பூரி பாயசம்

தேதி: February 10, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா - அரை கப்,
பால் - 1/2 லிட்டர்,
சர்க்கரை - 1 டம்ளர்,
ஏலக்காய் - 2,
உப்பு - சிறிது,
எண்ணெய் - பொரிக்க.


 

மைதாவை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து பூரிக்கு தேய்ப்பது போல் வட்டமாக தேய்க்கவும்.
எண்ணெயில் பூரிகளாக பொரித்து, நொறுக்கி வைக்கவும்.
சர்க்கரையை பால் சேர்த்து கொதிக்க விடவும்.
பால் சிறிது சுண்டியதும் நொறுக்கிய பூரிகளை சேர்த்து இரண்டு நிமிடம் விட்டு, ஏலக்காயை தூளாக்கி சேர்த்து இறக்கவும்.


சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்