்கு நன்றி.2 மணி நேரத்திற்கு அதிகமாக தலையில் வைத்து இருந்தால் தலைவலி வருமா?டீ டிக்காஷன் எப்படி தயாரிப்பது?
ஹென்னா
200 கிராம் ஹென்னாவுடன்,ஒரு எலுமிச்சையின் ரசம்,திக்கான டீ டிகாஷன்,கத்தாபவுடர் ஒரு டீஸ்பூன்,சேர்த்து இட்லி மாவு பதத்தில் குழைத்து இரவு முழுதும் ஒரு இரும்பு சட்டியில் ஊற விடவும்,காலையில் தேய்க்கும்பொழுது ஒரு முட்டையின் வெள்ளைகருவை கலக்கிக்கொள்ளவும்.(விரும்பினால்)ஜலதோசம் பயம் உள்ளவர்கள் சில துளி யூக்லிப்ட்ஸ் ஆயில் சேர்த்துக்கொள்ளலாம்.இந்த முறையில் பேஸ்ட் செய்து தளிகா சொன்ன முறையில் அப்ளை பண்ணுங்கள்.நரை முடி இருந்தால் தான் ஹென்னா போட வேண்டுமென்பதில்லை.அனைவரும் போட்டால் முடி பளபளப்பாக,கருமையாக இருக்கும் .நல்ல புரட்டீனும் கூட.என் 15 வயது மகனும் ஹென்னா போடுவான்
ஸாதிகா
arusuvai is a wonderful website
ஹாய் ஸாதிகா!
ஹாய் ஸாதிகா கத்தாபவுடர் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா?
கத்தா பவுடர்
மருதாணி விற்கும் கடைகளில் கிடைக்கும்.ஹென்னாவை இன்னும் டார்க் நிறத்தில் காட்டும்.கத்தா பவுடர் சேர்ப்பதால் நல்ல அடர்ந்த நிறம் கிடைக்கும் தலைமுடிக்கு,
ஸாதிகா
arusuvai is a wonderful website
This web address is saw
This web address is saw recently. This is Very useful.
Oil
Henna podum mun hairil oil erukkalama friend