பிளாஷ் பேக்...

"வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள"-னு காலங்காத்தலா என்னுடைய மொபைல் அலாரம் அடிச்சு ஊரை கூப்பிட, என்னவோ ஏதோ-னு பயந்து அடிச்சு பிடிச்சு உக்காந்தா, காதலர் தினம் ஸோ குளிக்குற வழிய பாரு-னு மண்டை-ல உரைக்க.... அதை கண்டுக்காம....

கொஞ்சம் காலேஜ் நாட்களை நினைச்சு பார்த்தா நல்லா இருக்குமோ-னு தோண,

அப்படியே பிளாஷ் பேக்.... 2004 பைனல் இயர்-னு நினைக்கிறேன்....

நமக்கு பிடிச்ச பொண்ணு... சாரி எனக்கு பிடிச்ச பொண்ணு... என்னை விட வயசுல சின்ன பொண்ணு தான்... ஜூனியர்...

பேரு ரொம்ப அவசியமோ.... ம்ம்ம்ம்.. பேரு இருக்கட்டும்...அழகா இருப்பா...... அழகா சிரிப்பா... அழகா பேசுவா... அழகா நடந்து வருவா...(டேய்... அருண்னு கவிதை பின்னி எடுக்கிற... எப்படிடா???... என்ன கொடுமை-னு எங்கோ இருந்தோ முணுமுணுப்பு வருதே... கண்டுக்காத... )

சினிமாக்களில் லவ் பண்ற பொண்ணை பார்த்தா கரண்ட் அடிச்சா மாதிரி இருக்கும்-னு சொல்லுவாங்க... நமக்கும் அப்படி தான்... ஆனா ஒரு சின்ன வித்தியாசம் அந்த பொண்ணு-னு இல்லை.. எந்த பொண்ணை பார்த்தாலும் அப்படி தான் தோணுச்சு.... சரி மேட்டர்-க்கு வாங்க...

அவ கூட எப்படி பேசலாம்????? நம்ம ஏரியா பசங்களே இப்படி தான்.... பொண்ணுங்களை பார்த்து பேசணும்னா கை கால் எல்லாம் நடுங்கி.... வேர்த்து கொட்டிடும்....

நமக்கு ஒரு பழக்கம்... ஒரு பொண்ணை பார்த்து விட்டா பேசுறதுக்கு முன்னாடியே அந்த பொண்ணு கூட கல்யாணம் ஆகி பொருட்காட்சி சேர்ந்து போற அளவுக்கு நினைப்பு போயிடும்....

சரி.... இப்படி பேசலாமா அப்படி பேசலாமா-னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தேன்...

காலேஜ் முடிஞ்சு அவ வீட்டுக்கு போற நேரம் பார்த்து... அவளை கூப்பிட்டு (உள்ளுக்குள்ள நடுக்கம் வேற).... பர்ஸ்ட் இயர் புக் இருந்தா கொஞ்சம் கொடு-னு கேட்டேன்.. எனக்கு தெரிஞ்ச பையனுக்கு கொடுக்கணும்-னு வேற சொன்னேன்... அவ ஏன் உங்ககிட்ட இல்லையா-னு நக்கலா கேக்க.... எனக்கு என்ன பேசணும்-னு தெரியல.... நான் தான் இந்த கேள்விக்கு தயாரா வரலையே.... ம்ம்ம்ம்...(அவளுக்கு இப்படி தெரியும்... அரியர் வச்ச பாடத்துக்கு எல்லாம் அந்த புக்குகளை நார்நாராக கிழிச்சு பிட் அடிச்சா விஷயம்) ...எங்கோ தொலஞ்சு போச்சு-னு சமாளிச்சேன் ... சரி கொண்டு வர்றேன்-னு சொல்லிட்டு திரும்பி கூட பாக்காம போயிட்டா....

ஏதோ ஒரு பெரிய கம்பெனி நேர்முக தேர்வை வெற்றிகரமா முடிச்ச மாதிரி ஒரு பெருமிதம் வந்தது.... (ஓவரா இருக்கோ... பரவா இல்லை... அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..)

நான் வீட்டுல இருந்து காலேஜ் போய் வந்தவன்.... இதுக்கு பேரு day scholar தானே... ஆனா காலேஜ் ஆரம்ப நாட்களில் யாராவது, நீ day scholar-nu கேட்டா, நான் free seat-னு சொல்லுவேன்... கேக்குறவன் தலைல அடிச்சுக்குவான்... அப்புறம் தான் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டது அவன் என்ன உண்மை-ல கேட்டான்னு....

இந்த ஒரு சின்ன விஷயம் தெரியல-னு சொல்லி எங்க அப்பாகிட்ட போயி, என்னை ஏன் தமிழ் மீடியம் படிக்க வச்சீங்க-னு சண்டை போடுவேன்.... எங்க அப்பா ஒன்ணும் சொல்லாம போய்டுவாங்க...

அப்புறம் தெரிஞ்சவங்க மூலமா அவளும் தமிழ் மீடியம்-னு கேள்விப்பட்ட போது ஒரு சொல்ல முடியாத சந்தோஷம் வந்தது பாருங்க.... அது எல்லாம் அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும்....

சரி புக்??? கொண்டு வந்தா.. கொடுத்தா.... வாங்கிகிட்டேன்... இதை சாக்கா வச்சு கொஞ்சம் பிட்டு போடலாம்-னு நினைச்சா, அவ கூட இன்னொரு சுமாரான பொண்ணு... போச்சுடா.... பேச முடியாம போச்சே... நம்ம விதி அவ்வளவு தான்னு நினைச்சு நொந்து கொண்டேன்...

பசங்க-கிட்ட சொன்ன போது விழுந்து விழுந்து சிரிச்சாங்க.... சிரிப்பு என்பது கல்லூரிக்கு உரித்தான ஒன்று ஆச்சே....

எல்லாத்துக்கும் மேல சாயந்திரம் பஸ்-ல வரும் போது... அவனவன் வாழ்கையின் லட்சியம் என்ன-னு சீனியர் ஒன் பை ஒன் கேக்குறாங்க... எல்லாவனும் பில் கேட்ஸ் மாதிரி வரணும்-னு சொல்றான்... (டேய்... எல்லாவனும் பில் கேட்ஸ் ஆனா அவருக்கு என்னடா மதிப்பு???-னு உள்ளுக்குள்ள சிரிச்சுகிட்டேன்...)... இப்போ என்னோட முறை... நான் சொல்றேன்.. அதோ நிக்குது பாருங்க... அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி எங்களுக்கு பொறக்க போற குழந்தையை இதே காலேஜ்-ல படிக்க வச்சு பாக்கணும்-னு சொன்னேன்... அவனவன் ஏதோ நான் உலக மகா காமெடி சொன்ன மாதிரி விழுந்து விழுந்து சிரிச்சாங்க... ஆனா அதை நானும் ரசிச்சேன்....

சரி புக் மேட்டர் சொதப்பல்... நெக்ஸ்ட்....

சரி சாக்லேட் வாங்கி கொடுப்போம்... என்ன-னு சொல்லி வாங்கி கொடுக்க...

பிறந்த நாள்-னு சொல்வதை தவிர வேறு வழி இல்லை...

ஆனா என் வரையில், பிறந்த நாள் கொண்டாடுவது பிடிக்காத ஒன்று.... நம்ம பிறந்த நாளை மத்தவங்க கொண்டாடனும்... நம்மலே ஏன் கொண்டாடனும்-னு எதிர் கேள்வி கேப்பேன்.....

சரி (நமக்கு தேவை என்றால் கொள்கைகளை மாற்றி கொள்வது தானே நவீன கால மனிதத்துவம்) பிறந்த நாள் என்று சொல்லி சாக்லேட் கொடுப்பது தான் சால சிறந்தது-னு ரெடியானேன்...

என்ன சாக்லேட் கொடுக்க-னு சுவத்துல முட்டி மோதி யோசிச்சு... படிக்கிறதுல இப்படி யோசிச்சு இருந்தா நான் வேற மாதிரி மாறி இருப்பேனோ???...

டைரி மில்க் சாக்லேட் 4 வாங்கி கொண்டேன்... காசு???.. அப்பா... டிசிப்ளின் கமிட்டி வச்சு இருக்காங்க.. 50 ரூபா கட்டணும்... கொடுங்க.... உண்மை காரணம் சொல்ல நான் என்ன அரிச்சந்திரன்-க்கு ஒண்ணு விட்ட சித்தப்பா பையனா???...

வாங்கி ஆச்சு... கொடுக்கணும்... பேசணும்... கண்ணாடி முன்னாடி நின்னு ரிகர்சல் பார்த்து கொண்டேன்.... இருந்தாலும் பட படப்பு அடங்கல... குளிச்சு முடிச்சு, இருக்கிறதுல ரொம்ப நல்லா இருந்தா ப்ளூ கலர் கோடு போட்ட சட்டைய இன் பண்ணி கொண்டேன்... பவுடரை வழக்கத்துக்கு மாறாக அதிகம் பூசி கொண்டேன்... பீரோவின் உள் இருந்து சென்ட் போட்டு கொண்டேன்... முடியை நெற்றி தெரியாத வண்ணம் இழுத்து முன் புறம் அமுக்கி கொண்டேன்....

