மனோகரி மேடம் மற்றும் தோழிகளுக்கு

ஹலோ மனோகரி மேடம், எப்படி இருக்கீங்க? உங்களை ரொம்ப நாளா அறுசுவையில் பார்க்க முடிவதில்லை. ரொம்ப பிசியா? நானும் போன வாரம் வரை வேலைப் பளுவினால் அறுசுவைப் பக்கம் வர முடியாமல் போச்சு. என் பையன் இன்னும் கொஞ்ச நாளில் ஸ்கூல் மாற்றினால் நானே லஞ்ச் பேக் பண்ண வேண்டி வரும். இப்போது ஸ்கூலிலேயே எல்லாம் கொடுத்து விடுவதால் அதனைப் பற்றி நினைக்காமல் இருந்தேன். எதாவது ஐடியா கிடைக்கறதா என்று அறுசுவையில் தேடிப்பார்த்ததில் உங்களின் பதிவும் ஒன்றினை படித்தேன். காலையில் குழந்தைகளுக்கு எத்தனை விதமாக டிபன் செய்து அனுப்பலாம் என்று அழகாக அதே சமயம் எளிமையாக சொல்லி இருந்தீர்கள். பிழையில்லாத தமிழும், அந்த ஐடியாக்களும் உங்க எழுத்தை ரொம்பவே நினைக்க வெச்சுடுச்சு. என்னைப் போலவே இங்கே நிறைய பேர் உங்க எழுத்தை நிச்சயம் மிஸ் பண்ணுவாங்க.

நேற்று அழகுக்குறிப்பு பகுதியில் நீங்க அளித்திருந்த உடைகள் பற்றிய பதிவினையும் படித்தேன். முன்னாடி நிறைய டிப்ஸ் எழுதுவீங்க. ஆர்வமா படிப்பேன். முக்கியமா சில்க் சாரீஸ் பிளவுஸ் வீணாகிவிடாமல் இருக்க, அல்சருக்கு ஏற்ற உணவு, குடும்பத்தினரிடம் இருக்க வேண்டிய நல்லுறவுன்னு உங்க எழுத்து எனக்கு எப்பவும் ரொம்ப பிடிக்கும். எல்லாரும் எழுத அலட்டிக்கற விஷயத்தைக்கூட சொல்ல வேண்டிய விதத்தில் சாதாரண விஷயம் மாதிரி சொல்றது எல்லாருக்கும் வராது. ஆனால் உங்க எழுத்து எப்பவும் நேரா பேசற மாதிரி இருக்கும். அறுசுவையில் முதலில் அதிக எண்ணிக்கை குறிப்புகளை கொடுத்தவங்க நீங்க. ஏன் அடிக்கடி வருவதில்லை. உங்க வரவை எதிர்பார்த்து இங்கே நிறைய பேர் இருக்கோம். இனி உங்க பதிவுகளை அடிக்கடி பார்க்கணும். நான் முன்பே உங்ககிட்ட சொன்னபடி, நான் புது மண பெண்ணுக்கான அழகுக்குறிப்பு டிப்ஸ் நிறைய எழுதலாம்னு இருக்கேன். நீங்களும் அந்த தலைப்பில் எனக்கு உதவறேன்னு சொல்லி இருந்தீங்க. உங்களுக்கு எப்போ நேரம் கிடைக்கும்னு சொல்லுங்க.

என் நண்பர் பாபுக்கிட்ட பேசும்போது நிறைய முறை உங்களைப் பத்தி கேட்டிருக்கிறேன். எப்போதும் மன்றத்தில் உற்சாகமாக பங்களிப்பீர்கள் என்று சொல்வார். இப்போது அவருடன் பேசியும்கூட பல வாரங்களாகி விட்டது. ஒரு முறை பாப்பியோடு பேசினதோடு சரி. கொஞ்ச நாள் முன்பு வரை நாம் பட்டிமன்றம், மற்ற பதிவுகளில் அவ்வப்போது பேசிக் கொண்டுதான் இருந்தோம். ஆனால் இப்போது ஒரு பெரிய இடைவெளி வந்தது போல தோன்றுகிறது. எங்கிருந்தாலும் ஒரு ஹாய் சொல்லிட்டுப் போங்க ( ஒரு முறை ஹாய் சொல்ல வந்தாதான் விட மாட்டோமே.).

