ஹாய் வாங்க பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம்..51

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிங்க? வாங்க பா வாங்க ஜாலியா அரட்டை அடிக்கலாம்.

ஆமாம்ப்பா, 4 ஃப்ரெண்ஸ் சேர்ந்தார்போல் வேறு பில்டிங் போய்ட்டாங்க. எங்களுக்கு ஹால் சின்னதா இருக்காமாதிரி தோணியதால்
போகலை. அதனால்தான் வர முடியலை.
அப்பவே உங்களுக்கு பதில் போட முடியலை. ஆனா, நினைச்சுக்கிட்டே இருந்தேன். மறக்க முடியுமா.உங்க குழந்தை பற்றி சொல்லுங்க சுகன்யா. பரவாயில்லையே என் பசங்க பேரெல்லாம் கூட அழகா சொல்லி விசாரிக்கிறீங்க.

ஆமாம்பா,அவங்க மாறி போய்ட்டாங்கன்னா உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்ல.அப்புறம் பழகிடும்.ஆமா பசங்க இருக்கும் போது ஹால் பெரிசா இருந்தா தான் விளையாட கொஞ்சம் தாராளமா இருக்கும்.

நான் அப்புறமா வந்து பதிவு போடுகிறேன்பா...வேலையை முடிச்சுட்டு வரேன்

சுகன்யா!
இன்று தைப்பூசம் என்பதால்தான் யாரும் லைனில் வரலைன்னு தோணுது.
நானும் போய் கொஞ்சம் சர்க்கரை பொங்கல் வைக்கனும். ஆமாம் சுகன்யா, நாங்க இப்ப இருக்கிறது சிங்கிள் பெட்ரூம், ஆனா ஹால்,கிச்சன், பெட்ரூம்,பால்கனி ஓரளவிற்கு பெரிதாக இருக்கும் . ஆனா இப்ப மற்றவர்கள் போகும் பில்டிங்கில் ரெண்டு பெட்ரூம்& பாத்ரூம்,கிச்சன் சின்னது, ஹாலும் சின்னது இதனோட வாடகையும் அதிகம்.
குழந்தைகள் சுத்தமா விரும்பலை. அவர்கள் ஓடியாடி விளையாட இந்த வீடுதான் பெஸ்ட்டுன்னு முடிவு பண்ணிட்டோம்.
கீழேயும் விளையாட நிறைய இடம், காம்பவுண்ட் சுவர் என்று எல்லா வசதியும் விட்டுட்டு போக மனசு வரலை.
என் ஃப்ரெண்ஸ்ம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தான் கிளம்புகிறார்கள்.
மீண்டும் ஃப்ரீயா இருக்கும்போது பேசலாம். அன்புடன், கீதா!

எப்படி இருக்கீங்க. 4 நாள் அறுசுவைக்கு லீவு விட்டுட்டீங்க. பிள்ளைகள் நலமா? நீங்கள் இருக்கும் இடத்தில் தமிழர்கள் நிறைய இருக்காங்களா. உங்களுடைய வீடும் ப்ளாட் சிஸ்டம்தானே. அங்கே தனித்தனி வீடுகள் உள்ளனவா. அங்கே ரெண்ட் எல்லாம் எப்படி. எத்தனை தினார் மாதத்திற்கு.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் சுகன்யா, ஹாய் கீதாலக்ஷ்மி... 2 பேரும் நலமா?! நானும் குட்டியும் நலம். தூங்கறா இன்னும். இராத்திரி எல்லாம் விளையாட்டு, 3 மணிக்கு தான் தூங்கினா. :) சிக்கன் ரோல் நல்லா இருந்துச்சா?! செய்து பார்த்து சொல்லுங்க, உங்களை போல பெரியவங்க சொன்னா அதுல ஒரு தனி சந்தோஷம் தான். ஆனா அது என்னவோ தெரியல வீட்டுக்கு போனா மட்டும் என் அம்மா'காக சமைக்காம என் தங்கைகாக சமைப்பேன். அவளுக்கு தான் நான் செய்தா ரொம்பா பிடிக்கும்.

சுகன்யா... பட்டிமன்றத்துல தான் வருவேன்னு அடம் பிடிக்கறீங்க... அரட்டை பக்கம் தலையை எப்பவாது தான் காண முடியுது.

எங்களுக்கு வெள்ளி, சனி தான் விடுமுறை. அதான் 2 நாளா எங்கயும் அதிகமா பதிவு இல்லை.

செல்வி... இப்போ உடம்பு பரவாயில்லையா?! உடம்பை பார்த்துக்கங்க.

ஜெயா... எங்க உங்களை எங்கயும் பார்க்க முடியலை?! ரொம்ப வேலையா?!

பரிமளா... முன்னலாம் தினமும் வந்தீங்க, ஏன் இப்போலாம் வருவதில்லை?! மெயில் பாருங்க.

செண்பகா... நலமா?! மெயில் பாத்தீங்கன்னு அண்ணா சொன்னார். வயசு தெரிஞ்சிதா?! சந்தோஷமா?! ஜெயா மாதிரி நீங்களும் வயசை எல்லார்டையும் போட்டு குடுக்க கூடாது. சரியா?! சமத்தா இருக்கனும்.

