கரு முட்டை,

சகோதரிகளே எல்லாரும் நலமா? நான் மருத்துவரிடம் சென்று என் கரு முட்டை வளர்ச்சி குறித்து scan செய்தேன்.அதில் வல பக்க கரு முட்டை 17CM இட பக்க முட்டை 10CM இருந்தது.இரு முட்டைகளும் ஒரே நேரத்தில் உருவாகி ஒரே சீராக வளருமா அல்லது வெவ்வேறு நேரத்தில் உருவாகி size வேறுபடுமா?முட்டை பெரிதாகி உடைந்து விடுமா?வல பக்கம் மட்டும் தான் கருத்தரிக்குமா அல்லது இரண்டில் ஏதாவது ஒரு பக்கத்தி கருத்தரிக்கும?மருத்துவர் இது normal என்று சொல்லி இன்னொரு scan செய்ய சொன்னார்.அந்த முட்டை வளருகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.இது normal தானா இல்லை இதில் ஏதாவது problem வருமா?எனக்கு விளக்கம் தந்து உதவி செய்யுங்கள் தோழிகளே.

"நல்லதே நடக்கும்"

மீனா பீரியட் வந்து எத்தினையாவதுநாள் உங்களுக்கு 17mm சைஸ் வந்திருக்கிறது?
ஒரு மாதம் ஒரு முட்டைதான் ரிலீஸ் பண்ணும்.ஏதோ ஒரு பக்க முட்டை ரிலீஸ்க்கு தயாராகும்.
நீங்கள் அந்த 10mm முட்டையைப்பற்றி யோசிக்கவே தேவையில்லை.
உங்களுக்கு கருமுட்டையில் பிரச்சனையிருப்பதாக என் அறிவுக்கு எட்டியவரை தெரியவில்லை.
அடுத்து வலப்பக்கம் கருத்தரிக்குமா இடப்பக்கம் கருத்தரிக்குமா என்று கேட்டிருக்கிறீர்கள் முட்டை உருவாகும் இடத்தில் கரு உருவாகாது முட்டை ரிலீஸ் ஆகி வெளியே வந்துதான் ஸ்பேம் உடன் ஒன்றுசேர்ந்து கருத்தரிக்கும்.கரு உருவாவது எப்படி என்பதை நெட்டில் தேடி பார்க்கவும்.படத்துடன் நிறைய தகவல் கிடைக்கும்.கண்டுபிடிக்காட்டி சொல்லுங்கோ தேடித்தாறன். முட்டை பெரிதாகி உடைந்து விடுமா என்றும் கேட்டிருக்கிறீர்கள்.எக் வளர்ச்சி நாளுக்கு 1mmஇலிருந்து 2mm வரைக்கும் இருக்கும்.20-24 ற்குவந்தபின் ரிலீஸ் ஆகும்.
மேலதிக விளக்கம் தேவையென்றால் கேளூங்கோ.

சுரேஜினி

இந்த scan நான் 13வது நாள் எடுத்தேன்.மறுபடியும் 15வது நாள் எடுக்க சொல்லி இருக்கிறார் doctor இன்று எனக்கு 14வது நாள் இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்.சந்தோஷமாக இருந்து முடித்த பின் மல்லாக்க தான் படுக்க வேண்டுமா?ஏனென்றால் 1/2 மணி நேரம் தான் என்னால் அப்படி படுக்க முடிகிறது.பின் தூக்கத்தில் ஒருக்கலித்து படுத்து விடுகிறேன்.இதனால் sperm செல்வது தடைபடுமா?இன்னும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அதை இங்கு எப்படி கேட்பது என்று எனக்கு தெரியவில்லை.

"நல்ல்தே நடக்கும்"

"நல்லதே நடக்கும்"

மனோ 14 வது நாள் மற்றும் 15 வது நாள் ரொம்ப முக்கியமான நாள் இருநாளூமே இருக்கலாம். 14 வது நாள் ரொம்ப முக்கியம்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எனக்கு உங்களுக்கு பிரச்சனை இருக்கிற மாதிரி தெரியல,இருந்தாலும் உங்களுடைய கவலை எனக்கு புரியுது,நிறைய கேட்கனும்னு நினைக்கிறீங்க,ஆனால் உங்களுக்கு தயக்கம்,சரி http://www.gghospital.in/index.htm இந்த லின்க் பாருங்க,உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கலாம்.உள்ளே இருக்கும் எல்லா லின்க்லயும் பாருங்க,உங்களுக்கு எது தேவைப்படும்னு..இதுல எல்லாத்த பத்தியும் சொல்லிருக்காங்க..நீங்களும் உங்க கணவரும் சேர்ந்து பாருங்க...

எனக்கு அப்படியெல்லம் நம்பிக்கையில்லைங்க..எப்டி வேனா படுக்கலாம்..ஆனால் நம்பிக்கைக்கு தகுந்தபடி சிலர் இடதுபுறம் படுக்கலாம் என்றும் சிலர் இடுப்பின் கீழ் தலையனை வைத்து உயர்த்தி படுக்கலாம் என்றும் சொல்லுவார்கள்..உணமையில் ஒரு ஸ்பெர்ம் என்பது தானாக நீந்தி செல்லும் தன்மையுடையது அதனை நாமாக உள்ளே ஏற்றி விட தேவையில்லை என்பது எனது கருத்து
இன்னும் ஒன்று இதுவும் என் சொந்தகருத்து தான் குழாந்தை உண்டாக என்றே இன்ன நாள் என்று குறிப்பது தேவையில்லாத ஒன்று..ஒருவித கட்டாயமும் மனாழுத்தமும் வந்து விடும்..மகிழ்ச்சியாக செய்ய வேண்டியது இயந்திரத் தன்மையாக மாறிவிடும்.
எப்பவுமே சந்தோஷமா இருங்களேன்.

