தொடர் விக்கல்!

அன்புத்தோழிகளே!
என் தோழி ஒருவருக்கு, விக்கல் ஏற்பட்டால் தொடர்ந்து 2 நாட்களுக்கு விட்டு விட்டு வந்துகொண்டே இருக்கிறது. இதனால் அவள் மிகவும் சிரமப்படுகிறாள். தண்ணீர் நிறைய குடித்தும்கூட பலன் ஏதும் இல்லை.விக்கல் நிற்க
உங்களுக்கு தெரிந்த வைத்தியத்தினை இங்கு பதிவு செய்தால் என் தோழிக்கு மிகவும் உதவியாக இருக்கும்!
அன்புடன்,
சாய் கீதாலஷ்மி!

ஹாய் கீதா,

நலமா? உங்கள் தோழியை நன்றாக மூச்சை உள் இழுத்து ஒரு 10 or 20 seconds நிறுத்தி பின் மெதுவாக வெளி விடச் சொல்லுங்கள். இப்படியே செய்தால் விக்கல் நின்று விடும்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

உங்கள் ஆலோசனைக்கு ரொம்ப நன்றி. கண்டிப்பாக நீங்கள் சொல்லியதுபோல் என் தோழியிடம் செய்யச்சொல்கிறேன்.
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

தொடர் விக்கலுக்கு மயிலிறகை நெருப்பில் சுட்டு பிசைந்தால் ஒரு வித பொடி கிடைக்கும்.இதனை தேனில் கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ரொம்ப நன்றி ஷாதிகா அக்கா, இங்கு மயிலிறகு கிடைக்காது. முடிந்தால் ஊரில் இருந்து யாராவது வந்தால் எடுத்து வரச்சொல்கிறேன். மீண்டும் நன்றி!

தொடர் விக்கல்க்கு காரணம் வீக்னஸ். சரியா என்னைக்காது சாப்பிடாம இருந்து பாருங்க, விக்கல் வந்துகிட்டே இருக்கும். சர்க்கரை வாயில் வெச்சிக்கங்க. கொஞ்சம் கொஞ்சமா அதன் நீரை விழுங்கினால் விக்கல் நிக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் பக்கத்து வீட்டு 20 வயது பைய்யனுக்கு 4 நாள் தொடர்ந்து விக்கல் வந்து டாக்டர் சொன்ன ஒரே வைத்தியம் ..அதை மறக்கும் படி அவரை வேறெதிலாவது திசை திருப்ப.
அதை யோசித்தால் திரும்ப வந்து விடுமாம்..4 நாள் தூங்காமல் விக்கியிருக்கான்..கொஞ்சம் நிற்பதற்குள் யாராவது விக்கல் நின்றதா என்றால் திரும்ப விக்க தொடங்கி விடுவான்...பிறகு மருத்துவர் திட்டி யாரையும் பார்க்க விடாமல் எங்காவது போக சொன்னார்கள்..எங்கோ தூரமாக கூட்டி சென்று கவனம் திரும்பியதும் நின்றது..அவர் கணவரிடம் இதை சொல்லுங்கள்

வனிதா, தளீகா உங்கள் ஆலோசனையை என் தோழியிடம் கண்டிப்பாக செய்து பார்க்க சொல்கிறேன்.உங்கள் பதிவுகளை பார்க்கும்போது ரொம்ப சந்தொஷமாய் இருக்கு. மறுபடியும் நன்றிப்பா!

மேலும் சில பதிவுகள்