மனோகரி மேடத்துக்கிட்ட பேசற சாக்கில் அப்படியே நம்ம அறுசுவை உறுப்பினர்களுக்கும் ஒரு ரோல் கால் போட்டுடறேன். ரோஸ்மேரி, வாணி ரமேஷ் ரெண்டு பேரும் ரொம்ப நாளாவே காணோம். என்ன பண்றீங்க. எப்பவாவது வந்து ஒரு ஹாய் சொல்லுங்கப்பா. நிச்சயம் அறுசுவையை பார்ப்பீங்கன்னு நம்பறேன். திவ்யா பேபிக்கூட பிசியா இருப்பாங்க. அதனால கொஞ்ச நாளைக்கு டிஸ்டர்ப் செய்யக்கூடாது. அம்பிகா, சங்கத்தை ஆரம்பிச்சுட்டு எங்கே போனீங்க. முன்னாடி செட் மாதிரியே இப்ப ஜலீலாக்கா,அதிரா, இலா, சுரேஜினி, உமா, ஜெயலக்ஷ்மி, தாமரை, தனிஷான்னு ஒரு கலக்கல் பட்டாளமே இருக்காங்க. நீங்களாம் இல்லாததுதான் என்னவோ போல இருக்கு. தளிகா எப்பவும் ஒழுங்கா வந்துடறாங்க. ஹேமாவை ஒண்ணும் சொல்ல முடியாது. ஏன்னா நானும் கொஞ்ச வாரமா தலைகாட்டல( என்ன ஹேமா வீடு கட்டறதை மேற்பார்வை பண்றதுல பிசியா). சுபா சமையல் குறிப்பு எழுதறதோட நின்னாச்சா? உங்க கானாலாம் வந்து எடுத்து விடுங்க. வின்னி, உங்க கூட பேசியே நாளாச்சு. தோட்டமெல்லாம் எப்படி இருக்கு?

மனோ மேடம், எப்படி இருக்கீங்க? உங்க கூட பேசியும் நாளாச்சு. அடுத்த இந்தியா ட்ரிப் எப்போ? இந்த முறை கண்டிப்பா எங்க வீட்டுக்கு நீங்க வரணும் ( அப்படியே ரிடர்னில் உங்ககூட வந்து உங்க சமையலை ஒரு பிடி பிடிக்கணும்னு இருக்கேன். போன முறை மிஸ் பண்ணிட்டேன்).

இனி அடிக்கடி அறுசுவை வர முடியும்னு நினைக்கிறேன்.திடீர்னு ஒரு அரட்டையில் நுழைஞ்சு பேசி அவங்க டாப்பிக்கை மாத்த விரும்பல. அதான் தனிப்பதிவா போட்டுட்டேன். மனோகரி மேடம் அண்ட் பிரெண்ட்ஸ் உங்க பதிலை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கேன்.

எப்படி இருக்கீங்க,உங்களையும் நிறைய பேர் தேடினாங்க.எல்லோரும் வந்தால் அறுசுவை எப்பவும் கலகலன்னு இருக்கும்.மனோகரி மேடம்,மனோ அக்கா மற்றும் தோழிகள் அனைவரிடமும் எனக்கும் அடிக்கடி பேச ஆசைதான்.பட்டிமன்றத்திற்கு அப்புறம் உங்களையும் ரொம்ப நாளாய் பார்க்கலை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்னம்மா தங்கை தேவா,உங்களை ஆளைக்காண வில்லையே?நலமா?உங்கள் பைய்யன் எப்படி இருக்கின்றார்.இப்போது நன்றாக உறங்குகின்றாரா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

எப்படி இருக்கீங்க. உங்க சமையல் குறிப்பெல்லாம்,அவசரமா வேலை நடுவில் கிடைச்ச கேப்பில் பார்த்தேன். பாக்கவே ஆசையா இருந்துச்சு. பின்னூட்டம் எழுத முடியாம ஆபிசில் நடுராத்திரி ஒரு மணி வரை ப்ராஜெக்ட் வேலை. பழியா கிடந்து ஒரு வழியா இப்ப முக்கால்வாசி முடிச்சு ரிலாக்ஸா இருக்கு. இனி அடிக்கடி உங்க கூட பேச ட்ரை பண்றேன். நீங்க்க ரொம்ப சின்னப் பொண்ணு மாதிரி இருக்கீங்கன்னு பாப்பி சொன்னாங்க. எனக்கும் பாக்க ஆசையா இருக்கு. எப்பன்னுதான் தெரியல.அடுத்த பட்டிமன்றம் எப்போ? அப்போ நிச்சயம் நாம நிறைய பேசுவோம்னு நம்பறேன். என்னை விசாரிச்சு எழுதினதுக்கு ரொம்ப நன்றி.