செருப்பை இரு முறை பாலிஷ் போட்டேன்... குனிஞ்சு பார்த்தா செருப்பும் நல்லா தெரியணும்-ல...

காற்றுக்கு முன் முடி பறந்து போகா வண்ணம் ஒரு கைய வச்சு பிடிச்சு கொண்டே இன்னொரு கையால் சைக்கிள் ஓட்டினேன்.... வரும் வழியில்... தெரு நண்பன்... என்னடா அருண் பிறந்த நாளா-னு கேட்ட உடன், எஸ் நம்ம இன்னைக்கு ரொம்ப அழகா தான் இருக்கிறமோ-னு எய்யாடி-னு வடிவேலு புலம்புறதை போல புலம்பி காலேஜ் வந்து சேர்ந்தேன்....

காலேஜ் பஸ்-ல இருந்து இறங்கிய உடன், நடந்து போறவளை கை தட்டி அழைத்து எனக்கு பிறந்த நாள்- என சொல்லி ஒரு வழியா சாக்லேட் எல்லாத்தையும் அவகிட்ட கொடுத்தேன்.... அவ பதிலுக்கு வாழ்த்துக்கள் சொல்லி வாங்கி கொண்டாள்... என்னோட போதாத நேரம் கிளாஸ் காரன் வேற இதை பார்த்துட்டான்.... உடனே பசங்க எல்லாம்.. எங்களுக்கு ஒரு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி கொடுக்காத நாயே... அவளுக்கு மட்டும் அப்படி என்ன???-னு திட்டு மழை.... (காலேஜ் லைப்-ல இது எல்லாம் சகஜமப்பா...)...

அடுத்த வாரம், என்ன பேச...எப்படி பேச-னு தயக்கம்....

அவன் அவன் ஒரே ஒரு வாரத்துல பேசி கரெக்ட் பண்றாங்க.... நமக்கு என்னடா பேசவே இப்படி உதறல் எடுக்குது-னு நினைச்சுகிட்டேன்....

பிள்ளையார் சாமி-னா நமக்கு ரொம்ப இஷ்டம்... அவருகிட்ட சொல்லி பாக்கலாம்-னு அடிக்கடி கோவிலுக்கு போவேன்... சொல்லுவேன்... அவரும் என்கிட்டே முறை இட்ட 18725466879245 நபர் நீ... காலம் வரும் மகனே என்று சொன்ன மாதிரி இருந்ததால் கோவில் பக்கம் போவதையே தவிர்த்தேன்....

சாப்பிட பிடிக்கலை... விளையாட பிடிக்கலை... என்னடா லைப் இது-னு தோணும்....

ஒரு வழியா கடைசியா ஐடியா கிடைச்சது... எங்க தாத்தாவுக்கு சாமி கும்பிட்டாங்க... நெறைய பழங்கள் மிஞ்சி போச்சு..... அதை எல்லாம் எடுத்து கொண்டு... மறு நாளே அவகிட்ட போய் கொடுத்தேன்... சந்தோசமா வாங்கிகிட்டு, அடுத்த வாரம் என்ன கொண்டு வருவீங்க-னு சிரிச்சுகிட்டு கேட்டா... கொஞ்ச நேரம் பேசி இருப்போம்... அவ சப்பாணி தோழி வந்து விட்டா... சரி பார்க்கலாம்-னு சொல்லிட்டு போயிட்டா..

என்னது இது.... இப்படியே போச்சுனா வேற எவனாவது குறுக்கால புகுந்து விடுவானோ-னு பயம் வேற....

கடைசி-ல என்ன தான் ஆச்சு.... காலேஜ் கடைசி நாளில்.... சரி அண்ணா, பத்திரமா போயிட்டு வாங்க-னு அவளே வந்து சொன்னா... நான் அதுக்கு, காது சரியா கேக்கல... கொஞ்சம் இந்த பக்கம் வந்து சொல்லு-னு சொன்னேன்... உடனே சிரிச்சுகிட்டு பத்திரமா போயிட்டு வாங்க-னு சொன்னேன்-னு சொன்னா...
அண்ணன்... எவண்டா இந்த வார்த்தையை கண்டுபிடிச்சவன்-னு கண்டுபிடிச்சு அவனை நாலு அறை விடணும்-னு தோணுச்சு...

சரி நமக்கு-னு ஒண்ணு செட் ஆகும்.... பிள்ளையார் சொன்ன மாதிரி வெயிட் பண்ணலாம்-னு நினைச்சுக்கிட்டேன்... இருந்தாலும், ம்ம்ம்ம்... என்ன எழவோ... நல்லா இருந்தா சரி-னு சோகமா வாழ்த்தி விட்டு வந்துட்டேன்....

அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது.... அவளுக்கு ஏற்கனவே ஒரு பையன் கூட லவ்-னு....
(என்ன கொடுமை சார் இது....)

சுமாரான பொண்ணுங்களை கூட நம்ம பசங்க உஷார் பண்றாங்க... ஸோ காலேஜ் எங்க போனாலும் சரி எல்லா இடமும் புக் ஆகி இருக்கிற மாதிரி தோணுச்சு...

ஸ்கூல் படிக்குற பத்தாவது, பன்னிரண்டாவது பொண்ணுங்களுக்கு நூல் விட்டா என்ன-னு தோணி.... நான் ஸ்கூல் பக்கம் சுத்தியது ஒரு கதை....

சரி..... போதும் சுய புராணம்....

இன்னைக்கு காதலர் தினம்.... சும்மா இதுக்கு எல்லாம் ஒரு நாளா-னு சொல்லி திட்டி, மொக்கைய போடாம காதலில் இருக்கிறவங்க இன்னும் காதலிங்க... காதல் ஜோடி இல்லாதவங்க உங்க காதலியை தேடுங்க... உண்மையா இருங்க.... உங்களுக்கு பிடிச்ச பொண்ணை பார்த்து அவள் கண்கள் பார்த்து பேசுங்க.... நீங்க அவங்க மேல பாசமா இருக்கீங்க-னு தெரிஞ்சா போதும்.... உசுரையும் கொடுப்பாங்க....நம்ம ஊரு பொண்ணுங்க....

அப்படி பொண்ணு கிடைச்சு போச்சுனா சொல்லுங்க.... நானும் அப்படி கிடைச்சா சொல்றேன்...

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது தான் வாழ்க்கை... அந்த உறவு கணவன் மனைவி என்ற உறவின் மூலமாக இருந்தாலும், காதலன் காதலி என்ற அடிப்படையில் தான் மேற் சொன்ன உறவு பலம் ஆகும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்...

மீண்டும்... காதலர் தின வாழ்த்துக்கள்....

என்றும் உங்கள் அருண் பிரசங்கி என்ற அருண் பிரகாஷ்

ஒருவர் கூட இந்த பதிவை படிக்க வில்லையா? அய்யோ... ஒரு பதில் இல்லை... தப்பான article இங்க பதிச்சு விட்டேனா???? விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்....ம்ம்ம்ம்.. ஒகே சரி... வேலை முடிஞ்சாச்சு... நானும் சமைக்க கிளம்புறேன்... நல்லது...

இந்த பதிவை வேறெங்கோ ப்ளாக்கில் படித்த மாதிரி ஞாபகம். :-) புதிதாக ஏதாவது எழுதுங்கள் அருண். ;-)

‍- இமா க்றிஸ்

வாங்க இமா.... ம்ம்ம்ம்...சாப்பாடு எல்லாம் ஆச்சா??? அப்புறம் என்னோட பிளாக்-ல படிச்சு தெரிஞ்சுகிட்டே நம்மளை இப்படி ஓட்டுறீங்களே??? நியாயமா??? :-) :-) (நானும் உங்களை மாதிரி சிரிக்க முயற்சி பண்றேன்... ஹி ஹி ...) ..நான் பிளாக்-ல போடும் போதே இங்க ஒரு காப்பி போட்டு விடுவேன்.... ம்ம்ம்ம்.. சரி இமா சாப்பாடு நீங்க அடுத்தவேளைக்கு ரெடி பண்ணுங்க... அப்புறம் பாக்கலாம்... நல்லது....

ஹாய் சாப்பாட்டு ராமரே, நான் ஹி..ஹி.. என்று சிரிக்க மாட்டேன். வெறும் :-) மட்டும்தான். டீ குடிப்பதில்லை. நல்லது...!! எனக்கும் ஒரு காப்பி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

காப்பி...டீ... ஐயோ கடி தாங்க முடியல இமா... சாப்பாடு ராமனா??? ஏன் சாப்பாட்டு ராவணன்-னு சொல்ல வேண்டியது தானே.... அது இன்னும் பொருத்தமா இருக்குமே... சரி வேலையை பாக்குறேன்... நல்லது...

அருண், நல்லது....:-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்