டீ டிக்காஷன்?

டீ டிக்காஷன் என்றால் என்ன?டீயை தண்ணீரில் கொதிக்க வைத்த தண்ணீரா அல்லது கொதிக்க வைத்த பிறகு வடிகட்டிய சக்கையா?தெரிந்தால் யாரவது சொல்லுங்கள்

டீ டிகாக்ஷன் என்பது டீ கொதிக்கவைத்து வடிகட்டிய தண்ணீர்தான்.சக்கை அல்ல!

ஹாய் அர்ச்சனா சாய் கீதா சொல்வது போல்
டீ டிகாஷன் என்றால்

சக்கை இல்லை வடி கட்டிய தண்ணீர் தான்.

இது எதுக்கு மருதாணி கலக்க கேட்கிறீகளா?

ஜலீலா

Jaleelakamal

பதிலளித்தற்கு ரொம்ப தேங்ஸ் ஜலீலா.ஹென்னா யூஸ் பண்ணுவதற்குதான் கேட்கிறேன்.நீங்க ஹென்னா யூஸ் பண்ணியிருக்கீங்களா?டீ டிக்காஷன் தயாரிப்பதற்கு 1 டேபிள் ஸ்பூன்(for 1 cup water) டீத்தூள் போதுமா ஜலீலா

ஹாய் அர்ச்சனா
ஹென்னாவிற்கு என்றால் கொஞ்சம் திக்காக போட்டுக்கங்க ஒன்னறை தேக்கரண்டி போட்டு கொள்ளுங்கள்.
அதனுடன் கிராம்பு பொடி செய்து போட்டு கொள்ளுங்கள். தலை வலி வராமல் இருக்கும்
கண் கருவளையத்துக்கும் பிளாக் டீ அல்லது டீ பேக்கை வைக்கலாம்
ஜலீலா

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா எப்படி இருக்கீங்க?பதிலலித்ததற்கு ரொம்ப நன்றி.கண் கருவளையத்துக்கு டீ டிக்காஷன் தடவணுமா அல்லது வடிகட்டின பிறகு கிடைக்கும் சக்கையை தடவணுமா?சுமார் எவ்வளவு நேரம் தடவணும்?

டியர் அர்சனா டீ டிகாஷன் சக்கை எதுக்கும் பயன் படுத்த வேண்டாம்.
அதை செடியில் போடலாம்.

திக்கானா டிகாஷனை ஒரு பஞ்சில் நனைத்து அப்ப அபப வைத்தால் போதும்

இரண்டு நிமிட போது மானது.

இல்லை டீபேக் அப்படியே கால் டம்ளர் கொதி நீரில் போட்டு வைத்து நனைந்து இருக்கும் அதை எடுத்து அந்த போகோடு கண்ணிற்கு கீழ் வைத்து எடுக்கலாம்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா உடனே பதிலலித்தற்கு ரொம்ப நன்றி

ஹாய் அர்ச்சனா மேடம்,
எப்படி இருக்கீங்க,
ஊருக்கு போறீங்களா...

மேலும் சில பதிவுகள்