நான் நலம். நீங்க நலமா? உங்க கூடவும் பேசி நாளாச்சு. உங்க போட்டோஸ் பார்த்தேன். ரொம்ப அழகு. நல்ல சிரிச்ச முகம். சென்னை வந்தா கண்டிப்பா உங்களைப் பார்க்கணும். என் பையன் இப்பலாம் என்னை கண்டுக்கறதே இல்லை. இப்போதைக்கு அப்பாதான் எல்லாம்( நான் இப்பலாம் ப்ரீயா, நாவலே தனியா உட்கார்ந்து படிக்க முடியுது). நைட்டியெல்லாம் பிடிச்சுக்கறதெல்லாம் மறந்துட்டான். ஸ்கூலில் இப்ப கேர்ள் பிரெண்ட்ஸ் அதிகமாயிடுச்சு. அவங்க முன்னாடி நான் கொஞ்சினா ரொம்ப வெக்கமா இருக்காம். என்னம்மா நீங்க, நான் ஒன்னும் குட்டிப்பாப்பா இல்லன்னு சொல்லும்போது வர்ற சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்க வேண்டியதாயிருக்கு.

ஆனால் போன வாரம் நடந்த ஒரு விஷயத்துக்கு அப்புறம்தான் பிள்ளையின் பாசம் என்னன்னு நல்லா புரிஞ்சுக்கிட்டேன். போன வாரம் அவனை முதல் முறையா சினிமா நான் அழைச்சுட்டுப் போனேன். நாங்க கிளம்பினதுல கொஞ்சம் லேட்டானதால சினிமா காம்ப்ளெக்சுக்குள்ள அவனை கையில் இழுத்துக்கிட்டு வேகமா ஓடினேன். அதுக்கு அவன், அம்மா, போன வாரம் தானே நீங்க கீழே விழுந்து முட்டியில் காயமாயிருக்கு. சினிமா லேட்டானா பரவாயில்லை. உங்களுக்கு வலிக்கப் போகுது. ஓடாதீங்கன்னு சொன்னான். நிஜமாவே அப்ப நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு ஈடில்லை. கால் காயம் பலமானதா இருந்தாலும் அவசரத்துல நான் மறந்து ஓட ட்ரை பண்ணேன். ஆனால் அவனுக்கு பிடிச்ச படத்தை, அதுவும் முதல் முறையா சினிமா போற சந்தோஷத்துலயும் அவன் மறக்கல. தூக்கத்தை இழந்து, என்னவோ தியாகம் பண்ண மாதிரி அலுத்துக்கற அத்தனையையும் அந்த ஒரு அக்கறையான வார்த்தை ஒண்ணும் இல்லாம பண்ணிடுச்சு. அவங்க வெக்கற பாசம், திரும்பியும் அவங்களுக்கு அக்கறையான வார்த்தைகளா கொடுக்கும்போதுதான் நம்ம அப்பா அம்மாவும் சந்தோஷப்படுவாங்கன்னு நல்லாவே புரிஞ்சுது.

உங்க சமையல் போட்டோசெல்லாம் போட்டு அட்மின் எல்லாருக்கும் ஆசையை கிளப்பி விட்டுட்டார். அந்த சிக்கன் பிரை, புல்கா ரொட்டி, பிரியாணி, மஞ்சூரியன், மட்டன் கிரேவிலாம் நினைக்கும்போதே சாப்பிடணும்போல இருக்கு.

உங்க கூடலாம் பேசாமல் எனக்கும் என்னவோ போல இருந்துச்சு. நேரில் பாத்துக்காட்டியும் இதுல பேசும்போது என்னவோ ரொம்ப நாளா பழகினது மாதிரி தோணிடுது. நிச்சயம் இந்தியா வரும்போது முதல் விசிட் உங்களைத்தான்( நீங்க சென்னையில் இருப்பதால் ஈசி). மர்ழியா எப்படி இருக்காங்க? அவங்களுக்கு என்ன பேபி? ட்யூ டேட் எப்பவாம்? முடிஞ்சா சொல்லுங்க.

உங்கள் நீண்ட பதிவும்,மகனைப்பற்றி எழுதி இருந்ததையும் ரசித்துப்படித்தேன்.குழ்ந்தைகள் நடவடிக்கைகளை நாள் பூராவும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.அலுப்பே வராது.நீங்கள் விவரித்து இருந்த விதமே அலாதி.
எப்படியோ என் போட்டோவைப்பார்த்து விட்டீர்கள்.உங்கள் புகைப்படத்தைத்தான் வெகு இரகசியமாக வைத்துக்கொண்டீர்கள்.அனுப்பி வைக்கின்றேன் என கெட் டு கெதர் அன்று போனில் சொன்னதை மறந்து விட்டீர்கள் போலும்.
சென்னை வந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.மர்ழியா சற்று முன் போனில் கூப்பிட்டார்.டாக்டர் அட்மிட் ஆக சொல்லி விட்டார்.என்ன செய்வது என்று தெரிய வில்லை என்று ஹாஸ்பிடலில் வைத்தே போன் செய்தார்.இப்போது என்ன முடிவு எடுத்து இருக்கின்றாரோ தெரிய வில்லை.இன்னும் சற்று நேரம் சென்று போன் செய்து பேசவேண்டும்.என்ன பேபி என்று இந்தியாவில் ஸ்கேன் செய்து சொல்லமாட்டார்கள்.மிகவும் பழகிய டாக்டர்களே சொல்லமறுக்கின்றார்கள்.சட்டதிட்டங்கள் கடுமையாக உள்ளது.ஸோ கண்டிப்பாக மர்ழிக்கு கூட என்ன குழந்தை என்று தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.உங்கள் விசாரிப்புகளை கண்டிப்பாக அவரிடம் சொல்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

எப்படி இருக்கிங்க.உங்கள் மகன் நலமா?உங்கள் பதிவுகள் பார்த்து ரொம்ப நாளாகிடுச்சு.மேம் நான் நீங்க சொன்ன மாதிரி த்ரெடிங் செய்துப் பார்த்தேன்.சரியா வரல.எப்படியும் செய்ய பழகிடுவேன்னு நம்பிக்கை இருக்கு.

ஹாய் தேவா எப்படி இருக்கீங்க? நானும் உங்களை ரொம்ப நாளாக காணோமே என்று நினைத்தேன். நீங்க இந்தியாவிற்கு போய் இருக்கிறீர்களோ என்று கூட நினைத்தேன். நீங்க ரொம்ப நாள் வராததால் பாருங்க, எங்க முகமெல்லாம் பொலிவிழந்து உள்ளது:-) அங்கு வெயில் அதிகமாக உள்ளது என்று நியூஸ் பார்த்தேன். அப்போது உங்க நினைவுதான் வந்தது.

தோட்டமெல்லாம் சம்மரில் நன்றாக போனது. இப்பொது வின்டர் என்பதால் நோ தோட்டம், துரவு.

பட்டிமன்றம் எல்லாம் புது சைட் வந்த பிறகு தொடரலாம் என்று அட்மின் சொல்லிவிட்டதால் பட்டிமன்றம் இப்பொதைக்கு இல்லை என நினைக்கிறேன்.

நீங்க சொன்னதுபோல் வாணி, ரோஸ்மேரி இவங்கெல்லாம் திடீரென்று வருவதை நிறுத்தி விட்டார்கள். எல்லோரும் வந்து போனால் அறுசுவை நன்றாக இருக்கும். நானும் செல்வி அக்கா, மற்றவர்களிடம் எல்லாம் பேசி ரொம்ப நாட்களாகி விட்டது.

உங்களுக்கு காலில் எப்படி காயம் ஏற்பட்டது. மிகவும் வலித்ததா? இப்போது பரவாயில்லையா? டேக் கேர். இனி அடிக்கடி பேசலாம்.

அன்புள்ள தேவா!
என்னை விசாரித்து எழுதியுள்ளதைப் படித்து சந்தோஷப்பட்டேன். நான் இப்போது ஊருக்குத்தான் வந்திருக்கிறேன் . மருமகளும் என் கணவரும் இம்மாதக்கடைசியில் துபாய்க்குத் திரும்புகிறார்கள். நான் மட்டும் இங்கு இன்னும் ஒரு மாதம் இருப்பேன். சென்ற தடவை நீங்களும் அம்மாவுடன் இங்கு வீட்டுக்கு வருவதாகச் சொல்லி ஏமாற்றி விட்டீர்கள். பாபுவும் அப்படியே. நீங்கள் எப்போது இந்தியா வருகிறீர்கள்? நான் அப்போது தஞ்சையில் இருந்தால் நிச்சயம் எங்கள் வீட்டுக்கு வந்து என் சமையலை ஒரு பிடி பிடிக்கிறீர்கள். இப்போதே அழைத்து விட்டேன்.

உங்களின் அன்பு என்னை நெகிழ வைக்கிறது. ஷார்ஜா திரும்பியதும் நான் எனது தொலைபேசி எண்ணைத் தருகிறேன். நாம் ஃபோனில் பேசலாம்.

நலமா இருக்கீங்களா. உங்க பையன் இப்போ எப்படி இருக்கார்னு எனக்கு நீங்க ஆலோசனைக் கொடுத்த பதிவில் கேட்டுருந்தேன். இங்க பதில் கிடைச்சிட்டு, வெங்கியின் பாசத்தைக் கண்டு எனக்கே நெகிழ்ச்சியா இருக்கு. நல்ல படிக்கிறாரா வெங்கி? நீங்க முன்புபோல அடிக்கடி அறுசுவைக்கு அடிக்கடி வருவதில்லை. இனிமேல் அடிக்கடி வாங்க. உங்க சி.டி.க்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்