பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு 1Kg வைத்து என்ன செய்வது? (பளு காரணமாக India உறவினற்களுக்காக வாங்கியது எடுத்து செல்ல இயலாமல் என்னிடம் தங்கிவிட்ட்து) எனக்கு இனிப்பு பிடிக்காது. வீணடிக்க மனம் இல்லை. தயவுசெய்து தெரிந்தால் சொல்லுங்களேன்.
Another doubt. If I fry in Oven, how long I can keep it in a jar?(shelf life).
Thank you in advance.

அன்பு ஸ்ரீதேவி,
பாதாமை ஏன் வீணடிக்க வேண்டும்? ஈரமின்றி உலர்த்தி பிரிஜ்ஜில் வையுங்கள். மாதக்கணக்கில் இருக்கும். தேங்காய் இல்லாத போது (இருந்தாலும்) சிக்கன், மட்டன் குழம்புகளுக்கு அரைத்து ஊற்றலாம். அரைத்து பாலில் கலந்து தினமும் குழந்தைகளுக்கு கொடுங்கள். பாதாம் அல்வா கூட இனிப்பு அதிகம் இருக்காது. திகட்டாமல் நன்கு சாப்பிட முடியும். அதல்லாமல் இனி வேறு யாரும் ஏதாவது் சொல்வார்கள்:-))
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம், மிகவும் நன்றி.
உதவி கேட்டால் வரிந்துகட்டி செய்கிறீர்கள். (இந்த படிவை மட்டும் வைட்து சொல்லவில்லை) எப்படி தான் முடிகிறதோ? உங்களை போல் மற்றும் இங்கிருக்கும் பலரை போல் என்னால் முடியவில்லை என்று ஆதங்கம் இருந்தாலும், உங்களை பல விதங்களில் வியக்கிறேன். நன்றி

அன்பு ஸ்ரீதேவி,
நலமா? வெறும் வாய் வார்த்தைகள் தானே? இதில் என்ன இருக்கு? ஆனா, இப்படி வலியப் போய் வாங்கிக் கட்டிக் கொள்வது எனக்கு கை வந்த கலை:-))
வீட்டில் எல்லாரும் சொல்வார்கள், உங்களுக்கு ஏன் இந்த வேலை, பேசாமல் இருங்களேன்னு. பெரிசா பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு திரும்ப அதையே செய்வேன். வாங்கிக்கட்டிக் கொண்டு, கண்ணைக் கசக்கிகிட்டு வரும் போது திரும்ப பழைய வசனமே வரும்.கூடவே வந்திடுச்சுப்பா, இனி மாற்றிக் கொள்வது கொஞ்சம் சிரமம் தான், இல்லையா? திட்டறவங்க திட்டிட்டு போகட்டும்:-) பயன் அடையறவங்க அடையட்டும், சரிதானே?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹலோ செல்விமா,
எப்படி இருக்கீங்க? உங்களுக்கு மெயில் அனுப்பினேன் பார்த்திர்களா?
சுஜிபாலாஜி.

அன்பு சுஜி,
நலமா? பார்த்தேன்ப்பா. குட்டிப் பையன் அழகா இருக்கான். நீ அதைவிட அழகா இருக்கே! நேற்று வெளியில் போய் விட்டதால் டைம் இல்லை. இன்று இரவு பதில் அனுப்புகிறேன். டேக் கேர்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்