சுரேஜினி... நல்லா இருக்கீங்களா?! அப்பப்போ வற்றீங்க, வந்த வேகத்துல கிளம்பிடுறீங்க. எங்க கூடலாம் கொஞ்சம் பேசுங்கலேன். :)

தனிஷா, தனு, கவி, அதிரா, ஜலீலா, எல்லாரும் எங்க இருக்கீங்க?! வாங்க இந்த பக்கம். ஒரு பதிவாது போடுங்க.

இலா, உத்ரா... என்ன உங்க கலாட்டாவ காணோம்?! 2 நாளா உங்க அரட்டை படிக்காம அறுசுவை தூங்குதோன்னு தோனுது. வந்து கலக்குங்க. ;) நல்லா இருக்கீங்களா?!

இமா.... நலமா?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வளை குடா என்றாலே பிரச்சனை தான் போல.... குளிர்னா ஊட்டி குளிரை மிஞ்சும்.... இங்கு அடிக்கும் வெயில் கூட எங்க ஊரு சிவகாசியை தூக்கி சாப்பிட்டு விடும் போல...

குளிர் காலத்தில் சவன்பராஷ் தினசரி சாப்பிட்டு கொஞ்சம் கட்டுப்பாடுடன் இருந்தாலும் ஜல தோஷம், சளி, தலை வலி வருவதை தவிர்க்க முடிய வில்லை....

இதற்க்கு நிவாரணம் சொல்லுங்கள்.... சூப் ஏதாவது குடிக்கலாமா??? டாக்டர்-கிட்ட போக மனசே இல்லை....

உங்கள் ஆலோசனைகளை கொஞ்சம் கூறுங்கள்.... நல்லது....

இந்த பகுதி இப்ப தான் ஓப்பன் ஆச்சு ஆனால் பதிவு நிறைய எழுதனும் இப்ப டைம் இல்லாம போச்சு

இஞ்சி தட்டி காஃபி போடு குடிங்க காலையில் எழுந்ததும்
மிளகு சேர்த்து சமையுங்கள்
சூப் நிறைய தினம் குடிங்கஆவி பிடிங்க
ஜலீலா

Jaleelakamal

நல்லது ஜலீலா... கண்டிப்பா அப்படி பண்ணி பாக்குறேன்.. அப்புறம் திருமண நாள் விசேஷங்கள் எப்படி போச்சு??? என்னுடைய belated wishes.

தனிஷா, நீங்க ஆன்லைனில் வந்தப்பதான் நான் அபியை கூட்டிட்டு வர கிளம்பிட்டு இருந்தேன். இன்னைக்குன்னு பார்த்து வீட்டு வேலைக்கு வர பொண்னு 10.30 மணிக்கே வந்திட்டுது.
தினமும் 1;30 மணிக்குதான் வரும். கொஞ்சம் கவனிக்காம விட்டுட்டா அரைகுறையா வேலைகளை செய்திட்டு போய்டும்.
அதுவுமில்லாமல் மொழிப்பிரச்னை வேற. அது ஆந்திரா அதுக்கு தமிழ்,ஆங்கிலம் தெரியாது
எனக்கு தெலுங்கு,ஹிந்தி தெரியாது. வேலையை முடிக்கும்வரை கூடவே இருக்கணும் தனிஷா.
உங்களுக்கு பதில் அனுப்பமுடியலியேன்னு வருத்தம் . அதனால்தான் இவ்வளவு பெரிய விளக்கம்.
நாங்க இருக்கிறது ஃப்ளாட் சிஸ்டம்தான். 6 ஃப்ளோர்ஸ் இருக்கு. நாங்க 3-வது ஃப்ளோரில் இருக்கோம். ஒரு ஃப்ளோருக்கு 4 வீடுகள்.
வாடகை 185 தினார். புதிதாக வருபவர்களுக்கு 200தினார்.
தனிதனி வீடுகள் பெரும்பாலும் இந்த நாட்டைச்சேர்ந்தவர்களும்,
மிகவும் வசதி படைத்தவர்களுக்குதான் ஒத்து வரும்.

தமிழர்கள் நிறைய பேர் உண்டு. வழக்கம்போல் மலையாளீஸ்ம் அதிகம். நாங்கள் இருக்கும் பில்டிங்கில் தமிழ்,மலையாளம்,ஹிந்தி,கன்னடம்,தெலுங்கு மக்கள் உண்டு. ஒரே ஒரு மிஸ்ரி குடும்பம் உண்டு.
எல்லா பக்கமும் போல் இங்கும் வாடகை அதிகம் பண்ணிட்டே இருக்காங்க.துபாய்,அபுதாபியில் வாடகையுடன் ஒரு வருட அட்வான்ஸ் பணமும் தரணும்னு கேள்விப்பட்டேன் உண்மையா தனிஷா?
இங்கு அட்வான்ஸ் எல்லாம் இல்லை.

Sai Geethalakshmi r u in Kuwait?????????????

மேலும் சில பதிவுகள்