மின்ட் ரொட்டி

தேதி: February 11, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 2 கப்
புதினா - 1/2 கப்
கொத்தமல்லி - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1 (விரும்பினால்)
உப்பு - ருசிகேற்ப
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

கோதுமை மாவுடன் உப்பு கலந்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை மாவுடன் கலந்து வைக்கவும்.
மாவுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் வைத்திருக்கவும்.
அதன் பின்னர் எடுத்து சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளவும்.
தவாவை அடுப்பில் வைத்து சப்பாத்தியை போட்டு நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
சுவையான மின்ட் ரொட்டி தயார். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை பகிர்ந்துக் கொண்டுள்ள <b> வனிதா வில்வாரணிமுருகன் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ள குறிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என்னப்பா பேசி ரொம்பநாளாயிட்டு.என் ஞாபகமே வறதில்லையோ?? மின்ட் ரொட்டி பார்க்கவே அழகா இருக்கு.நான் செஞ்சு பார்க்கிறேன்.

நான் 2 நாட்களாக அறுசுவைக்கு வரலை பரிமளா... உங்க நியாபகம் வராம இருக்குமா?! செய்து பார்த்து சொல்லுங்க எப்படி வந்துச்சுன்னு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா உங்க மின்ட் ரொட்டி பாக்க அழகா தெளிவா இருக்கு. உங்க வாரம் வரும் வரை வெய்ட் பண்ண முடியலை. நேற்றே செய்திட்டேன். ரொம்ப நல்லா வந்தது. நன்றி! நிறைய புது ரெஸிபி கொடுக்கிறீர்கள். வாழ்த்துக்கள். எல்லாம் உங்க அம்மாவிடம் இருந்து கற்றதா?

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. சந்தோஷமா இருக்கு நல்லா வந்துசுன்னு கேக்க. இதெல்லாம் தங்கை கற்று தந்த சமையல். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேற்று இரவு மின்ட் ரொட்டி செய்தேன். பெண்ணுக்கும், பையனுக்கும் ரொம்ப பிடித்தது. எனக்கும்தான். உங்கள் தங்கைக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

மிக்க நன்றி மாமி. உங்க பின்னூட்டத்தை நிச்சயம் என் தங்கையிடம் சொல்லிவிடுகிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா