ஞானப்பல்

ஐயோ எனக்கு கடைசிப்பல்லு நேரம் காலம் தெரியாமல் இப்ப முளைக்குது வலி தாங்க முடியவில்லை.டாக்டர் தந்த கொப்பிளிக்கும் மருந்தை பாவிக்க எடுத்தாலே வாந்தி வருது.திரவமாயும் சத்தாவும் என்ன சாப்பிடலாம்.2நாளா சூப் குடித்து அதுவும் வெறுத்துப்போச்சு.நடக்க நித்திரை கொள்ள சாப்பிட எல்லாத்துக்கும் தலைவலிக்குது என்னை காப்பாற்றுங்கோஓஓஓஓஓ..

அறுசுவை வேறு என்னைப்பழிவாங்குது திறக்கவே மாட்டுதாம்.novamoxin250g,amoxicillin250g யாராச்சும் பாவிச்சு இருக்கிறீங்களா?

சுரேஜினி

சுரேஜினி என்ன செய்ய ஞானம் அது இருக்குன்னு காமிக்க இப்படி.. சாரிம்மா கேக்கவே பாவமா இருக்கு. எனக்கு இது பாவித்த யாரும் தெரியாது. எனக்கு ஒரு டாக்டர் பிரெண்ட் இருக்கா அவள்கிட்ட கேட்டா நான் பிரெக்னென்ட் என்று நினப்பாங்க :)) இப்ப கால் பண்ணினேன் அவங்க ஆபிஸ் மெயில் அனுப்பினேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்புள்ள சுரேயினி, நானும் amoxicilin(500 mg) பாவித்து இருக்கின்றேன். ஆனால்,மருந்து விசயங்களில் நானே ஒரு மருத்துவர் போல் செயல் படுவேன்(எனக்கு பிடித்தால் தான் போடுவேன்.நோவு போகாமல் இருந்து கஷ்டப்படுவேன்). இந்த ஆன்டி பயாட்டிக்ஸ் எல்லாம் முழுவதும் முடியும் வரை எடுக்க வேண்டும். இடையில் எக் காரணம் கொண்டும் எடுக்காமல் விடக் கூடாது.
vany

always smile

இலா ஆபத்துக்கு ஓடி வார நல்லமனசு உங்களுக்கு.எனக்கும் ஐடியா வந்துட்டு.எனக்கு அன்புடன்.காம் ல் இருக்கும் டாக்டருடன் மெயிலில் தொடர்பு இருக்கு .கேக்கிறேன்.மிக்க நன்றி இலா.

சுரேஜினி

வாணி மிக்க நன்றி 500mg பாவிச்சனீங்களோ அப்ப நான் 250mg பாவிக்கலாம் எண்டுதான் நினைக்கிறன்.ஐயோ அதில 1 எடுக்கவே அருவருப்பா இருக்கு முடியும் வரையா? இப்போதைக்கு வலிக்க வலிக்க அதை முன்னால் வச்சு பாத்துக்கொண்டு இருக்கிறன்.

சுரேஜினி

செக் பன்னுங்க.பல்லு correct-ஆக முளைக்கிறதா என்று.இல்லையெல் எப்ப இருந்தாலும் தொந்தரவு தான். நம்ம jaw-ல தகுந்த இடம் இல்லாத பொது வலி வரது normal தான்.நான் pain killer எடுத்தேன்

Be Good,Do Good

நன்றி சங்கீதா .செக் பண்ணவே தேவையில்லை எனக்கு வாய்க்குள் கடைசிப்பல்லு வளர இடமில்லை.ஏற்கனவே டாக்டர்கள் சொல்லியாச்சு.இதற்கு முதல் இடப்பக்கப் பல்லு வரும்போது இதேமாதிரிதான் தசைக்குள் குத்தி உயிரை எடுத்தது.அது வளந்து pain இல்லாமல் போகமுதல் புடுங்கவும் முடியாது எண்டு எல்லாத்தையும் தாங்கி பிறகுதான் புடுங்கினேன்.அதேமாதிரி இதுவும் வருது.

சுரேஜினி

அன்பு சுரேஜினி,
நலமான்னு கேட்டா கிண்டல் தான். அந்த மாத்திரைகள் சும்மா ஒரு மனநிறைவுக்குதான். வலி எதற்கும் கேட்காது. வலிக்கும் இடத்தில் கிராம்பு தைலம் தடவினால் கொஞ்சம் கேட்கும். ரொம்ப வலி வரும் போது ஐஸ் ஒத்தடம் கொடுங்கள். நல்ல பலன் இருக்கும். பல் வளர இடமில்லைன்னா கொஞ்சம் ஓப்பன் செய்து விடுவார்களே. அதற்கும் இடமில்லைன்னா ஆபரேஷன் செய்து பல்லை வெட்டி எடுப்பார்கள்(அனுபவம் தான்)சம்மட்டி கொண்டு அடிப்பது போல் வலிக்கும். கொடுமையாக இருக்கும்.
அரிசி கஞ்சி (எனது குறிப்பில் இருக்கு) போட்டு குடியுங்கள். கொஞ்சம் பசி தாங்கும். ஜவ்வரிசி கஞ்சியும் குடிக்கலாம். விருப்பம் போல் உப்போ சர்க்கரையோ சேர்த்து குடிக்கலாம். சூப்பே குடித்தால் பசியை அதிகமாக்கும். அதோடு மாத்திரை சாப்பிட்டால் அல்சர் வேறு தலைகாட்டும். proxyvan, spasmo proxyvan இரு மாத்திரைகளும் வலிக்கு நல்ல நிவாரணி. ஏதாவது ஒன்று எடுக்கலாம்.
அதிரா மாதிரி அதிகம் பேசாமல் கம்மென்று இருந்தாலே வலி குறையும். கையில் எப்போதும் ஒரு பேப்பர், பேனாவுடனே இருக்கவும், வீட்டில் இருப்பவர்களிடம் பேசுவதற்கு பதில் எழுதி காண்பிக்க:-)
வலி விரைவில் குணமாக வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

குசும்பு செல்வி அக்கா .போய் மெசேச் செக் பண்ணுங்கோ.உங்கள் அரிசிக்கஞ்சி செய்ய வேணும் .நன்றி .விடைபெறுகிறேன்.

சுரேஜினி

சுரேஜினி போய் பேசாம பிடுங்கிடுங்க்ளேன்..எனக்கு தந்தது ப்ரூஃபென் தான்.
ஆனால் வெளியே வந்து விட்டது ரொம்ப இடமில்லாமல் நுழைந்து வந்ததால் அது அதை விட கொடுமையாக உள்ளது.பல்லின் நடுவே கம்ஸின் மீதம் இருக்கும்..எது கடித்தாலும் எபவும் அந்த கம்ஸில் தட்டி வலிக்கும்.ஆனால் அதை பிடுங்கவும் செய்யாமல் காப்பாற்ற சொல்லியிருக்காங்க..எப்படி காப்பாத்த போறேனோ.
அப்பப்பா வலியா அது சரியா செல்வியக்கா சொன்னது போல் தான் எதாலோ அடிப்பது போல் இருக்கும்..ஏன் தான் wisdom tooth என்று பேரையும் வைத்து விட்டு இப்படி அந்த பல் கொடுமை படுத்துதோ..

மேலும் சில பதிவுகள்