முட்டை சாண்ட்விச்

தேதி: February 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

இந்த குறிப்பினை செய்து காட்டியவர், கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான <b> செல்வி. விசா </b> அவர்கள். இவர் தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும் சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.

 

ஹம்பேகர் பன் - 2
முட்டை - ஒன்று
வெங்காயப் பவுடர் - சிறிது (விரும்பினால்)
ஐஸ் பேர்க் லெட்டியூஸ் இலை - தேவையான அளவு
மயோனைஸ் - ஒரு மேசைக்கரண்டி


 

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
லெட்டியூஸ் இலையை மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மயோனைஸோடு வெங்காயப் பவுடரை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஹம்பேகர் பன்னை டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஹம்பேகர் பன்னின் அடிப்பாகத்தில் மயோனைஸ் கலவையில் பாதியை பூசிக் கொள்ளவும்.
அதன் மேல் பாதி முட்டையை சீவி, அத்துண்டுகளை பரப்பி வைக்கவும்.
முட்டைத் துண்டுகளின் மேல், மெல்லியதாக நறுக்கி வைத்திருக்கும் லெட்டியூஸ் இலையில் சிறிதை வைக்கவும்.
அதன் மேல் பன்னின் மேல் பகுதியை வைத்து மூடிக் கொள்ளவும். (விரும்பினால் வெங்காயம், தக்காளி சேர்த்துக் கொள்ளவும்). சுவையான முட்டை சாண்ட்விச் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் அக்கா வெங்காய பவுடர் அப்படினா என்ன, அது எப்படி இருக்கும். கடைல எப்படி கேட்கனும்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா