பிரசவத்திற்கு பின்

நார்மல் டெலிவரியா இருந்தா பிரசவத்திற்கு பிறகு எப்ப இருந்து Excercise செய்ய ஆரம்பிக்கலாம்... பெல்ட் எப்ப இருந்து போடணும் ? வேற என்னல்லாம் டிப்ஸ் இருக்கோ சொல்லுங்க ப்ளீஸ்...

பிரசவத்திற்கு பிறகு என்னால அடிக்கடி நெட் பார்க்க முடியுமான்னு தெரியல... அதான் இப்பவே கேட்டு வச்சுக்கறேன்...

ஹாஸ்பிடலுக்கு போறதுக்கு என்னன்ன எடுத்துக்கணும்...
ஏற்கனேவ பிரசவ அனுபவங்கள் பகுதியில படிச்சேன்.. இருந்தாலும் இன்னம் தெளிவா சொன்னா உதவியா இருக்கும்...

குழந்தைக்கு எதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லிட்டங்க.. சோ எதுவும் வாங்கலை...நம்ம யூஸ் க்கு என்னன்ன எடுத்துக்கணும்..இல்ல எல்லாமே ஹாஸ்பிடல்லயே பார்த்துக்குவாங்களா?

டாக்டர் எப்ப வேணா வலி வரும்னு சொல்லி இருக்காங்க.... எங்க வீடு ஹாஸ்பிடல்ல இருந்தி 30 KM தூரத்துல இருக்கு... வலி வந்தவுடனே இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ண முடியுமா? இல்ல வேற ஏதானும் alternate பண்ணனுமா?

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

ஃப்ரண்ட்ஸ்,

labor symptoms பத்தி நிறைய நெட்ல படிச்சேன்.. எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது... இருந்தாலும் உங்களோட அனுபவங்கள் தெரிஞ்சா கொஞ்சம் தைரியமா இருக்கும்...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

நீங்க உங்களுக்கு என்ன வாங்கனும் கேட்கறீங்களா?இந்தியாவில் ஹாஸ்பிட்டல்லயே பார்த்துக்குவாங்களான்னு தெரியல.நான் என் அனுபவத்தை சொல்றேன்.உங்களுக்கு நைட்டி,உள்ளாடைகள்,சோப்பு,சீப்பு,ப்ரஷ்,டவல்,பவுடர்,பொட்டு[இவை அனைத்தும் நான் புதுசாவே வாங்கினேன் ஏனென்றால் இங்கு டெய்லி செக்கப் வரும் டாக்டர்ஸ் தமிழர்கள்ன்னாஒரு மாதிரி பார்ப்பாங்க],செல்போன் மற்றும் அதன் சார்ச்சர்,டாக்டர் பைல்ஸ்,நாவல் புத்தகம் [உங்களுக்கு போர் அடிக்கும் போது படிக்கலாம்}இங்கு ஆஸ்பிட்டலில் டி.வி க்குட கனெகஷன் வாங்கிக்கலாம்.மறுபடியும் ஞாபகம் வந்தால் எழுதுறேன்பா

சங்கீத்தா பிரசவ அனுபவங்கள் என்ற ஒரு த்ரெட்டில் எல்லோருடைய அனுபவமும் உண்டு அதனை கட்டாயம் படியுங்க.
ஹாஸ்பிடலுக்கு போக தயாராகும் 3 வாரம் முன்பாவது ஒரு பேக் தயார் பன்னி வச்சுக்கனும்..நீங்க வெளிநாட்டினா இல்ல இந்தியாவிலா அதற்கு ஏற்றாற்போல் எதை கொண்டு போகலாம் என்று சொல்லுகிறோம்.
நான் ஊரில் இருக்கும்பொழுது பேகில் எடுத்து வைத்தது 4 காட்டன் நைட்டி,அதற்கு தேவையான உள்ளாடைகள்..தாய்பால் கொடுக்க சவுகரியமாக உள்ளாஅடைகள் வாங்கி வைத்துக் கொண்டால் ரொம்ப சவுகரியம்...2 நல்ல காட்டன் ஷால் இருந்தால் நல்லது சில சமயம் மேலே போட்டுக் கொள்ள வேண்டி வரும்.
தலை வார சீப்பு,2 குளித்து துவட்ட துண்டுகள்,பிடித்தமான சோப் ..சில ஹாஸ்பிடலில் லேபர் வார்டில் மேலே விரிக்க துணி கேட்பார்கள் அதற்காக ஒரு பெரிய வேட்டி துணி கூட போதும்..இன்னும் எதையெதையோ வைத்திருந்தேன் மறந்து போய்விட்டது...குழந்தைக்கு அப்போ எல்லாம் தருவார்களோ?
பெல்ட் எனக்கு சுத்தமா போட முடியாமல் போன ஒரு பொருள்...மிகவும் கஷ்டமாக இருந்தது.ஆனால் ஹாஸ்பிடலில் டெலிவெரி ஆனதும் போட சொல்லுவார்கள் சிலர்...வீட்டுக்கு வந்ததும் அவிழ்த்து விட்டேன்..னார்மல் டெலிவெரிக்கு ஸ்டிசெஸ் இருந்தால் அது சரியாகி கொஞ்சம் கம்ஃபடபிலாக நடக்க தொடங்கிவிட்டால் வாக்கிங் போகலாம்...அதைத் தவிற சிறிய சிறிய மூச்சுப்பயிற்ச்சி படுத்துக் கொண்டே செய்யக் கூடிய உடற்பயிற்ச்சி எனக்கெல்லாம் ஹாஸ்பிடலில் குழந்தை பிறந்த கைய்யோடு ஃபிசியோதெராபி க்லாசில் கொண்டு போய் சொல்லி தந்தார்கள்..டெலிவெரி முடிந்து மனது வைத்தால் 1 வருடத்தில் பழைய நிலைக்கு வயிறு வந்து விடும்.

எனக்கு 14 மனி நேரம் லேபர் வலி இருந்தது ஆனால் தொடரந்து இல்லை,கடைசியில் முதுகு தன்டில் ஊசி போட தயார் அகி விட்டர்கல் , எனெர்ஜி இல்லை என்ட்ரு சொல்லி ட்ரிப்ஸ் ஏட்ரினார்கல்,சிரிது நேரதில் வலி வந்து விட்டது,குழந்தை பிறந்ததும் வலி காணாமல் போயி விட்டது

அன்பு சங்கீதா,
மெயிலில் விளக்கமாக எல்லாம் எழுதி இருக்கேன். அப்படி மெயில் பார்க்க முடியாதுன்னா சொல், இங்க காப்பி பண்ணி போடறேன். நல்லபடியாக, ஆரோக்கியமான குழதையைப் பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பிரசவத்திற்கு பிறகு எப்ப இருந்து periods வரும்
அடுத்த குழந்தை உன்டாகி விட்டால் தாய்பால் சுரக்காதா?

பிரசவத்திற்கு பின் சுமார் 9 மாதங்களுக்குள் வரும்..இல்லையென்றல் மருத்துவரை காண வேண்டும்.அடுத்த குழந்தை உண்டாகிவிட்டால் பால் சுரக்கும் தான் என்றாலும் உடனடி மூத்த குழந்தைக்கு பால்லூட்டுவது நிறுத்த வேண்டும்

உடனடி பதிலுக்கு மிக்க நன்றி அக்கா

பிரசவத்திற்கு பின் வரும் பீரியட்ஸ் எத்தனை நாட்கள் இருக்கும்?
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

மேலும் சில பதிவுகள்