ரொம்ப சரியா சொன்னீங்க,இருந்தாலும் எப்படி சொல்லறது யோசிக்கிரதுகுள்ள நீங்க தெளிவா சொல்லிட்டீங்க, தளிகாவோட கருத்த நான் 100% accept பண்றேன்..

enaku dr sonaathai naan ungaluku solkirean enaku egg size chinnatha iruku endru sonnarkal 2 months treatmant aduthen nov & dec jan preg aannan periods vanthu piraku 14 to 18 days romba mukiyam appothu santhoshamaga iruka vandum ennum konjam tips kodutharkal sorry ennalum athai enga sollamudiya villai negal sekarama amma aaka ennudaya valthukall tamil type panna entha message mudika enaku 2 days akum athan sorry

surejini,thanisha,santho,thalika,raji எல்லோருக்கும் ரொம்ப நன்றி.என்னோட doubt 90% clear ஆயிடுச்சி.santho நீங்க குடுத்த link நான் மேலோட்டமா தா பாத்தேன்.அது எனக்கு usefulla aa இருக்கும்னு நெனைக்குறேன்.ரொம்ப நன்றி.surejini உங்களுக்கு எதாவது link தெரிஞ்சா சொல்லுங்க but எனக்காக தேடி கஷ்டபட வேணாம்.மறுபடியும் எல்லாருக்கும் ரொம்ப நன்றி

"நல்லதே நடக்கும்"

"நல்லதே நடக்கும்"

மனோவுக்கு டாக்டர் பாலிக்கிள் ஸ்டடி பண்ணுகிறார்கள் என்று நினைக்கிறேன். அதில் குறிப்பிட்ட நாளில் கணவன் மனைவியை சேர்ந்திருக்க சொல்லுவார்கள். மறுநாள் ஸ்கேன் பார்ப்பார்கள். அதைத்தான் மனோ கேக்குறாங்கனு நினைக்கிரேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மனோ டே13 ல் 17mm சைஸ் மிகவும் நல்ல சைஸ்தான் .15 நாள் எடுக்கமுதல்கூட நீங்கள் ஒருநாள் சேர்ந்து இருக்கலாம்.எக் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னமே ஸ்பேம் வெயிற்பண்ணீக்கொண்டு அதாவது நீந்திக்கொண்டு இருக்கும்.அதனால் டே 14 ல் சேர்ந்திருப்பதும் நல்லதே.அதிலும் சிலருக்கு ஸ்பேம் எண்ணிக்கையில் பிரச்சனை இருந்தால் அடிக்கடியோ நினைத்த நேரமோ சேராமல் டாக்டர் சொல்லும் நாட்களில் மட்டும் சேர்வதே நல்லது.அதாவது உங்கள் எக் ரெடியாக இருப்பதை ஸ்கான் பண்ணி தெரிந்து கொண்டு அந்த நாட்களில் உறவு கொள்வது சாதாரணமாக கருத்தரிக்க முடியாதவர்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு செய்து கொள்ளும் ஒரு விடயம்.மற்றும்படி தளி சொல்வதுபோல் ரிலாக்ஸ் ஆக இருப்பதே நல்லது.இது மிக மிக சாதாரண விடயம் .இ்ந்த முறையில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
என்ன மனோ பெண்களாக பிறந்துவிட்டோம் இல்லையா?இதைப்பற்றி கதைக்காமல் ஒன்றும்தெரியாமல் மனம் புழுங்குவதைவிட மனம்விட்டு பேசுவதில் எந்த தவறும் இல்லை மனோ.இது அந்தந்த நேரங்களில் எவ்வளவு முக்கியம் வேதனை என்பது எங்களுக்குமட்டும்தானே தெரியும்.
அடுத்து அரை மணித்தியாலமே போதும் மனோ.அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.அடுத்து உறவின்போது 1 தலகாணியை முதுகுப்பக்கம் வைத்துக்கொள்ளுங்கள்.அதையும் அரை மணித்தியாலங்களுக்கு அகற்றாமல் விடலாம்.இதெர்கென்று பிரத்தியேகமான தலகாணி விற்பதையே நான் நெட்டில் பார்த்திருக்கிறேன்.அதற்காக நாங்கள் அதை முழுக்க முழுக்க நம்பி வேண்ட வேண்டும் என்றில்லை.இதுவெல்லாம் ஏதோ எங்களால் முடிந்தளவு 2% அல்லது 3,4 வீதமான வாய்ப்புக்களை அதிகரிக்கப்பண்ணத்தான்.ஏனென்றால இப்படியான சின்னச்சின்ன காரணங்களாலேதான் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாதவர்களுக்கு கூட கருத்தரிப்பு தள்ளிப்போகிரது என்பது எனது டாக்டர் சொன்னது.
கவலைப்படவேண்டாம்.அத்தான் நல்லதே நடக்கும் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்களே அதையே நம்பிக்கையாக கொள்ளவும்.

சுரேஜினி

மேலும் சில பதிவுகள்